பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சிறந்த சொற்பொழிவுகள்

கம்பர், அம்பிகாபதி, தமிழ் தண்டி, வில்லிபுத்துரார் முதலான வித்துவசிகாமணிகள் கிரந்தங்களை இயற்றிப் புகழ் பெற்று வந்தாலும், பராக்கிரம பாண்டியன் காலத்தில் மகம்மதியர்கள் பாண்டிய நாட்டில் பிரவேசித்துப் பட்டணத்தைப் பாழக்கி நூல்களை நாசமாக்கி விட்டார்கள். அதனால் அனேக அருமையான நூல்கள் மறைந்துவிடவே, அமிழ்தினுஞ் சுவையுடைய தமிழ்ப் பாஷையின் பெருமை குலைந்து, அது ஸம்ஸ்கிருதாதி மற்றப் பாஷைகளில் சிறந்த தல்ல வென்று சொல்லவும், அதில் ஆத்மா முதலான பதங்களுக்கு வார்த்தைக ளுண்டோ வென்று சந்தேகிக்கும் படியான நிலைமைக்கும் வந்துவிட்டது.

அந்தோ பாருங்கள்! தமிழ் என்னும் பதத்திற்கு இனிமை என்றும், அதாவது இது எல்லா பாஷைகளை விட இனிமையானதாகவும் சங்கிரகமான பாஷை என்றும், எ-ஓ என்றாதி சில எழுத்துக்களை ஸம்ஸ்கிருதாந்திராதி பாஷைகளுக்குத் தானங் கொடுத்த பாஷை என்றும், லெளகீக வைதீக வாகட ஜோஸ்ய முதலான பலவித விஷயங்களைத் தக்கபடி எழுதிக் காட்டப் பொருந்திய பாஷை என்றும், ஸ்மஸ்கிருத பாஷையில் இல்லாத மிளகாய் முதலான புராதன பதங்களையும் எழுவாய் பயனிலைகள் இன்னின்ன விடத்திலிருக்க வேண்டுமென்ற விதிநிலை வாக்கியாலங்காரத்தையும் வடமொழியில் இல்லாத வாகடம், ஜோஸ்ய முதலான சாஸ்திரங்களை ஏராளமாக உடைய ஒர் சிறந்த பாஷை என்றும், பல பண்டிதர்களால் கேட்டிருக்கின்றனம்.

மேலும், தோற்பையுள் நின்று தொழிலறச் செய்துட்டுங் கூத்தன் புறப்பட்டக் கால்” என்னும் வாக்கியத்தில் கண்ட கூத்தன் என்பதும், "உடல் பொருள் ஆவியெல்லா முன் வசமாக்கிக் கொண்டு” என்னும் வாக்கியத்தில் காணும் ஆவி என்னும் பதமும், இப்படியே சமயோசிதமாக அனேக பதங்கள் ஆத்மாவைக் குறிக்கிறதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

இம்மட்டோ சங்கமேறிய அனேக நூல்களில் பாஷைக்கிருக்க வேண்டிய சகல அங்கங்களும் நிறைந்திருந்தன வென்பதற்கு இப்போது கும்பகோணம் பண்டிதர் ரீலழரீ சாமிநாதய்யரவர்களுடைய பெரு முயற்சிகளினால் அத்தி பூத்தது போல அபூர்வமாகக் கிடைக்கப்பெற்று வெளிக்கு வரும் சில புராதன நூல்களால் பிரத்தியகூடிமாகின்றன.

மகமதியர் இந்நாட்டில் குடிகொள்ளவே, தமிழ் மாது தழைத்தோங்க வகையற்றுத் தவிக்க, பாண்டிய ராஜ்ஜியம் பாழ்த்துப் போக நேரிடுகையில், விசுவநாத நாயடு - திருமலை நாயடு முதலான இந்து