பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

69


பிறவியின் பயன்

குயிலுக்குக் காலையையும், ஆந்தைக்கு இரவை போலவும், கழுகுக்குப் பிணத்தைப் போலவும் உன் வாழ்விற்கு உள்ளமும் தொடர்பு கொண்டிருக்கிறது.

அது ஒளி நிரம்பியது. இருக்குமிடம் தெரியாவிட்டாலும் மிகவும் பிடித்தமானது; இனிமையானது. இருந்தும் அதனுடைய உண்மையான மதிப்பை எவர் அறிவர்!

அதற்கு உரிய அக்கறை செலுத்தி நல் அறிவைப் பெற்றிடு. உன் அறிவைக் கண்டு நீயே மெச்சிட வேண்டா. அதைப் பிறருக்கு அளித்து மகிழ்ச்சியைக் கொள். நீ வீணாக்கும் நேரத்தை மீண்டும் பெற முடியாது. எனவே, திருந்தி வருங்காலத்தை நன்றாக அமைத்துக் கொள்.

ஏன் பிறந்தோம் என்று கவலைப்படாதே. விரைவாக சாவு வராதா என்றும் மனம் நொந்து கொள்ளாதே. நல்லது நின் கையில்தான் உள்ளது. நின் முடிவு நல்லதானால் நல்லபடியே நடக்கும். நீ பிறந்தது இதுவே முதல் முறையல்ல. நீ மீண்டும் மீண்டும் செத்துப் பிறக்க வேண்டியவன். பறவைக்குக் கூண்டில் அகப்படுவோம் என்பது தெரியாது. பறவை தப்பிக்கக் கூட்டின் கம்பிகளில் மோதிக் கொண்டு இறப்பதும் இல்லை. எனவே நீயே நின் நிலையைக் கண்டு வருந்தாமல், நின் எல்லைக்குள் வாழ முடிவு செய்து கொள்.