பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு ஞானியாரடிகள் 95

படிப்பினால் - பெரியோர்கள் பழக்கத்தினால் - ஒழுக்கத்தினால் உண்டாவது செயற்கை அறிவு, இவற்றுள் படிப்பினால் வளரும் அறிவுதான் சிற்த அறிவு. படித்தவர்தாம் முன்னர் அறியாது செய்த பிழையினைப் பின்னர் தெரிந்து வருந்தும் இயல்புடையர். படியாதவர்கள் தீமை செய்ததைச் சிந்திக்கமாட்டார்கள். செய்த பிழையினைச் சிந்தித்து வருந்துதலே பச்சாதாபம் ஆகும்.

தான் செய்த தீச்செயல்களை யெல்லாம் ஒருவன் தன் நண்பர்களிடமோ, பெரிய சபைகளிலோ, நாற்சந்தி கூடுமிடங்களிலோ கூறிப் பச்சாதாபப்படுவதால் அவன் தன் தீச்செயல்களைக் கடிவதோடு பிறரும் அவன் பாவந்தொலைய இறைவனை வேண்டுவார்கள்.

எல்லா வகையான துன்பங்கட்கும் காரணமாக இருப்பது அறியாமை அறியாமை!! அறியாமை !!!

நாம் பிறரை மூடர் என்று பழிக்கலாகாது. சிலர், பிறருடைய பெருமையைக் கேட்கவும் சகிக்க மாட்டார்கள். அத்துடன் நில்லாது அவர் பெருமையைக் குலைப்பதற்கும் வழி தேடுவார்கள். ஆகையால் எவரும் முதலில் தம் மூடத்தனத்தை உணர வேண்டும்.

படிப்பு அறியாமையை நீக்குமென்று முன்னமே கண்டோம். எல்லா நூல்களும் இந்த உண்மையை நன்கு விளக்குகின்றன. நாம் செயற்கை யறிவுடன் கல்வி கற்றுக் கடவுள் நெறி நின்று உயிரையும் உடலையும் போற்ற வேண்டும். - -

"எவன் ஒருவன் படித்து அறிவுடையனாவானோ அவன் பிறக்காமலிருக்கும் இறவாத முத்தி சாதனம் எய்தப் பெறுவான் என்று ஈசாவாஸ்யம் என்னும் வடமொழி நூல் இயம்புகிறது.

ஆசையறுக்கும் நூல்களையே நாம் படித்து முத்தி பெற வேண்டும். இக்காலத்தே ஆசை விளைக்கும் நூல்கள் பல்கியுள்ளன. அதுபற்றி விவரிக்க அடியேன் விரும்பவில்லை. வித்தையால் முத்தியடையலாம் என்னும் கருத்துள்ள வித்தை விரும்பு’ என்னும் ஒளவையார் வாக்கே வேதங்களின் உட்கருத்தாகவும் விளங்குகிறது.

சிலர், “வயதாய்விட்டது. நம்மால் இனி படிக்க வியலாது என ஒதுவ தொழிகின்றனர். ஆனால் அவர்களுள் வயது முதிர்வால் இனி நம்மிடம் பணப் பெட்டியின் திறவுகோல் வேண்டுவதில்லை என்று கூறித். தம் அருமந்த மகாரிடம் அதனைக் கொடுக்கவும் மனமில்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள். -