பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


தான் சேரும். வழியில் எங்கும் ஒரே இடத்தில் தங்கி இருப்பதில்லை. வளமும் முன்னேற்றமும் அப்படிதான். அது காற்றைப் போன்றது. வரும், வீசும், மறையும்.

மனித உடலையும், உணர்வுகளையும் பிணி பாதிக்கும். வேதனையும் மிகுதியான தொல்லை தருவதாகும். இயற்கையாகவே அதைப் போக்கிக் கொள்ள சில வழிகள் உள்ளன. அமைதியை இழக்கும்போது தன்னம்பிக்கையுடன் செயல்படு. துன்புற வைப்பது இயற்கையின் உரிமை. உனக்கு மட்டும் இல்லை உலகில் யார்க்கும் இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று கவலைப்படு. அப்படிக் கவலை கொள்வதுதான் உன் நெஞ்சத்தைச் சீர்ப்படுத்தும்.

இப் பிறவியில் தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்துகொண்டு, இயற்கையின் சட்டங்களுக்கு மதிப்புக் கொடுத்து செயல்படு. உனக்கு மட்டும் எதுவும் நேரக் கூடாது என்று நினைப்பது பேதமை. உலகக் குடும்பத்துள் நீயும் ஒருவன்.