பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருநூறு ருபாப் அட்வான்ஸ் வாங்கிக் காண்டு பழநி, மதுரை, திருச்செந்துார் என்று கேத்ராடனம் போயிருப்பதாகச் சொன்ஞர். 'வீட்டில் சொல்லவில்லையா? அட கஷ்டமே பொறுப்பு வரணும்னு அந்தப் பையனுக்கு ஒரு கால் கட்டுக் கட்டிப் போடுங்க" என்றார் அவர்.

வீட்டில் கல்யாணம். முதல் பிள்ளை வீட்டை விட்டுப் போய் விட்டான். எனக்கும் அவருக்கும் அது ஒரு கல்யாணம் மாதிரியே இல்லை. தியாகுவும் பிரமை பிடித்த மாதிரி இருந்தான்். பங்காரு காமாகதியிடம் வேண்டி னன். 'தாயே! இப்படி என்னைச் சோதிக் கிருயே?' என்று....... கல்யாணம் முடிந்து திரும்பவும் நாங்கள் சென்னை வரத் தஞ்சை ரயிலடியில் உட்கார்ந்திருந்த போது திடும் என்று பாலு வந்தான்். மடமடவென்று கிருக் கோயில்களின் பிரசாதங்களை வழங்கினுன். 'என்ன அண்ணு இப்படி?" என்று ஆரம் பித்த தியாகுவை, "சரித்தாண்டா! இதோ பிரசாதங்களுடன் வந்திருக்கிறேனே..... f ■ என்று மடக்கி விட்டான்.

சென்னை செல்லும் வண்டியில் நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக நம் ஊர் மேலத் தெரு சுப்பண்ணு மாமாவும், அவர் பெண்ணும் மாயவரத்தில் ஏறிஞர்கள். பரஸ் பரம் யோக கூேடிம விசாரணைகள் முடிந்த பிறகு பாலு கல்யாணமாகாமல் இருப்பதைப் புரிந்து கொண்டார் அவர்.

பெண் அப்படி ஒன்றும் அழகில்லே. ரொம்பச் சாதாரணம். எட்டாவது படித் திருக்கிறதாம். ஊருக்குப் போப் ஜாதகம் அனுப்பினுர், ஜாதகம் பொருந்திடுத்து. பெண்ணே ரயிலில் பார்த்தாலும், முறைப் படி வீட்டில் பார்க்க வந்திருக்கேன். . . . . .

கிளம்புடி ராகுகாலத்துக்கு முந்திப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம்.'

யந்திரம்போல் ஏதோ நினேவுடன் அந்தத் திருமணத்தின் அவசியத்தையும், அது நிகழ வேண்டும் என்பது ஒரு நிர்ப்பந்தமாக அமைந் திருப்பதையும் நினைத்துப் பார்த்தேன். எச்சிலைக் கூட்டி விழுங்கத் தெரியாத அந்தப் பிள்ளையையும் கற்பனையில் நினைத்துப்

பார்த்தேன். எதுவுமே நம் செயலில் இல் லாத போது வீணுக மன உளைச்சலுக்கு ஆளாக விரும்பாமல் பெண்ணேப் பார்க்கச்

சென்ருேம், பெண் பிடித்து விட்டது. அதற் கென்று ஒரு மனம் இருப்பதாகவே என்னுல் ஊகிக்க முடியவில்லை.

"இதோ பாரு குழந்தை! என் பிள்ளே கொஞ்சம் அசடு. முன்னே பின்னே இருந் தாலும் என்னைப் போல நீ சமாளிச்சுண்டு போகணும். அப்புறம் கண்னேக் கசக்கக் கூடாது. ஆமாம்...' என்று ராஜி பட்ட வர்த்தனமாகப் பேசினுள். அவள் அப்படிப் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் பெண் தலையைக் குனிந்து கொண்டு மெது வாக, 'அசடுங்கறது என்னன்னு எனக்குத் தெரிஞ்சாத்தான்ே? நாம எல்லோருமே ஒவ்வொரு விதத்திலே அசடுகள்தான்். அவர் கூடக் கொஞ்சம் அசடாக இருப்பாராக்கும்' என்றது. எனக்கு அந்தப் பதில் அவள் மனத் தின் ஆழத்தை உணர்த்தி விட்டது.

அடுத்த இருபத்திரண்டாம் நாள் பாலு, கந்தரி திருமணம் நடந்தே விட்டது. எனக்

கென்று ராஜி பிரத்தியேகமாகக் கல்யாண பகrணங்கள் அதிகமாகவே கட்டிக் கொடுத்

தாள். நான் அவளுடன் வந்த வேளை தான்ும், ஏதேதோ சொன்னுள். பிறகு நாலு வருஷங்கள் அவர்களைப் பற்றியே

ஒன்றும் புரியவில்லை.

- ஃ డి

திடும் என்று அன்று காலே ராஜி பெட்டி படுக்கையுடன் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். சென்னையில் நடந்த ஒரு கல்யா னத்துக்கு வந்த நான் அப்படியே ராஜியின் வீட்டுக்கு வந்திருந்தேன். இருவருமாகப் புறப்பட்டுப் பாலுவின் வீட்டுக்குப் போளுேம்.

மாம்பலத்தில் பாலுவின் வீட்டை ஆடையும்போது பகல் இரண்டு மணிக்கு மேலாகி விட்டது. மாமியாரைக் கண்டதும்

சுந்தரி பரபரப்படைந்து போனுள். என்ன யும் அடையாளம் புரிந்து கொண்டாள். அவர்கள் வீட்டு முன்புறம் மின்சாரச்

சாமான்கள் அடங்கிய கடை ஒன்று இருந்தது. மேஜை அருகில் பாலு உட்கார்ந்திருந்தான்். "பாலுதான்ே இது?' என்கிற கேள்வி என்னே அறியாமல் சற்று உரக்கவே வந்தது. "ஆமாம் மாமி ! செளக்கியந்தான்ே? உள்ளே வாங்கோ...' என்றபடி மேஜை டிராயரை இழுத்துப் பூட்டிக் கொண்டு கிளம் பினுன் அவன். சதா எச்சிலை வழிய விட்டுக் கொண்டிருந்த அந்த உதடுகளில் ஒர் அழுத் தம், முகத்தில் பிரகாசம் எல்லாமே வந்து விட்டிருந்தன.

'இது யாரென்று தெரிகிறதா சுந்தரி?' என்று தன் மனைவியிடம் என்னைக் காண் பித்து விசாரித்தான்்.

'உக்கும்... எனக்கு எல்லாம் தெரியும். என்னேப் பெண் பார்க்க வரலேயா?"

மறந்துட்டியோன்னு பார்த்தேன்... ஏன் மாமி! நான் ப்போ தனியா 'பிஸினஸ்' பண்றேன். முதலீடு எல்லாம் இவள் மஞ்சள் கானிலேந்துதான்். இப்படி மாசம் முந்நூறு ரூபாய் தேறும்... அம்மாவும் அப்பாவும் தனியா பல்லாவரத்துலே இருக்கா. வேண் டாம்மா எங்களோடே வந்துடுன்னு சொன் ஞக் கேக்கலை. அவாளுக்குத் தனிக் குடித் தனத்து மேலே ஆசை...' என்று தாயை நையாண்டி செய்தான்் பாலு.

பாங்கும், பதவிசுமான அந்தக் குடும் பத்தின் அழகிலே நான் என்னே மறந்து லயித்திருந்தேன்.

'பூஜை அறை, கூடம், வரவா போறவா உட்கார்ற இடம்...' என்று பாலு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்்.

அந்தப் பெண் இன்னும் பதவிசாகத் தன் ளுல் ஒரு பெரிய விஷயம் சாதிக்கப்பட்டிருப் பதை மறந்து அடக்கவொடுக்கமாக உட் கார்ந்திருந்தாள்.

'இப்படி அவசரமா வந்துட்டுப் போறி யளே! பாயசத்தோடு உங்களுக்குச் சாப்பாடு போடணுமே..." என்று பாலுத் தம்பதியினர் என்னைப் பார்த்துக் கூறினர்.

இலட்சிய, இலட்சணத்துடன் ஒர் உயர்தரமான இல்லறத்தை பாயசம் இனிக்கப் போகிறது? நானும் அதற்கப்புறம் பேசவில்லை.

கூடிய விடவா

ராஜியும்