பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சிறந்த சொற்பொழிவுகள்

9. சாலியர் மகாஜன சங்க 2-வது மாநாடு

திரு. எ. நாயனாரின் தலைமைப் பேருரை (8, 7. 1929)

(அருப்புக் கோட்டை யில் ஜூலை 8ஆம் தேதி கூடிய சாலியர் மகாஜனக் கூட்ட இரண்டாம் மகாநாட்டின் தலைவர் திரு. எ. நாயனார் அவர்கள் பி.ஏ.,பி.எல்., நிகழ்த்திய உரை வருமாறு.) -

இந்த மகாநாடு சிறக்கப் பெருங் கருணையுடன் இங்குக் குழுமியிருக்கின்ற பெரியோர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். சிறுவனாம் என்னைத் தலைவராக நியமித்துக் கெளரவப் படுத்திய சாலியர் சங்க நிர்வாகிகளுக்கும், வரவேற்புக் கழகத்தார்களுக்கும் என் மனமார்ந்த வந்தனம். அன்பர்கள் பணிக்க, ஏற்றுக்கொண்ட வேலையானது இனிது முடிய உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். -

நாம் மிகவும் நெருக்கடியான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். தேச முழுவதும் புத்துயிர் பெற்று வருகிறது. சமய, சமூக, அரசியல்' துறைகளில் நாளுக்கு நாள் மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எங்கு பார்க்கினும் சுதந்தர தாகம் கொழுந்துவிட்டு எரிகின்றது. நமது சமூக முன்னேற்றத்திற்கான முயற்சிகள் எங்கும் நடக்கின்றன. சமூக மகாநாடுகள் கூடுவதையும் முன்னேற்றத்துக்கு இன்றியமையாததான தீர்மானங்கள் நிறைவேறுகிறதையும் என்றும் பார்த்து வருகிறோம். இவ்வித நிலைமையில் நம் குறைகளை ஆராய்ந்து நமது முன்னேற்றத்துக்கான வழிகளைக் கலந்தாலோசித்து முடிவு செய்ய நாம்

இங்கு குழுமியிருக்கிறோம். -

சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு சாலியர் மகாசங்கம் என்ற சங்கத்தை நிறுவி முதலாவது மகாநாட்டை நடத்தியது