பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 123

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

எண்ணெய்ச் சூரியன்

உவமைக் கவிஞர் சுரதா

பாரிதான் மனித மேகம்;

- பறவைதான் உயிர்வி மானம்;

o மாரிதான் முகிலின் வேர்வை

மெளனந்தான் உதட்டின் போர்வை;

ஏரிதான் வயலின் தாய்ப்பால்;

எரிகின்ற விளக்கே! எண்ணெய்ச்

சூரியன் நீதான்! தீயின்

தொடர்கதைச் சுருக்கம் நீதான்!

சித்திர விளக்கே! உன்றன்

தேகமோ, கன்னார் செய்த பித்தளைப் பள்ளம்.! உன்றன்

பெருமூச்சே புகையாம்! காதல் நித்திரைக் கேற்ற வெள்ளை

நிலவினில் ஆணும் பெண்ணும் : ஒத்திகை பார்ப்பர், நீயோ

உன்னடி நிழலைப் பார்ப்பாய்!

o எரிகின்றாய் அரும்பு போலே;

எனினும்நீ எரிவ தற்குத்

- திரிவேண்டும்; எண்ணெய் வேண்டும்; தீக்குச்சி வேண்டும் - பெண்ணின்

வரிவிரல் உதவி வேண்டும்!

- மழைநீரோ, தென்றல் காற்றோ

ஒருகரம் உன்மேற் பட்டால்

உன்னுயிர் உடனே போகும்.