பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் அருள்மணி பிச்சமுத்து 85

70 வயது சென்ற அலி சகோதரர் தாயார் பீ அம்மாவும், கதர் ஆரம்ப காலத்தில் கனமும் முரடான கதர் துணியை உடுத்தவில்லையா? சமீபத்தில் லாகூர் காங்கிரசில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த செல்வாக்கான பெருமாட்டிகள் முரடான கதர்உடை அணிந்திருந்ததைப் பார்த்தபோது தமிழ் நாட்டிலுள்ள நாம் இந்த விஷயத்தில் நமது மனப்பான்மையை மாற்றி உயரிய லட்சியம் கொள்ள வட இந்திய சகோதரிகள் நமக்கு முன் மாதிரி காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

மில் துணியில் துவைத்து அழுக்குப் போக்குவது வெகு கடினம். வெளுக்காமலிருக்க முடியாது, கதர்த் துணியில் அழுக்குப் போக்குவது வெகு சுலபம்.

3. “கதர் அழகாயில்லை.”

அறியாதவர்தான் இவ்விதம் கூறுவார்கள். மில் துணியைவிடக் கதர்த் துணிதான் அதிக அழகும் வெண்மையும் உடையது. இதை நாம் அநுபவத்தில் பார்க்கலாம்.

ஒரு உத்தியோகஸ்தரிடம் 4, 5 வருஷங்களுக்கு முன்னர் கதரைப் பற்றிப் பேசியபோது அவர் முன்னால் நீங்களெல்லோரும் உடுத்தின துணி எவ்வளவு மெல்லியதாயும் அழகாயும் இருந்தது என்று சொல்லித் தன் பாரியையும், ஒரே பெண்ணையும் சுட்டிக் காட்டி இவர்கள் இப்படி அழகில்லாத முரட்டுத் துணியைக் கட்ட என் மனம் சகிக்காது என்றார். அந்தச் சந்தர்ப்பத்தின் பிறகு நான் இன்னும் அவர்களைச் சந்திக்கவில்லை. ஆடை ஏற்பட்டது என்னத்திற்கு? அலங்காரத்திற்கா? அல்ல, அங்கத்தை மூடத்தானே. -, -

4. கதர் விலை அதிகம். கதர் சீக்கிரம் கிழிந்து போகும் என்று பல ஆக்ஷேபனை கூறுகிறார்கள். ஒவ்வொன்றாய்ச் சமாதானம் கூற இச்சமயம் முடியாது. பொதுவாக இரண்டொரு விஷயங்களை மாத்திரம் சொல்லலாம். - -

1. நம்முடைய தேசாபிமானக் குறைவே காரணம். நமது வீடுகளில் அன்னத்தைத் தயாரிக்கச் சுதந்திரமுண்டானால் ஒரு மணி நேரம் உட்கார்ந்து வீண்பொழுது போக்காமல் நூற்கிறதற்குச் சுதந்தரமில்லையா? சிலர் தங்கள் வீடுகளில் தறிகளும் வைத்துக் குடும்பத்திற்கு வேண்டிய துணிகளைத் தயாரித்துக் கொள்ளுகிறார்களென்றும் கேள்வி. இது எல்லோராலும் சாத்தியப்படாவிட்டாலும் தறிக்கு நாம் நூலை அனுப்பலாம்.

2. நாம் நூல் நூற்கச் சாவகாசமில்லாமற் போனாலும் கத ை வாங்கி அணியலாம். இப்படி நாம் வாங்கினால் கதர் உற்பத்தி செய்கிற நூற்றல் நெய்தல் தொழிலாளர்களுக்குப் பிழைப்புக் கொடுக்கிறோம்.