பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சிறந்த சொற்பொழிவுகள்

அப்படியே என் ராட்டினத்தை அவர்களிடம் கொடுத்து அரைமணி நோந்தான் காட்டிக் கொடுத்தேன். ஒரு மாதம் கழித்து என் ராட்டினத்தைத் திருப்பி அனுப்பினபோது 6 சிட்டம் 30 நிர். நூலை ராட்டினத்திற்கு வாடகை என்று அனுப்பி வைத்தார்கள். நூல்கள் முறுக்கெல்லாம் சரிதானா வென்று பார்க்க வேண்டும் என்ற கதர் நெசவுக் காரர் ஒருவரிடம் நூல்களைக் காட்டினேன். அப்போது அவர் ராணியுடைய நூலை எடுத்துப் பார்த்து இதுதான் சரியான சைஸ் முறுக்குக் கொண்டதென்று பொறுக்கி எடுத்து, இதுதான் மாதிரி என்று சொன்னார். அந்த நூல் நூற்றது இன்னார் என்று சொன்னபோது ஆச்சரியப்பட்டார்.

இந்தியா தேசத்தில் மாத்திரமல்ல, ஐரோப்பா, இங்கிலாந்து முதலிய இதர தேசங்களிலும் அரண்மனைகளில் ராணிகளும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நூல் நூற்றதாகச் சொல்லப்படுகிறது. இது சகோதரிகள் கவனிக்க வேண்டிய விஷயமாகும். * .

முதலில் துணி முரடாகத் தோன்றினாலும் இரண்டொரு வெள்ளைக்குப் பின் வெகு மிருதுவாகவே இருக்கிறது. இது நம்முடைய அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். சில நண்பர் இப்படி சொல்லும்போது “கதர் துணி வாஸ்வத்தில் கனமும், முரடுமாயிருந்தாலும், உங்களுக்கு அப்படித் தோற்றுவதில்லை என்கிறார்கள். அப்படியானால் அவர்கள் சொற்படி நிதானித்தால் நாமெல்லாரும் தேசபிமானிகளாய் இருந்தால் நமது பாரததேசம் இச்சமயம் கதர் மயமாயிருக்க வேண்டியது. முரடான நூலானால் அதிகமாக நூற்க முடியும். அதிகமாய் நூற்றால் தானே அனைவருக்கும் கதர் உடுத்தத் துணிகள் தயாரிக்கப்பட்டு அந்நிய நாட்டுக்குப் போகும் பணத்தைப் போகவொட்டாது தடுக்க முடியும். -

ஆனால் இப்போது அவரவருடைய மனப் பான்மைக்குத் தகுந்தபடி மெல்லிய கதர்த் துணிகள் வந்துவிட்டன. ஆகையால் இந்த ஆகூேடியனையும் கூறமுடியாது.

2. "கதர் கனமாயிருக்கிறது" முதலில் நூற்கப்படும் நூல் கனமாக யிருக்கும். நாளடைவில் மெல்லிதாகிவிடுகிறது. நாளடைவில் மெல்லியதாகி விடுகிறது. 1920-ல் நூற்ற நூலைவிட 1928, 1929இல் நூற்கும் நூல் மெல்லியது என்று யாவரும் பரீகூவித்து அறிந்து கொள்ளலாம். மில் வேஷ்டியைவிட கதர் வேஷ்டி சுமார் 2 பங்கு அதிகக் கனமாயிருக்கும். சகோதரர்கள் முக்கியமாய் ஆங்கிலேய மாதிரியில் உடுத்துகிறவர்கள் கோட்டு, குடுத்துணி, கால் சராய் முதலியவைகளைத் தாங்கி வரும்போது கதரை மட்டும் தாங்க முடியாதா?