பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சிறந்த சொற்பொழிவுகள்

பொன்னையா பிள்ளை தஞ்சை (1887 - 1945)

ஈரோடு மே 12-ல் சுயமரியாதை மாநாட்டுப் பந்தலில் 1930 மே 12 பகல் 2 மணிக்கு முதலாவது தமிழ்மாகாண சங்கீத மகாநாடு கூடிற்று. 4000 மக்களுக்கு அதிகமாக ஆண்களும் பெண்களும் கூடியிருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் வித்வான்கள்.

காஞ்சிபுரம் திரு நயினா பிள்ளை, சிதம்பரம் திரு. கே. பொன்னையா பிள்ளை, கீவளூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சிதம்பரம் செல்வ ரெத்தினம் பிள்ளை, திருவிழிமிழலை திரு. சாமிநாத பிள்ளை, சேலம் திரு. ரங்கதாஸ், கும்பகோணம் திரு. வடிவேல் பிள்ளை, சேலம் திரு. பழனிச்சாமி செட்டியார், சென்னை திரு. சுப்பிரமணிய பிள்ளை, திருச்சி திரு. நடேச பிள்ளை, சேலம் திரு. காளியப்ப பிள்ளை, சென்னை திரு. நாதமுனி பண்டிதர், திருத்துரைப்பூண்டி, திரு. கிருஷ்ணமூர்த்தி, திருவல்லிக்கேணி திரு. வேணு நாயக்கர், பழனி திரு. சுப்பிரமணிய பிள்ளை, திருச்சி மலைக்கோட்டை திரு. கிருஷ்ணசாமி பிள்ளை, திருக்கோகர்ணம் திருமதி ரெங்கநாயகி சுப்புலட்சுமி, சென்னை திரு. முனிசாமி பிள்ளை, திருக்குவளை திரு. முத்துக் குமாரசாமி பிரதர்ஸ் முதலியோர்களாகும்.

பல வித்வான்கள் வரமுடியாமைக்குத் தந்திகள் கடிதங்கள் அனுப்பியிருந்தனர். மகாநாடு மேள வாத்தியத்தோடு ஆரம்பமாகியது. திருக்குவளை திரு. முத்துக்குமாரசாமி பிரதர்ஸ் நாகசுரத்தில் 'ரவிச்சந்திரிகை”, “சங்கராபரணம்”, “தர்பார்', 'பைரவி' முதலிய இராகங்களில் இனிய கீர்த்தனைகளை வாசித்தார்கள். -

வரவேற்புக் கழகத்தாரின் விருப்பப்படி திரு. ஈ.வே. இராமசாமி அவர்கள் சாரமுள்ள சொற்பொழிவை நிகழ்த்தி மாநாட்டைத் திறந்து வைத்தார்கள். பிறகு திரு.சொ.முருகப்பா அவர்கள் தமது வரவேற்புக் கழகத் தலைமை யுரையைப் படித்தார்கள்.

சிதம்பரம் ராஜா சர் அண்ணாமலை பல்கலைக் கழகச் சங்கீத வித்வான் திரு. கே. பொன்னையா அவர்கள் தலைமை ஏற்றுச் சொற்பொழிவாற்றினார்.

குடியரசு - 25.5.1930