பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்போது. மகத்தான் பொறுப்பல்லவா அது உள்ளங்களின் உறவாடல் மட்டும் அல்ல. சதையின் சதையாக, ரத்தத்தின் ரத்தமாக... அது எப்படி முடியும்?.

ராமன் கதவைத் திறந்துகொண்டு வெந் நீர்ச் செம்புடன் உள்ளே வந்தான்். குழந்தை களே உற்றுப் பார்த்துவிட்டு வெளியே போய் விட்டான். அதிகாலையில் வெந்நீரால் தொண்டையைச் சுத்தம் செய்தால்தான்் வலி குறைவாக இருக்கிறது. கழுத்தில் சுற்றியிருந்த மப்ளரைக் கழற்றி வைத்து விட்டுப் பல் துலக்கி வாய் கொப்பளித்தேன். குழந்தைகளும் எழுந்தார்கள். அன்று ஞாயிற் றுக் கிழமை. பள்ளிக்கு விடுமுறை. ஆகவே, அவர்கள் வீடு செல்வது பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ நினையாமல் விளையாட் டில் மூழ்கியிருந்தார்கள்.

கெளசல்யா போன் செய்தாள்.

'ஹலோ, சுமித்திரா குழந்தைகள் உன்

னேப் பாடாய்ப்படுத்திப் பம்பரமாய்ச் சுழல

வைத்திருப்பார்களே... மச் டிரபிள்சம்...

சே...அதெல்லாம்

இல்லையா?"

'சே'... ல்லை.... ஆட்டம் ಸಿದಿ; கொண்டிருக்கிருர்கள். உன் பிள்ளை இருக்

அவர்கள் "டிரேட்'

கிருனே பெரிய பிஸினஸ் புள்ளியாக வரு வாண்டி...."

கெளசல்யா கலீரென்று சிரித்தாள். 'சரி, நாங்கள் இன்று அங்கே வரவில்லை. 'ஷாப் பிங்' போகிருேம். கம்பளி உடை வேறு தைக்க வேண்டும். அடுத்த வாரம் கிளம்ப வேண்டுமே!’ என்ருள்.

கெளசல்யாவும் பாஸ்கரும் அமெரிக்கா வுக்குச் சென்றுவிட்டார்கள். 'ஆன்டி"யிடம் சமர்த்தாக இருப்பதாகச் சொல்லிக் குழந் தைகள் பதவிசாக நடந்து கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது. விண்ணில் விமானம் பறந்து செல்லச் செல்ல மண்ணில் நின்றிருந்த நான் இதயச் சுமையால் அழுந்தி நின்றேன். L

என் அருகே என்னுடன் துளியும் சம்பந்தப் படாத - உறவற்ற இரண்டு குழந்தைகளின் நலனை ஏற்றிருப்பது முற்றிலும் சரியா தவரு என்பதுதான்் அந்தச் சுமைக்குக் காரணம்.

பால் வடியும் முகத்தினளான பத்மாவும் ஆண்மைக்குரிய கம்பீரம் இன்னும் அரும்ப வயதாகாவிட்டாலும், அதற்குரிய முரட்டுத் தனம் நிரம்பிய குமாரும் என் கைகளைப் பற்றி வீட்டுக்கு வரும்படி அழைக்கும்வரை நான் கற்பனையில் மூழ்கியிருந்தேன்.

அவர்களுக்கு எல்லாமே ஒரளவு புரிந்திருந் தது. தங்கள் பெற்ருேர் ஏதோ காரணமாக வெளிநாட்டுக்குப் போயிருக்கிரு.ர்கள் என் பதை உணர்ந்திருந்தனர்.

எங்காவது ஒரு சிணுங்கல், ஒர் அழுகை,

முனு முனுப்பு எதுவுமே இல்லை. குழந் தைகள் குழந்தைகளாக இல்லாமல் ஏதோ பெரியவர்களைப் போல் விட்டேற்றியாக

நடந்து கொண்டார்கள்.

சமையற்கார ராமனைக் கூப்பிட்டுக் கேட் டேன். 'ராமா! உன்னிடம் அவர்கள் ஏதா வது படுத்தல் கிடுத்தல் செய்கிரு.ர்களா?' ராமன் வழக்கம் போல் தலையைச் சொறிந்தான்். 'அதெல்லாம் ஒண்னும் இல்லையம்மா. போட்டதைச் சாப்பிடறதுகள். நாமதான்் என்ன, குறைச்சலாகக் கவனிக் கிருேமா இதுகளே? காலம்பற ஜாம், வெண் ணெய் தடவிய ரொட்டி, பால். மத்தியானம் இரண்டு தினுசு காய்கறியோட சாப்பாடு..... மாலையில் பிஸ்கட், பழம், டீ.... ராத்திரி சப்பாத்தி கூட்டு, பால்..... கெளசல்யா அம்மா இருந்தால்கூட இவ்வளவு அக் கறையா கவனிக்க மாட்டார்கள். குறைப் பட்டுக் கொள்ள என்ன இருக்கு?'

ராமளுேடு பேசுவதில் அர்த்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சாப்பாடு, தூக்கம் இவை மட்டும்தான் குழந்தைகளின் உலகம்? அவை தம் பெற்ருே.ரிடம் நடந்து கொள்ளும் விதம் எப்படி எப்படியோ இருக்குமே ! --

கெளசல்யா குழந்தைகளின் நலனே விசாரித்துக் கடிதம் போட்டிருந்தாள். குழந்தைகளுக்கே கடிதம் எழுதியிருந்தாள். குழந்தைகள் ஏதாவது தங்கள் குறைகளைப் பற்றி அவளுக்கு எழுதட்டும் என்று நான் அவர்களிடம் தபால் கவரைக் கொடுத்து அவர்களே கடிதம் எழுதிப் போட்டு ஒட்டி ராமனிடம் கொடுத்து "போஸ்ட்' செய்யும் படி கூறினேன்.