பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 27

மதஸ்தர்களுடைய சமஸ்தானம் ம்துரையில் ஸ்தாபிக்கப்பட்டாலும், அந்த நாயடுமார்கள் அப்போது அடிக்கடி அவர்களைத் தாக்க வரும் அயலரசர்களிடம் போர் புரிந்து ஒட்டவும், மிச்சமாகும் காசையும் காலத்தையும் கோயில் கோபுர மண்டபம் மாளிகைகளைக் கட்டுவதிலும் போக்கி வந்தார்களே யொழிய அந்நிய மதஸ்தரான சமணர்களுக்கிருந்த அபிமானமாவது தமிழினிடம் காட்டி வந்ததாகச் சொல்லும் சரித்திரம் அகப்படவில்லை.

பிறகு, நாயடு ஸ்மஸ்தானமும் மகமதியர் ஸ்மஸ்தானமு மாறி ஆங்கிலேய சமஸ்தானம் ஸ்தாபிக்கப்பட, அவர்கள் ஆங்கிலேய பாஷையை அதிகமாகப் பரப்ப ஆரம்பித்தார்கள். ஆங்கிலேய பாஷையைக் கற்பவருக்குக் 'கணபதி பூஜை கைமேல் பலன்” என்னும் பழமொழியின்படி முதலில் உணவுக்கும் உடுப்புக்கும் உல்லாசத்துக்கும் வேண்டிய உத்தியோகம் கிடைத்து வருவதால், ஏற்கெனவே ஏழைகளான சுதேசிகள் வடமொழியை வாட விட்டும் தென்மொழியைத் தவிக்கவிட்டும் எல்லா ஜாதியாரும் எல்லா மதஸ்தரும் ஆங்கிலேய பாஷையையே ஆபரணமாகக் கொண்டு ஆண்பெண் மக்களனைவரும் அநுஷ்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கொரு வேடிக்கையான சம்பவத்தைக் கேளுங்கள் !

இந்தப் பாடசாலையைக் கூட்டும் ஜாடுமாலிப் பெண்ணும் நேற்று ஒருவரைப் பார்த்து, 'ஐயா ! காப்பி சாப்பிடுகிற டைமாச்சுதே, மீட்டிங்குக்குப் போகவில்லையா?” என்றாள். இதில் எத்தனை ஆங்கிலேய பதங்களும் எத்தனைத் தமிழ்ப் பதங்களும் கலந்திருக்கின்றன பாருங்கள்! ஜாடுமாலி பாஷையே இப்படியானால் இனி தலைமக்கள் பாஷை எப்படியிருக்கும்? இப்படிச் சொல்லியதனால் ஆங்கிலேய பாஷையை இகழ்ந்து பேசுவதாகக் கொள்ளவேண்டாம்.

ஆங்கிலேய பாஷையோ இப்பிரபஞ்சத்தில் பல பக்கங்களிலும் பிரபலமாக இருக்கும் ஒரு பெரிய பாஷை. இப்போது அந்தப் பாஷையில் எழுதியிருக்கும் சரித்திரங்கள், சாஸ்திரங்கள், தத்துவங்கள் அநந்தம். அவைகள் ஒரு புருஷ ஆயுளில் படிக்க முடியா. அது அப்படி ஆனதற்கு ஆங்கிலேயருடைய தேசாபிமானமும் பாஷாபிமானமுமே காரணமாகும்.

நாமோ நமது தாயாகிய தமிழை அசட்டை செய்துவிடவே, ஆங்கிலேயரும் அப்பாஷை விருத்தியில் அசிரத்தையாகிவிட்டார்கள். திருஷ்டாந்தமாக, இப்போது பரீகூைடிகளுக்குத் தயார் செய்யும் கேள்விப் பத்திரிகைகளில் ஆங்கிலேய பாஷையில் எத்தனைப் பத்திரிகைகள்