பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

தீங்கு நினைப்பவனைத் திருத்த முயல வேண்டும். அவன் அன்பைப் பெற வழி தேடு. அதுவே நல்ல வெற்றிக்கு அடையாளம்.

கொலை செய்பவன் கோழை, செத்தவன் உயிரோடு இருந்தால்தான் வாழ முடியாதது என்று பயப்படுபவன்.

இறப்புகள் சண்டைகளை முடித்து வைப்பதில்லை. இழந்த மதிப்பைத் தேடித் தருவதும் இல்லை. நீ செய்தது வீரத்தில் எடுத்துக்காட்டும் இல்லை.

குற்றம் செய்தவனைப் பழிதீர்த்துக் கொள்வதில் சிறப்பு ஏதுமில்லை. மன்னிப்பதனால் அடையும் சிறப்பு சிறந்தது. மனிதன் முதலில் தன்னைத்தான் வென்றிட முயல வேண்டும்.

மிகப் பெரிய தவற்றைச் செய்தவர்களை மன்னிப்பதால்தான் சிறப்பு உள்ளது. உன் குற்றம் குறைகளுக்கு நீயே அறிவுவாணன். நீயே உன் செயல்களை ஆய்ந்து சிந்தித்தால் பழி தீர்க்கும் குணமே உனக்கு ஏற்படாது. அன்பினால் உலகத்தின் மதிப்பைப் பெற்றிடுவாய்.

கொடுமை, பகை, பொறாமை

பழிவாங்க நினைப்பது விரும்பத்தக்கதன்று. கொடுமைக் குணம் கொள்வது குறும்புதனமானது. கொடுமைச் செயல்களுக்கு வெட்கப்பட வேண்டும்.