பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சிறந்த சொற்பொழிவுகள்

10. கதரின் பெருமை

(The Glory of Khaddar)

டாக்டர் அருள்மணி பிச்சமுத்து (1930, மே)

மனிதனின் தினசரி வாழ்க்கைக்கு அத்தியந்த அவசியமானது அன்னமும் ஆடையுமே. அன்னம் உயிரைக் காப்பது. ஆட்ை உயிரினும் உயர்ந்த மானத்தைக் காப்பது. ஆகையால் ஆடையைத் தரும் நூல் நூற்றல், நெய்தல் தொழில்கள் பல சமயங்களிலும் பல தேசங்களிலும் வெகு சிறப்பாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன.

உலகத்தில் முதன் முதல் இயற்றப்பட்ட நூலென்று மேல் நாட்டாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட வேதங்களில் நெய்தல் என்னும் பதம் அடிக்கடி காணப்படுகிறது.

மணமகன் மணவறையில் மணமகள் நெய்த ஆடையையே உடுத்த வேண்டுமென்று ரிக், யஜூர், அதர்வ வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. இது நிச்சயமென்று நிரூபிக்க, இன்னமும் இந்தப் பழக்கம் அஸ்ஸாம் தேசத்தில் நடந்து வருகிறதென்று தினபந்து ஆண்ட்ரூஸ் அவர்கள் கூறுகிறார்கள். விஷ்ணுவைச் சிறப்பித்துக் கூறும் 100 நாமங்களில் இரண்டின் பொருள் நூற்பவர் என்பதாம். சில உற்சவ தினங்களிலும் நூலையே மாலையாகச் சாற்ற வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஆனால் இப்பொழுது நாம் காண்கிற காட்சியென்ன? கடவுள் வசிக்கும் தேவாலயங்களில் சொரூபங்களை அலங்கரிப்பது, பரதேசிப் பருத்தி நூல் துணிகளும் பட்டு ஆடைகளுமே யென்றும், பூரி, அயோத்தி இன்னும் தாங்கள் தரிசித்த மற்ற தேவாலயங்களில் பார்த்தது துயரக் காட்சியென்றும் காந்தியடிகள் தமது பத்திரிகையில் கூறுகிறார்கள். அநேகமாய், பூணுால் தரிப்பவர்களும் சாஸ்திரப்படிக் கையினால் நூற்ற நூலை உபயோகிக்காமல், மில் அல்லது பரதேசி நூலைக்கொண்டே தயாரிக்கிறார்கள் என்று தமது பத்திரிகையில் விசனமாய்க் கூறுகிறார்கள்.