பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சிறந்த சொற்பொழிவுகள்

புரிந்தனர் என்னும் உண்மைக் கூற்று உலகறிந்ததேயாம். இடைச் சங்கம் நடந்த காலத்தே அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் அக்கடவுளர் அருள் பெற்றுத் தமிழாராய்ந்தனர் என்பதும் தமிழ்மக்கள் அறிந்த உண்மையாம். கடைச் சங்கம் நிகழ்ந்த காலத்தே நல்லிசைப் புலவராய நக்கீரனார், நெற்றிக்கண் காட்டினுங் குற்றங் குற்றமே என்று நவின்று வாதாடுமாறு சுந்தரேசர் வந்து நின்றனர் என்னும் வரலாற்றை, கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்னும் செந்தமிழ்ப் பாடலை அன்புறக் கற்றோர் ஐயமுறுவரோ! மற்றும் பொய்யடிமை இல்லாத புலவர்பெருமக்கள் விளங்கிய அச் சங்க காலத்தே தெய்வத் திருவருளால் நடந்த அற்புதச் செயல்களை அளவிட்டுக் கூறுதல் எளிமையாமோ?

அன்புடையீர், இது நிற்க, பிற்காலத்தே திருவருட் செயலாய் சைவசமயாசாரிய மூர்த்திகளும் உண்மை நாயன்மார்களும், வைணவப் பெரியாரும்.இவ்வுலகில் அவதரித்தருளி நம்மனோரெல்லாம் உண்மை கண்டு உய்யுமாறு அற்புதச் செயல்கள் பற்பல ஆங்காங்கே நிகழ்த்தி அருள் புரிந்தனர். அப்பெரியார் அனைவருக்கும் தெய்வத் திருவருள் கைமேற் கண்ட கருந்தனமாய், பண்பால் தோன்றிய பழம் பொருளாய் விளங்கிய உண்மைகளை உணராதார் யாவர்? - ... "

பின்னர், காதற்ற ஆசியும் வாராது காணுங் கடைவழிக்கே என்னும் உறுதியுரையைக் கண்டதும், மலைபோலுஞ் செல்வமும் நிலையாதென்றுணர்ந்து முற்றத் துறந்த பட்டினத்தடிகளும், முருகப் பெருமான் திருவடி ஞானத்தை ஒருவாதடைந்த அருணகிரிநாதரும், பவஞானம் நீங்கித் தவராஜ சிங்கமாய் விளங்கிய தாயுமான சுவாமிகளும் ஆகிய மெய்யன் பர்கள் தோன்றி நம் மனோரை யெல்லாம் உய்வித்தருளினர். - - -

ஆன்மநேய முற்ற அன்பர்களே. இதுகாறும் யாம் கூறிவந்த ஆன்றோர் அனைவரும் அவ்வப்போது இப்பூவுலகில் தோன்றி, தெய்வத் திருவருள் கைவரப் பெற்று, ஆங்காங்கே அற்புதங்கள் நிகழ்த்தி உண்மைப் பொருளை நம்மனோர்க்கு உணர்த்தித் திகழ்ந்தனர் என்பதை அவர்தம் தெய்வத் திருவாக்கே தெள்ளிதின் விளக்குகின்றன; அன்றியும், அன்னார் திருவவதாரம் செய்த திருப்பதிகளும், அற்புதங்கள் நிகழ்த்திய நற்பதிகளும் இன்றும் நின்று நிலவுகின்றனவன்றோ ! இம்மட்டோ, ஆங்காங்கே காணும் கற்சிலைகளும் கல்வெட்டுக்களும் சாயாது நின்று சான்று பகர்கின்றன. இன்னும் என்னதான் வேண்டும்! இவையனைத்துங் காலத்தாற் கண்ட கடவுட் செயல்களே என்பதை மறுத்துக்கூற எவரால் இயலும்? ஒருவராலும் இயலாதன்றே! -

இனி, நந்தம் திருவருட், பிரகாச வள்ளலாராய சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் அவதாரஞ் செய்து, நம்மனோர்க்கு அறிவுறுத்திய