பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67, நாயனார் 71

தவிர இரண்டாவது மகாநாட்டையும் கூட்டி வைத்த அருப்புக்கேட்டைப் பெரியோர்களுக்குப் பெரிதும் நாம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். அருப்புக் கோட்டை நண்பர்களின் விடாமுயற்சியாலும், தீவிர உழைப்பாலுந்தான் இந்த மகாநாடு கூடவும் நாம் இங்கு குழுமிப் பரஸ்பர சகோதரத்துவத்தைக் காட்டவும் இடமேற்பட்டதெனச் சொல்லுவது மிகையாகாது.

நமது முதலாவது மகாநாடு கூடிய பிறகு நம்மை விட்டுப் பிரிந்த அரும் பெரும் தேசத் தலைவர்களின் நினைவு முன் எழுகின்றது. தேசச் சேவை செய்ய உடல், பொருள், ஆவி யாவும் தத்தஞ் செய்த பாஞ்சால சிங்கம் எனப் புகழ்பெற்ற லாலாஜியை இழந்தோம். சமூக ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டு உழைத்து வந்த உத்தமனாம் பனகல் அரசரைப் பிரிந்தோம். இவர்களது மரணம் ஆற்றொனாத் துயரை நமக்கு விளைவிக்கின்றது. இவர்களது பருவுடல்கள் மறைந்தாலும், நுண்ணுடல் நமக்கு ஊக்கமூட்டி வருகின்றன. இவர்கள் காட்டிய வழி நின்று தேச சமூகச் சேவை செய்து முன்னேற்ற ம1ை வதே இவர்கட்கு நாம் அமைக்கும் நினைவுக் குறியாகும்.

கல்வி

நம் நாடு விடுதலை பெற்றுச் சுகவாழ்வடைய, நாட்டிலுள்ள பல சமூகங்களும் முன்னேற்றமடைய வேண்டும். முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விருப்பது கல்வி. கல்வியற்ற சமூகம் கண்ணிழந்தமை யொக்கும். ஆகையால் கல்வியைப் பரவச் செய்ய தீவிரமாய் முயற்சிக்க வேண்டும். . . . . . . -

நம்மவர்களில் பெரும்பான்மையோரும் எழுத்து வாசனை யறியாதவர்களாகவே இருக்கின்றனர். கையெழுத்தை மாத்திரம் போடத் தெரியும் என்ற நிலைமையில் படித்தவர்கள் எத்தனைபேர் மழைக்கேனும் பள்ளிக்கூடங்களில் ஒதுங்காதார் எத்தனை பேர்! இந்தப் பரிதாபகரமான நிலைமையை மாற்ற ஊக்கமாய் வேலை செய்ய வேண்டும்.

சமூகத்தில் ஒவ்வொருவரும் ஆரம்பக் கல்வியாவது கற்றிருக்க வேண்டும். வறுமையினாலும் மற்றும் ஏற்படுகிற கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் கற்பிக்க வேண்டும். எவ்வளவோ அர்த்தமற்ற அனாசாரங்களுக்கு இடையில் உண்டான கண்மூடி வழக்கங்களுக்கும். குருட்டு நம்பிக்கைகளுக்கும் செலவு. செய்யும் பன்னத்தைக் கொண்டு கல்வியைப் புகட்டலாம். - ... ' . . . . . . . . .