பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். டி. சுப்பிரமணிய முதலியார் 51

சித்த வைத்திய முறையானது சிறப்படைய மாட்டாது. ஆதலால், கல்லூரியை வைப்பதற்கு இப்பொழுதே ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சித்தப்பாட புத்தகக் கழகம்

கல்லூரிக்கு முதலாவது வேண்டியது, ஆசிரியர்களும் பாடப் புத்தகங்களுமாம். பரிபாஷை நிறைந்து கிடக்கிற சித்த நூல்கள் ஏராளமாக நாடு முழுமையும் சிதறிக்கிடக்கின்றன. அவைகளை ஒழுங்குப் படுத்தி எளிய நடையில் பாடப் புத்தகங்கள் எழுதவேண்டும். சித்த பாடப் புத்தகக் கழகத்தை அமைத்து வேண்டிய பாடப் புத்தகங்களை எழுதி முடிக்க வேண்டும்மென்று இங்கு கூடியிருக்கிற சித்த வைத்தியப் புலவர்களை நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சித்த மருத்துவ மன்றம்

சித்த மருத்துவ மன்றம் என்கிற பெயருள்ள ஒரு சபையாரை அமைக்க வேண்டும். இதில் சித்த வைத்தியத்தில் திறமையுள்ளவர் களையும் ஆங்கில வைத்தியர்களாயிருந்து பென்ஷன் வாங்கிக்கொண்டு சித்த வைத்தியத்தில் அன்புடையவராயிருக்கிறவர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். சித்த வைத்தியத்தில் திறமையும், நல்ல மருந்துகளும் உடையவர்களை இந்த மருத்துவ மன்றத்தார், சபையின் சொந்தச் செலவில் வரவழைத்து அவர்களுடைய மருந்துகளைச் சோதனை செய்து நோயாளிகளுக்குக் கொடுத்துப் பார்த்து நல்ல குணங்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களுக்கு இந்த மருத்துவ மன்றத்தின் மூலமாக நற்சாட்சிகளும் பல வகையான ஆதரவுகளும் செய்யப்படும். .

சித்த மருந்து ஆராய்ச்சி சாலை

சித்த மருந்துகளில் நூற்றுக்கணக்கான அருமையான மருந்து முறைகள் இருக்கின்றன, போதுமான பொருளுதவி இருந்தால், திறமையுள்ள அறிவாளிகளை வைத்து மருந்துகளைத் தேர்ந்தெடுத்துக் கையாளலாம். மருத்துவ, மன்றத்தாருடைய ஆளுகையில் சித்த மருந்து ஆராய்ச்சி சாலையை வைத்து நூற்றுக்கணக்கான முருந்துகளைச் செய்து முடித்துச் சோதனை பார்த்து வரையறுத்துப் பயமில்லாமல் எல்லா வைத்தியர்களும் கையாளும்படி செய்து, உலகத்தாருக்கும் சித்த வைத்தியர்களுக்கும் உதவி செய்யலாம். இதனால் வைத்தியர்கள் மருந்து செய்யும் வேலையும், பச்சிலை தேடும் கஷ்டங்களும் புடம் போட்டு வருந்தும் துன்பங்களும் ஒழியுமல்லவா? .