உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்வின் குறிக்கோள்

டாக்டர் சதக்ரட்சகன் டி.லிட்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் என்றார் அவ்வையார். ஆம், அரிய மானிடராய்ப் பிறந்துள்ளோம். ஆனால் எத்துணை பேர் மானிடராய் வாழ்கின்றனர்? மானுட வாழ்வின் குறிக்கோளை அறிந்துள்ளனர்? வாழ்வுதான மிகமிக அருமையானது, மாண்புடையது, மேன்மையுடையது. ஆம் அது மகிழ்ச்சியையும் இன்பத்தையும் நம்பிக்கைகளையும் தருவது.

செடி, கொடி, மரக்கிளைகளின் தழைப்புக்கும் செழிப்புக்கும் அழகுக்கும் வேர்கள்தாம் ஆதாரம். அதைப்போல் வாழ்க்கைக்கும் ஆதாரம் அன்பும் உழைப்பும்தாம். அன்பு நெஞ்சிலே வேர் விட்டிருந்தால் வாழ்க்கை நீடிக்கும். வாழ்க்கையோ மனிதனுக்கு ஒரு தடவைதான் கிடைக்கிறது. நீ விழுந்துவிட்டால் சட்டென்று எழுந்துவிடு. புழுதியைத் தட்டி உதறிப் போக்கிவிட்டு மேலே நட.