பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சிறந்த சொற்பொழிவுகள்

சித்த வைத்தியர்களும் இங்கிலீஷ் வைத்தியர்களைப் போல, சித்த மருந்துகளை நினைத்த சமயத்தில் மருந்துக் கடைகளில் வாங்கி உடனே கையாளலாமல்லவா? ஆகையால் மருந்து ஆராய்ச்சி சாலையும்

சீக்கிரமாக அமைக்க வேண்டும்.

சித்த மருந்து செய்முறை நூல்

சித்த மருந்துகளை முறைப்படி செய்வதற்கு சித்த மருந்து செய்முறை நூல் ஒன்று அவசியம் வேண்டும். இந்தப் புத்தகம்தான் சித்த வைத்தியத்திற்கு அடிப்படையானது. முதன்மையானது. உயிர் நிலையாயுள்ளது. இந்த மகாநாட்டிலே அந்தப் புத்தகத்தை எழுதி முடிப்பது அவசியமாகும். இங்கு வந்திருக்கிற மகான்களும், சித்த வைத்திய ரத்தினங்களும் கூடி ஒற்றுமையுடன் ஆலோசனை செய்து இதை எழுதி முடிப்பீர்கள் என்று நம்புகிறேன். -

சித்த வைத்திய சாலை

மேலே சொல்லிய காரியங்களெல்லாம் சீக்கிரமாக முடிவு பெற்றால், சித்த வைத்திய ஆஸ்பத்திரிகளை நமது நாடு முழுவதிலும் வைக்கலாம். இங்கிலிஷ் வைத்திய ஆஸ்பத்திரியில் ஆப்ரேஷன் (அறுவைவைத்தியம்) பிரசவ வைத்தியங்கள் இப்பொழுது மிக்க திறமையுடன் நடத்தப்படுகின்றது. ஆகையால் நாம் இப்பொழுது தீராத வியாதிகள் (Incurable Diseases) என்று சொல்லப்படுகிற வியாதிகளைக் குணப்படுத்த வேண்டும். அப்படிக் குணப்படுத்தி, சித்த வைத்தியர்களுக்குப் புகழ் உண்டாகும்படி செய்யவேண்டும்.

மேற்கண்டபடியெல்லாம் செய்து, சித்த வைத்தியமும் நமது வைத்தியர்களும் முன்னேற்றமடைய வேண்டுமானால், செல்வமுள்ள மக்களுடைய உதவி வேண்டும். அரசாங்கத்தாருடைய ஆதரவு வேண்டும். இதற்குப் பாடுபட்டு உழைப்பதற்குத் திறமையுள்ள பொறுப்பாளிகள் வேண்டும். நமது சித்த வைத்தியர்களுக்குள் ஒற்றுமை வேண்டும்.

ஆங்கில வைத்தியர்களுள் ஒருவரை யொருவர் புகழ்ந்து ஒற்றுமையாயிருந்து பணம் சம்பாதித்துப் பெருமையடைந்திருக்கிறார்கள். அதைப்போல் உங்களிடத்தில் ஒற்றுமை இருக்கிறதா என்று கேட்கிறேன். நீங்கள் ஒருவரை யொருவர் புகழ்ந்து பேசுகிறீர்களா என்ற கேட்கிறேன். சித்த வைத்தியத்தை உலகத்தார் புகழும்படி செய்வதற்கு நீங்கள்