பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சிறந்த சொற்பொழிவுகள்

தயாராகின்றன பாருங்கள்! மேலும், ஆங்கிலேய பாஷையைப் போதிக்கும் ஆங்கிலேய வாத்தியாருடைய சம்பளமென்ன? தமிழைப் போதிக்கும் பண்டிதர்களின் சம்பளமென்ன !

கோயமுத்தூர் காலேஜ் கமிட்டியில் நான் ஒரு மெம்பர். நான் மெம் பரான பிறகு நானறிந்த ஆங்கிலேய உபாத்தியாயர்கள் அக்கல்லூரியில் மாறினார்கள். அப்படி மாறி மாறி வந்தவர்களுக்கு மாதம் 1-க்கு 200, 300, 400. 500 ரூபாய் சம்பளமும், அந்தக் கலாசாலையில் தமிழைப் போதிக்கும் முனிவிகளுக்கு 30, 35 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைப்பதில்லை. . -

ஆகவே இந்தச் சொற்ப சம்பளத்திலிருக்கும் உபாத்தியாயருடைய வார்த்தைகளை அநேக வித்தியார்த்திகள் சட்டை செய்யாமலும் (டெக்ஸ்டு புக்) பாட புத்தகங்களை வாங்கி வாசிக்காமலும், மற்றப்படி மொழிபெயர்ப்பு முதலான விஷயங்களில் கேட்கப்படும் Յ: 6մ Լ! {Ո II հtT கேள்விகளினால் மார்க்குகளைப் பெற்றுப் பரிகூைடியில் தேறி வீட்டிலும் வெளியிலும் பெரும்பாலும் ஆங்கிலேய பதங்களை வழங்கி வர, அவைகளைக் கேட்கும் விட்டுப் பெண்களும், அவர்களைப் பார்த்து ஜாடுமாலி முதலானவர்களும் அவைகளைப் போல் வழக்கமாக்கிக் கொள்ளுகிறார்கள்.

இத்தியாதி கஷ்டங்களைக் கருதியே "அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக் கல்வி அதிகமென்று கற்றுவிட்டோம் அறிவில்லாமல்” என்று இப்போது நமது பாண்டித்துரை அவர்கள் சொன்ன பாட்டைப் புலவர் ஒருவர் பாட நேர்ந்தது.

'மூச்சுவிடு முன்னே முந்நூறும் நானூறும் ஆச்சுதென்றால் ஆயிரம்பாட் டாகாதோ

இம்மென்னு முன்னே இருநூறு முந்நூறு அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதா"

என்று பாடிய காளமேகப் புலவரைப் போன்ற கவிகளெல்லாம் மறைந்துவிட்டனர். - - -

இடையில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், இராமலிங்கம் பிள்ளையும், ஆறுமுக நாவலரும் தோன்றித் தமிழ்ப் பாஷையை விருத்தியாக்கப் பிரயத்தனப் பட்டாலும், இவர்களில் ஒருவர் பெரும்பாலும் புராணங்களைப் பாடிமுடிப்பதிலும், ஒருவர் வைதிகமான பாடல்களைப் பாடுவதிலும், ஒருவர் வைதீக ஆக மாதி கிரந்தங்களை வழுவறத் திருத்தி