பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பொன்ை னயா பிள்ளை 91

சங்கீதத்தைச் செவியுறுதலில் ஒவ்வொருவர்க்கும் அவாவிருக்க வேண்டும். வெறும் அவா மட்டு மில்லாமல் ஒவ்வொரு ஊரிலும் சங்கீதச் சபைகளை ஏற்படுத்திப் பல பேர்களின் பாட்டும் வாத்தியங்களும் கேட்கும் படியான சந்தர்ப்பங்களையும், வசதிகளையும் உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும்.

நம் மக்களுக்குப் பொதுக் கல்வி அறிவுடன் சங்கீதத்தை முறையோடு கற்பிக்கத் தாலுகாவிற்குக் குறைந்தது ஒரு பள்ளிக் கூடமாவது அமைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு அனுகூலமாக நமது கவர்ன்மெண்டார் சங்கீதத்தைப் பள்ளிக்கூடங்களில் கட்டாயப் படிப்பாக வைக்கவும் ஒப்புக்கொண்டது நாம் பாராட்டத் தக்கதாகும்.

ஒரு எஜமானனுக்கு நன்றாய்ச் சாப்பிடத் தெரியாவிடின் அவரிடமிருக்கும் சமையல் ஆளுக்கு சமையல் செய்வது மறந்து போய்விடும். நல்ல ருசியுடன் சமைக்கத் தெரிந்திருந்த போதிலும், எஜமானன் அதை அறிந்து சந்தோஷப்படுத்தாவிடில் அவன் தொழிலுக்கு விலையில்லை யென்று மனமுடைந்து போய் மேலே சீர்திருத்தம் செய்யாது நின்றுவிடுவான். அது போலவே சங்கீதம் கேட்பவர்கள் திறமை எவ்வளவிருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு சங்கீதம் உச்ச நிலையை அடையும். -

தென்னாட்டில் சங்கீதம் கேட்பவர்கள் அதிகமாயிருந்ததால்தான் அது வளர்ந்தது. உச்சத்தை அடைந்திருந்தது.

அன்பர்களே ! சங்கீதம் குறைவு பெற்றும், தாழ்த்தப்பட்டும் வருகின்ற இத்தறுவாயில் இம் மகாநாட்டைக் கூட்டி ஊக்கத்தை எழுப்பும்படி சந்தர்ப்பத்தை உண்டாக்கிய நமது உயர்திருவாளர் இராமசாமிப் பெரியாருக்கும் வரவேற்புத் தலைவர்களுக்கும் மற்ற சங்கீத வித்வான்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பார்ந்த வந்தனமளித்து என்னுடைய பிரசங்கத்தை முடிவு செய்கின்றேன்.