பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சிறந்த சொற்பொழிவுகள்

3. கதர் அரசாங்கத்திற்கு விரோதம் என்று கதர் அணியப் பயப்படுகிறார்கள். சில இடங்களில் இது உண்மையே. நாம் உண்மை அபிமானிகளாயிருந்தால் காந்தியடிகள் சொல்லுகிற பிரகாரம் பயத்தைக் களைந்துவிட்டு விடுகளில் மாத்திரமல்ல, உத்தியோக ஸ்தாபனங்களிலும் பிரிட்டிஷ் மேலதிகாரிகளுக்குப் பயப்படாமல் எப்போதும் கதராடையை அணிவோம். வேலைத் திட்டங்களை ஒழுங்காயும் நியாயமாயும் செய்ய வேண்டியதுதான் நமது கடமையே அல்லாது, நமது அங்கத்தைப் புரதேசித் துணியையோ சுதேசித் துணியையோ போட்டு மூடியிருக்கிறதைப் பற்றி அதிகார வர்க்கத்தினர்க்கு இது விஷயத்தில் லட்சியம் ஒன்றுமில்லை.

எல்லோரும் ஒற்றுமையாய் இதில் ஈடுபட்டால் உத்தியோகம் போய்விடுமே என்கிற கவலையில்லை. அப்படியானால் எல்லாரும் உத்தியோக ஸ்தலங்களை விட்டு நீங்க வேண்டியதாயிருக்குமே. அரசாங்கம் நின்று போய்விடும், இல்லை நிற்காது. அன்றுதான் நிலை மாறி சுயராஜ்யமாகும். -

1920ஆம் வருஷம் உதவி மறுத்தல் காலத்தில் காந்தியடிகள் கதரைப் பற்றியும், அதன் உண்மைத் தத்துவத்தைப் பற்றியும், வறுமைப்பிணி நீங்க இந்தக் குடிசைத் தொழில் ஒன்றே சாதனமாகு மென்றும் சொன்னபோது, இந்தியர்களில் அநேகம் பேர் ஒப்புக்கொள்ள வில்லை. இதைப்பற்றி நகைத்தார்கள். பயித்தியமென்றார்கள். இந்திய ஜனசேவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட நேரிலும் அவர்களுடைய பத்திரிகைகளிலும் பரிகாசமான கட்டுரைகள் வரைந்தார்கள். ஆனால் இதே சமயத்து இங்கிலாந்தில் நடந்ததென்ன? சர் மைக்கல் ஒட்வியர், ஷாராக் என்பவர்கள் சபை கூடிப் பெரிய பரபரப்பை உண்டாக்கினார்கள். திகில் பிடித்துவிட்டது.

ஈவினிங் ஸ்டாண்டர்டு-பத்திரிகையில், "மிஸ்டர் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒத்துழையாமை சித்தி பெறுமானால் ஒரே அடியில் வருஷத்திற்கு 8 கோடி பவுன் (ரூபாய் 120கோடி) நஷ்டமாகும். லங்காஷயர் மில்லிலிருந்து மாத்திரம் 34,4580 பவுண்ட் (ரூபாய் 5,16,87,000) பெறுமான துணிகளை நாம் இந்தியாவிற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். இன்னும் இரும்பு வியாபராம் முதலிய மற்ற வியாபாரங்களில் மிகுந்த நஷ்டம் ஏற்படும். இது மாத்திரமல்ல, இதை ஒட்டி நமது எத்தனையோ வியாபாரச் சங்கங்கள் கலைந்துவிடும். இப்போதுதானே வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறோம்” என்ற கட்டுரை பலமாய் வெளிப்பட்டது.

இந்தியர்கள்ைச் சந்திக்கும்போது "உங்கள் காந்தி இந்த மாதிரி அந்நியத் துணி சுட்டெரிக்கிறாரே, இது நியாயமா?" என்று இங்கிலாந்தில்