பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் அருள்மணி பிச்சமுத்து 87

பலவாறாகக் கேட்டார்கள். தாங்கள் இந்தியத் துணி ஏற்றிப்போன கப்பல்களைத் தங்கள் துறைமுகங்களில் அமிழ்த்தினதையும் சரக்குகளை விற்கிறவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் அபராதம் போட்டதையும் மறந்து போனார்கள் போலும்.

இந்தியர்கள் ஆக்ஷேபனைகள் கூறிக்கொண்டு நிர்விசாரமாய்க் கவலையற்றவர்களாய் இருக்கும்போது, இங்கிலாந்தில் பரபரப்பு, கலக்கம். இது நம் மனப்பான்மை இன்னதென்று காட்டுகிறது. காரியங்கள் எல்லாவற்றையும் கவனிக்கும்போது நாம் இனிக் கதர்ப்பிரசங்கம் சபைகளில் செய்வதை விட்டு, காந்தியடிகள் சொல்லுகிற பிரகாரம், தேசபக்தர்கள் அதிலும் இளைஞர்கள் (ஏனெனில் இது இளைஞர் யுகம். இளைஞரே காங்கிரஸ் தலைமை வகிக்கிறார்) கிராமங்களில் கதர் இயக்கத்தைப் பரவச் செய்து ஆசிரமங்களை உண்டு பண்ணித் தாங்கள் உடுத்தும் துணியைத் தாங்களே தயாரிக்க முயற்சி செய்யவேண்டும்.

இப்போது ராஜபாளையத்தில் சில மாதங்களுக்கு முன் பார்த்த காட்சி என் கண்முன் வருகிறது. அங்கே நூல் நூற்கிறவர்களின் வீடுகளை நாங்கள் பார்க்கப் போனபோது ஒரு சகோதரி தன் கையில் நூலை வைத்துக்கொண்டு இது எங்களுக்குச் சாசுவதமாய்ப் பிழைப்புக் கொடுக்குமா?” என்று சந்தேகத்துடன் கேட்டார். அப்போது நாங்கள் 'உங்களுக்குப் பிழைப்புக் கொடுக்கும்படிதான் நீங்கள் நூற்ற நூலால் தயாரிக்கப்பட்ட துணிகளை, மெல்லியது முரடு என்று கவனிக்காமல் உடுத்துகிறோம்" என்று தைரிய வார்த்தைகளைச் சொன்னோம்.

இங்குக் கூடியிருக்கும் அநேகம் பேருக்கு ஒருநாள் வருவாய் 1 ரூ. 2 ரூ. முதல் 10 ரூபாய் வரை மதிப்புப் போடலாம். ஆனால் நூல் நூற்றலைக் கொண்டு பிழைப்பவர்களுக்கு 2 அனா 3 அனாத்தான் கிடைக்கும். நாம் அவர்கள் நிலைமையிலிருந்தால் அந்த 2 அணா 3 அணா வருவாயும் போனால் எப்படியிருக்கும் என்று யோசியுங்கள்.

+

தூத்துக்குடி கதர்க் காட்சியைத் திறந்து . . வைத்தபொழுது நிகழ்த்திய சொற்பொழிவு. (1930. மே)