பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சிறந்த சொற்பொழிவுகள்

தெள்ளத் தெளிந்த உள்ளன்புடையீர், நந்தம் வள்ளற் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அருட்பாக்களின் மாண்பைப் பற்றி ஒரு சிறிது கூறுவோம்;

திருவருட் பாடல்களோ பல்லாயிரமாம், அவற்றின் பண்போ பாலினும் இனிப்பது, தேனினும் தித்திப்பது, உள்ளத்தை உருக்குவது, கள்ளத்தைக் கருக்குவது; பவத்தைய் போக்குவது, அவத்தை நீக்குவது, இன்பத்தை ஊட்டுவது, துன்பத்தை வீட்டுவது, வீட்டு நெறியைக் காட்டுவது. இத்தகைய இன்னிசைப்பாக்களை நாம் அடையப் பெற்றது நந்தம் அருந்தவப் பயனேயன்றோ?

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்’

என்னும் திருவாக்கிற்குத் திருவருட்பா தக்க இலக்கியம் ஆகுமன்றே.

நமது வள்ளலார் தம் கருத்துக்களையும், அனுபவங்களையும் உரை நடையிலும் செய்யுள் நடையிலும் எழுதி உலகினர்க்குப் பரக்கக் காட்டி விளக்கியிருக்கின்றனர். அன்னார் தம் விருப்பத்தைக் கூறும் செய்யுட்களில் ஒன்றை ஈண்டு எடுத்துரைப்போம்.

அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாநான் அன்புசெயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கனும்நான் சென்றே

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலைமேற் சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்

தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

இவ்வாறே தம் விருப்பத்தை இன்னும் பல பாக்களினால் வெளியிடுகின்றனர்.

வள்ளலார் அகவொழுக்கம் புறவொழுக்கங்களை அன்புடன் உணர்த்தி, அகமார்க்கம் புறமார்க்கம் என்னும் இரு மார்க்கங்களையும் வகுத்தனர். இவையனைத்தினும் சீவகாருண்ய ஒழுக்கமே சிறந்த ஒழுக்கம் என்று திருவாய் மலர்ந்து செய்து காட்டினர். உடற்றுய்மை உண்டித்துய்மை ஒழுக்கத்தூய்மை முதலியவற்றை உரை நடையில் எழுதி உபகரித்தருளினர். ஆன்மநேய ககமார்க்கத்தை அருட்யாக்களினால் அருளிச் செய்தனர்.