பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சிறந்த சொற்பொழிவுகள்

3. நாடகம்

எஸ்.எஸ். அருணகிரிநாத முதலியார் (1920)

நாடகத்திற் சிறந்த நாடு நாகரிகத்திற் சிறக்கும்’ என்று ஆங்கிலேயர் கூறுவர். அது முற்றும் உண்மையே. ஆதலால், நாடகத்தைப் பற்றி நாம் விசாரிப்பதற்கு முன் நாகரிகம் என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும். உடையிலும் நடையிலுமே நாகரிகம் அடங்கியிருப்பதாக அநேகர் நினைக்கிறார்கள். அது தவறு. உடை நடைகளையே நாகரிகம் என்று கொண்டால், வெகு சீக்கிரத்தில் நம்முடைய நாகரிக மெல்லாம் அநாகரிகமாய்விடும். உண்மையான நாகரிகம் உள்ளத்தைப் பற்றி இருக்க வேண்டும்.

பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்'

என்னும் திருக்குறளில், நாகரிகம் என்பதற்குக் கண்ணோட்டம் என்று பொருள் கூறுகிறார் பரிமேலழகர். கண்ணோட்டம் என்பது தாட்சண்யம். தாட்சண்யத்துக்கு அடிப்படை அன்பு. மனிதர்கள் ஒருவரோடொருவர் அன்பு பாராட்டி வாழ்வதே நாகரிகத்தின் பயன். அன்புடைய மனமே நாகரிகத்துக்கு அடையாளம். அந்த அடையாளத்துக்கு அடையாளங்க ளாகும் நடையுடை முதலிய வெளித்தோற்றங்கள்.

త్రి 5 డిమి, ஒரு நாடு நாகரிகத்திற் சிறக்கும் என்பதாவது, அந்நாட்டினர் அன்புடைய சிந்தையராவர் என்பதேயாம். அன்பாவது, மனம் திருந்தி நுட்பமும் மென்மையும் அடைவதாகும். அதாவது, மனம் பக்குவமடைவது. ஆதலால் நாடகத்திற் சிறந்த நாடு நாகரிகத்திற் சிறக்கும் என்பதன் கருத்து, 'நாடகத்தால் மனம் பக்குவமடையும்' என்பதே யாகும். -

நல்லது நாடகம் எவ்வகையில் நமது மனத்தைப் பக்குவப் படுத்துகிறதென்று பார்ப்போம்.