பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சிறந்த சொற்பொழிவுகள்

13. தமிழ்மொழி!

தவத்திரு ஞானியாரடிகள் *

31. 5. 1941

மெய்யன்பர்களே !

இப்பொழுது இங்கு நாம் திருவோத்தூர்ப் பரிதிபுரத் திருநாவுக்கரசு. மடத்தின் பாதுகவி மாணவர் கழகப் பன்னிரண்டாவது ஆண்டு விழாவின் இன்பத்தை அநுபவிக்கக் கூடியுள்ளோம்.

உலகில் மனிதப் பிறவி எப்பிறவியினும் சிறந்தது. மனிதன், நாடோறும் துயிலெழுந்ததும் "நான் மனிதனாகப் பிறந்திருக்கிறேன்" என்று எண்ணல் வேண்டும். "வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்றபடி மனிதன் தன்னைத் தான் மதித்தல் வேண்டும். பிறப்பின் வாய்ப்பினை யுணர்ந்து, அதனால் நாம் என்னென்ன செய்ய வேண்டுமென்று சிந்திப்பது ஆண்களாக, பெண்களாகப் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும். பொருத்தமாகக் கிடைப்பதே வாய்ப்பு எனப்படும். -

நம்பால் உள்ள தீயகுணங்களையும் பிறர்பால் உள்ள நல்ல குணங்களையுமே நாம் நினைத்தல் வேண்டும். -

ஒருவன் பிறர்பால் உள்ள தீயகுணங்களை நினைப்பது அவனுக்குத் தீமை விளைவிக்கும்; தன்பால் உள்ள நற்குணங்களை எண்ணுவது கர்வத்தை உண்டாக்கும்.

நாம் நல்லன செய்து உடனே அவற்றை மறத்தல் வேண்டும். மனித வாழ்வில் இது முக்கியமான விஷயமாகும். கெடுதி செய்யாதவர்கள் உலகில் இல்லை. அதிக தீமை விளைப்போரையே "கெட்டவர்கள்" என்று உலகம் அழைக்கிறது. ,

அறிவு, இயற்கை அறிவு, செயற்கை அறிவு என இரு வகைப்படும். கடந்த பிறவியில் நுகர்ந்து இறந்தபோது தொடர்புற்று மறுமையினும் தோன்றுவதே இயற்கை அறிவாகும்.