பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் அருள்மணி பிச்சமுத்து 83

பைசா. அதலால் நாட்டிலுள்ளவர்களில் 3% கோடி பேர் பிச்சைக்காரர். 10 கோடி பேர்கள் வருஷத்தில் ஒரு வேளை கூட வயிறாா உண்டறியாதவர்கள். சென்ற 10 வருஷத்தில் 36 பஞ்சங்கள் தோன்றின. அவைகளில் 3 கோடிபேர் உயிர் துறந்தனர். 2 கோடி பேர் சாகும் தறுவாயில் இருந்தனர் என்று ரீமான் பி.ஸி.ரே சொல்லுகிறார்.

விவசாயத்தையும் கைத்தொழிலையும் பழையபடி விருத்தி செய்ய வேண்டும். அப்படியானால்தான் நாம் புராதன காலம்போல் பஞ்சமில்லாமல் பட்டினியில்லாமல் சுகமாக வாழ முடியும். ஆனால் அப்படி விருத்தி செய்வதற்கு யாதொரு முயற்சியும் செய்யாது ஒழித்தது அரசாங்கம். ஆகையால் தன் கையே தனக்கு உதவும் என்கிறபடி நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். விவசாயத்தை எல்லோரும் விருத்தி செய்ய முடியாது. ஏனெனில் எல்லோருக்கும் நிலமுமில்லை. விவசாயத்திற்கு வேண்டிய பணமுமில்லை. ஆகையால் நாம் எல்லோருமாக விருத்திசெய்ய வேண்டியது கைத்தொழிலே யாகும்.

கைத்தொழிலில் முதன்மை பெற்றது, எல்லோருக்கும் பலன் தரத் தக்கது, விவசாயிகளுக்கு உதவியாய் நிற்பதும், வருஷத்தில் 3.4 மாதங்களாக வயல்களில் வேலையில்லாத சமயம் விவசாயிகளும் மற்றக் குடி ஜனங்களும் வீண்பொழுது போக்காமல் செய்யக்கூடியதும், நூல் நூற்றல் நெய்தல் தொழிலேயாகும். - .

நம் நாட்டில் விளையும் பருத்தியை அயல் நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து துணியை வாங்கி உடுத்துவதால் ஏழைகளாவதை விட்டு, நாம் அயல் நாட்டுத் துணிகளையும் நூலையும் வாங்காது நம் நாட்டிலேயே நூல் நூற்று நெய்து உடுத்துக் கொண்டால் வருஷந்தோறும் 60 கோடி ரூபாய் நமக்கு மிஞ்சும். ஏழைகள் பிழைப்பார்கள். நாளடைவில் செல்வம் பெருகும். வறுமை நீங்கவே பிறரை எதிர்பாராமல் வாழச் சக்தி பெறுவோம். பெறவே அடிமைத்தனம் நீங்கும். சுயராஜ்யம் சித்திக்கும். -

கதர் அணிவதற்கு ஆட்சேபனைகளும் சமாதானங்களும்

“கதர் முரடாயிருக்கிறது” நூற்றல் தொழிலை வெகு நாளாக மறந்திருந்து இப்போது திரும்பவும் ஆரம்பிக்கும்போது முதலில் நூல் முரடாயிருக்கும். முரடாயிக்கிறதென்று நாம் இதை உபயோகிக்காவிட்டால் மறுபடியும் நூற்பது எப்படி? நூற்க நூற்கத்தானே நூல் நன்றாயிருக்கும். ராணியவர்கள் ஒருவருக்கு வைத்தியம் பார்க்கும்போது நான் நூல் நூற்பதைப் பற்றிச் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு அதைக் காட்ட வேண்டும் என்று அபிமானத்தோடு அவர்கள் கேட்டார்கள்.