பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எஸ். அருணகிரிநாத முதலியார் 35

அறிவிற் சிறந்த பெரியவர்கள் சிற்பம், சித்திரம், கவி, நாடகம், சங்கீதம் இவைகளை உயர்ந்த கலைகளென வகுத்திருக்கிறார்கள். இந்த உயர்ந்த கலைகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்.

கண்ணுக்கு இன்பம் ஊட்டுபவை ஒரு பிரிவு. காதுக்கு இன்பம் ஊட்டுபவை மற்றொரு பிரிவு, சிற்பம், சித்திரம் என்பவை முன்னதிலும், கவி, சங்கீதம் என்பவை பின்னதிலும் அடங்கும். இந்த இரண்டு பிரிவுகளும் கூடி அமைந்ததாகும் நாடகம் என்பது. ஆகவே, மற்றக் கலைகளால் உண்டாகும் இன்பத்தைவிட நாடகத்தால் உண்டாகும் இன்பம் அதிகமென்று சொல்லலாம்.

மற்றக் கலைகளுக்கும் நாட்கத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றியும், ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியும் விவரிப்ப தென்றால் விஷயம் விரியும். ஆதலால், நாடகமாவது இன்னது என்ற அளவில் நம்முடைய விஷயத்தைச் சுருக்கிக் கொள்ளுவோம்.

ஒரு பெரிய உருவத்தை அதன் அங்க அடையாளங்களில் கொஞ்சமும் வித்தியாசமில்லாமல் ஒரு சிறிய கண்ணாடி காட்டுவது போல உலக இயற்கையை மாறுபடாமல் சிற்றளவில் எடுத்துக் காட்டுவது நாடகமாகும். அதாவது மனித வாழ்க்கையின் பிரதிபிம்பத்தை நாடகமென்னலாம். - - * . . .

வாழ்க்கை

- இன்ப துன்பம் முதலிய உணர்ச்சிகளின் சேர்க்கையே வாழ்க்கையாகும். ஒருவனுக்கு உயிர் இருந்தும் யாதொரு உணர்ச்சியுமின்றி அவன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உறங்கிக் கிடப்பதாக வைத்துக்கொள்ளுவோம். அது வாழ்க்கையாகுமா? ஆகாது. அவ்வாறே ஒருவன் இன்பம் துன்பம் ஒன்றையும் உணராது இயந்திரத்திற்கு விறகிடுவது போல, தன் வயிற்றுக்கு உணவிட்டு இயந்திரம் வேலை செய்வதுபோல் ஏதோ ஒரு வேலையை யாதொரு உணர்ச்சியுமில்லாமல் செய்துகொண்டு வந்தால், அவனுடைய வாழ்க்கையும் வாழ்க்கையாகாது. அவன் ஒரு இயந்திரமே யாவான்.

மிருகங்களுக்குக் கூட உணர்ச்சி இல்லாமல் இல்லை. மிருகங்களைவிட உயர்ந்த உணர்ச்சிகளை அடைவதால்தான் மனிதர்கள்