பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சிறந்த சொற்பொழிவுகள்

இப்போது சங்கீதம் எல்லா வகைகளிலும் சீர்குலைந்து இருப்பதை நாம் நன்கு அறிவோம். என்னுடைய சிறு வயதில் நான் கேட்ட சங்கீதம் இப்போதில்லை.

முக்கியமாக சங்கீதத்திற்கு ராகபாவம், தாளம், சாகித்தியம் - இம்மூன்று அம்சங்களும் நிறைந்து சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படியிருந்தால்தான் கேட்போருக்கு உண்மையான உணர்ச்சியையும் அதனால் இன்பத்தையும் கொடுக்கு மென்பது ப்ரத்யட்ச அனுபவம்.

தவிர புராதன கீர்த்தனங்கள் வர்ணங்கள் பதம் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன.

சென்றொழிந்த இராகங்கள் போக நமக்குள் வழங்கிக்கொண்டு வரும் ராகங்களிலும் ஒருவர்க்கொருவர் அபிப்பிராய பேதம் காணப்பட்டு வருகின்றது. சூளாதி, டாயம், பிரபந்தம் - இம்மாதிரியான பாட்டுகள் பெரும்பான்மையோரிடம் வழக்கத்தில் இல்லை. தாள சம்பந்தமாக 108 பஞ்ச தாளம் ரகண மட்டியம் முதலிய பல தாளங்களும் மறைந்து கிடக்கின்றன. -

சங்கீத சம்பந்தமாகத் தற்காலம் நம்முடைய பழக்கத்திற்கும் நூல்களுக்கும் அதிக முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவைகளைச் சங்கீத வித்வான்கள் ஒன்று கூடி, ஆராய்ந்து அமைத்துக்கொள்ள வேண்டுவது அவசியமாகிறது. நிற்க, நான் தங்களுக்கு ஒரு விஷயம் ஞாபகப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. என்னவென்றால், சங்கீதத் தொழிலானது ஜன சமூகத்திற்குப் பொதுவாக நம் தமிழ் மக்களுள் நீண்ட காலமாக இருந்து வருகிற தென்பதேயாம். ஆகையால் நம் தமிழ் மக்களும், செல்வந்தர்களும் தங்கள் விட்டு விசேஷ சந்தர்ப்பங்களில் தமிழர்களாகிய சங்கீத வித்வான்களை அதிகமாக வரவழைத்து உற்சாக மூட்டல் வேண்டும். சங்கீதக் கொடியைத் தமிழ்நாடு முழுவதும் பரவும்படி செய்தல் வேண்டும். அப்படிச் செய்ய செல்வந்தர்களும் வித்வான்களும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ் மக்களுள் சங்கீதம் கேட்கும் பழக்கம் மிகக் குறைவாக யிருக்கின்றது. சங்கீதத் தொழில் செய்பவர் தமிழராகவும் ஆதரிக்கிறவர்கள் மற்றவர்களாகவு மிருப்பதென்றால் எவ்விதம் அச்சங்கீதம் உச்ச நிலையை அடைய முடியும் என்பதை எல்லோரும் சிந்தித்துத் தெளியுங்கள்.