பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


வெள்ளித் தட்டில் தங்க மணிகள் இருப்பது போல, உன் பேச்சு உயர்வானது. உன் நெஞ்சத்தின் உயர்வை நீ அறிந்து, அதை உனக்கு அளித்த இயற்கையைப் பாராட்டு, அதை என்றும் மதித்திடு. இந்த மேலான ஆற்றல் உனக்கு இருப்பதை மறக்காதே.

எதை நாம் நல்லது என்று கருதுகிறோமே அதுவே கூடத் தீமையாக மாறக்கட்டும். எனவே எதையும் நல்லதற்கே பயன்படுத்து. அதை யாராலும் அழித்து விடவோ, மறைத்திடவோ முடியாது. அது எப்போதும் தானாகவே செயலற்ற தாக்கிவிட முடியாது.

கடும் வெப்பத்தில் பாலை நிலத்தில் பயணம் செய்பவன் தண்ணிரைக் தேடுவது போல உன் மனமும் எப்போதும் நல்ல அறிவைத் தேட வேண்டும்.

எது சரி, எது சரியில்லை என்று கண்டு கொள்ள முடியாதவனுக்கு இந்த அறிவைக் கொடுத்திருப்பது, அறிவிலியிடம் கூ ர் வா ள் கொடுத்திருப்பது போல் ஆகும்.

நீ எதிலும் உண்மையைத் தேடவேண்டும். எது குற்றம் என்பதைக் கண்டிட வேண்டும். இதை எல்லாம் புரிந்து கொண்டு நடக்கும் நிலையில் உன்னைப் படைத்த இயற்கையை எண்ணு.