பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

93

மனிதாபிமானம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

கொடுமைகளுக்குத் தாய் அச்சம். திகைப்பை உண்டாக்குவது கொடுமை.

வீரன் தன்னை எதிர்ப்பவனைக் கண்டுதான் வாளை உயர்த்துவான். எதிரி பணிந்து விடாமல் மகிழ்கிறான். எனவே கோழைகளை எதிர்ப்பதும் உனக்கு ஈடான வல்லமை இல்லாதவனைக் கொடுமைப்படுத்துவதும் ஒழுங்கீனமானது.

சமுகத்தினர் தங்களுக்குள் போரிட்டுக் குருதி கொட்டுவதும் அச்சத்தின் காரணமாகவே. சூழ்ச்சிக்காரர்கள் கொலைகாரர்கள் திட்டத்தின் விளைவாக ஏற்படும் இந்த உள்நாட்டுப் போரில் இரண்டகங்களே மிகுதி.

கொடுமைகளைப் புரியாது, உயர்ந்தவனாக ஒழுக்கவாணனாக, மனித நலநாட்டம் கொண்டவனாக வாழ வேண்டியது மனிதனின் கடமை.

மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் தொல்லைகளை உண்டாக்குபவர். ஒரு சாரார் எதிர்ப்பு காட்டாது எதையும் தாங்கிக்கொள்பவர்கள். இதை உணர்ந்தால் கொடுமை புரிய வேண்டிய தேவை ஏற்படாது.

மனிதர் நல்லவர்களாக இருப்பதற்குத் தடை ஏதும் இல்லை. நம்மைத் தாக்கும் பொருண்மைகளை முறையிட்டுத் தீர்த்துக்கொள்ள அணுக