பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ. உ. சிதம்பரம்பிள்ளை 6 :

தொழிற் கல்வி

நமது கலாசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க வேண்டும். பணமுள்ளவர்கள் தேசசரித்திரம், பூகோள சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் முதலியவைகளில் தேர்ச்சி பெறுதற்கு வேண்டிய கல்வியைக் கற்கலாம். சாதாரண மாணவர்கள் எல்லோரும் நன்கு எழுதவும், பேசவும், அவசியமானால் உபந்யாசம் செய்யவும் வேண்டிய கல்வியைக் கற்பதோடு, தொழிற் கல்வியையும் கற்க வேண்டும். தந்தி வாசிக்கும் அளவு ஆங்கிலமும் கற்றுக்கொள்ள விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மாணவர்கட்குப் போதிக்க வேண்டும்.

நன்செய், புன்செய், தோட்டம் ஆகியவற்றில் மாணவ மாணவிகளுக்குப் பயிற்சியளித்தல் அவசியமாகும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்துச் செய்தல் அவசியமாகும். ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியுடைவர்களா என்று பார்க்கின், இல்லை. ஏன்? அவர்கட்குக் கல்வி இல்லாமையே. எனவே பெண்கட்குக் கல்வி கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

புஞ்சை, நஞ்சைகளில் வேலை செய்வதற்குக் கூட கல்வி அவசியமாவெனக் கேட்கலாம். இருபது வயதுவரை வெயிலில் நின்று வேலை செய்யாத பழக்கத்தால், இருபது வயதுக்கு மேல் நன்செய், புன்செய் ஆகியவற்றில் வேலை செய்தல் கஷ்டமாக இருக்கின்றது. எனவே, சிறு வயதிலேயே அப்பயிற்சியை அளித்தல் வேண்டும்.

நான் ஜெயிலில் இருக்கும் பொழுது மீண்டும் வக்கீல் தொழில் செய்வதில்லையென்று சத்தியமும் செய்து கொள்வதுண்டு. ஆனால் வெளியில் வந்து பத்திரிகை ஆபீசில் உதவி ஆசிரியனாக இருந்தேன். நெய் வியாபாரம் செய்தேன். ஆனால் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

எனக்கு நிலங்கள் உண்டு. எனினும், சிறு போழ்தில் வெயிலில் வேலை செய்து பழக்கமின்மையால், விவசாயம் செய்து ஜீவிக்க முடியவில்லை. என் மனைவி மக்களும் அவ்வாறே இருக்கின்றார்கள். என் செய்வது!

இனி, கலாசாலைகளில் ஒருமணி நேரம் தொழிற் கல்வியும் கற்பித்தல் வேண்டும். கைத்தொழில், விவசாயம் ஆகியவற்றைக் கட்டாயப் பாடமாக வைத்தல் அவசியமாகும். -