பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏதாவது பேச வேண்டும் என்று அவள் மனம் அலை பாய்கிறது. திடீரென்று நினைவு வந்தாற்போல் பேசுகிருள்.

'முரளி காலையில் பள்ளிக்கூடம் போகும்போது தெருவில் விழுந்து காலில் சிராய்த்துக் கொண்டான். மருந்து போட்டு அனுப்பினேன்.....'

' காயத்தைக் கழு வித் தான்ே போட்டாய்."

"ஆமாம்..... H. H. 'சரி பள்ளிக்கூடத்திலிருந்து வரட்டும், பார்க் கிறேன்..... * F

அதற்கு மேல் அவனுடைய பேச்சு வளரவில்லை. 'குழந்தை விழுந்தான் அடி பலமா? என்று ஒருத்தர் பதறமாட்டேரோ? இதுதான்் ஜானகியின் குற்றச்சாட்டு. அவள் மனத்தாங்கல், வேதனை, է Tտիի ոլիII ԼI

உள்ளே மேசைமீது அன்று வந்த தபால்களைப் பார்வையிட்டான். ஊரிலிருந்து அவன் அம்மா எழுதிய கடிதம். செள ஜானகியைக் கவனித்துக் கொள். நீ அவளிடம் இப்படி நடந்து கொள்வது. வழக்கமான குற்றச்சாட்டுத்தான்். அவன் அதைப் படித்துப் புரிந்து கொண்டதாகக் காணுேம். இன்னுெரு கடிதம் ஏதோ ஒரு பொது நலச் சங்கத்திலிருந்து வந்திருந்தது. 'அன்புடையீர் என்று அது ஆரம்பித்திருந்தது. ஜானகி அந்தக் கடிதத்தைப் படித்தவுடன் சிரித்தாள். வேதனை யின் வெடிப்பாக இருந்தது அந்தச் சிரிப்பு. அன்பை உடையவர் என்று அதற்குப் பொருள் என்று அவள் நினைத்தாள். பிறர் விஷயத்தில் மகா மேருவாக உயர்ந்து நிற்கும் அந்த அன்பு, அவளிடத்தில் தரை மட்டமாகத் தாழ்ந்து நிற்கும் நிலைதான்் விந்தை! அந்தச் சங்கத்தில் பல அனுதைப் பெண்கள் ராட்டை சுழற்றி, தறி நெய்து வாழ்கிருர்களாம். அவர்களுக்கெல்லாம் இந்த வழியைக் காட்டிய தியா குவை ஆண்டு விழாவுக்கு வருமாறு அழைத்திருந்தனர். தியாகு பீரோ நிறைய அடுக்கி வைக்கப்பட் டிருந்த நூல் சிட்டங்களைக் கட்டுக் கட்டாகக் கட்டி வைத்துக் கொண்டிருந்தான்்.

சமையலறையிலிருந்து வாசல் அறை தெளிவாகத் தெரிந்தது. ஜானகி சுவரில் சாய்ந்தபடி கணவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

எதிர்விட்டுச் சாமான் அறையை இப்போது நன்ருகப் பார்க்க முடிந்தது. மச்சிலிருந்து கணவன் ஒவ் வொரு பாத்திரமாக எடுத்துக் கொடுக்க, மன்ேவி வியர்வை வழியக் கீழே ஒவ்வொன்ருக வை த்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் போலும். "ஓஹோ விருந்து சமைக்கப் பாத்திரங்களை எடுக்கி ருர்கள் போலிருக்கிறது.'

உடனே அவளுக்கு முரளியின் பிறந்த நாள் நினை வுக்கு வந்து விட்டது. அன்று தியாகு ஊரில் இல்லை. எங்கோ என்னவோ என்று போய் விட்டான்.

அவளுக்கு அன்று ஒன்றுமே பிடிக்கவில்லை. ஊரெல்லாம் திரண்டுதான்் விந்திருந்தது. பலன்?

குடும்பம், குழந்தை குட்டி என்று அவள் தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்டிருக்கும் சிறிய வட்டத்துக் குள் அவன் என்றுமே எட்டிப் பார்த்த்தில்லை.

சமூகம், தொண்டு என்று அவன் தன்னைச் சுற்றி வரைந்திருக்கும் பெரிய வட்டத்துக்குள் இவள் எட்டிப் பார்க்க நுழைந்ததுமில்லை.

ானகி அன்று சாப்பிட வில்லை. கணவன் வந்து சாப்பிட்டாயா என்று கேட்கவில்லையே என்ற ஆதங் கம்தான்் காரணம். என்ருவது ஒரு நாள் அவன் அப் படிக் கேட்கமாட்டான என்று அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தாள் அவள்.

மருந்து

தெருவில் தந்திச் சேவகன் வந்து நின்றன்.' * 'சார்...' கூடத்து வரை வந்து எட்டிப் பர்ர்த்த ஜானகி யாருக்கு என்னவோ என்று பதறினுள். தந் தியை வாங்கிக்கொண்டே தியாகு மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்தான்். ஆதில் ஒடிய பயமும், பீதியும் அவன் மனத்தைக் கலக்கின.

'என்ன ஜானகி? யாருக்கும் ஒன்றும் இல்லை: தெற்கே வெள்ள்ம் புரளுகிறதே. வெள்ளக் கஷ்ட, நிவாரண வேலைக்கு என்னே வரும்படி கலெக்டர் தந்தி ட அனுப்பியிருக்கிருர். அவ்வளவுதான்்.' _

இவ்வாறு சொல்லிக் கொண்டே தோல் பெட்டி யில் உடைகளை எடுத்து வைத்தான்். காப்பி கூடச் சாப்பிடாமல் புறப்பட்டு விட்டான். ஜானகி மறுபடி யும் ஜன்னல் கம்பிகளின் மீது முகத்தைப் பதித்துக் கொண்டு நின்ருள் தெருவில் சந்தடி இல்ல்ைதான்். மணி மூன்றுகூட இருக்காது.

எதிர் வீட்டில் கணவனும் மனைவியும் பரபர வென்று இங்கும் அங்கும் ஒடிக் கொண்டிருந்தார்கள். வேதனையும் துயரமும் அவ்ர்கள் முகத்தில் பொங்கி வடிந்தன. அவர்கள் வீட்டில் யாருக்கென்ன? ஜானகிக்கு ஒன்றும் புரியவில்லை. சற்றுமுன் சிரிப்பும் களிப்புமாக இருந்த வீட்டில் ஏன் இப்படிப் பரபரக்க வேண்டும்? குழந்தை முக்கி முக்கி முனகுகிறதே!

வாணி தெருக் கதவைத் திறந்து கொண்டு எதிர் விட்டிலிருந்து இவளே நோக்கி வந்தாள்.

'வந்து வந்து... குழந்தை தூங்கி விழித்ததி லிருந்து வயிறு உப்பிக் கொண்டு மூச்சு முட்டி முட்டி வருகிறது மாமி. எனக்கு என்ன செய்வதென்ற்ே தெரியவில்லை...'

கண்ணிர் கொப்பளிக்க அவள் தன் இரு நயனங் களேயும் தலைப்பால் பொத்திக் கொண்டாள்.

ஜானகி அவளுடன் அந்த வீட்டினுள் சென்ருள். ஏதோ மருந்தின் பெயரைச் சொல்லி அதை வாங்கி வரச் சொன்னுள். மருந்தைக் குழந்தையின் மார்பி ஆம், முதுகிலும் தடவித் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுத்தாள்.

குழந்தையின் வேதனை குறைந்தாற்போலிருந்தது. வீறிட்டு அழுது தாயின் மடியில் அது புரள்வதைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் ஜானகி.

'அப்பா...கொஞ்ச நாழியில் எப்படிப் பயமுறுத் திட்டேடா, ராஜா...' என்று குழந்தையை உச்சி முகர்ந்தாள் அதன் அன்னே.

'பார்த்தாயா, உனக்கு ஒன்றும் தெரியவில்லை.

அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. பெரிய தொண்டரின் மனைவி அல்லவா? அவர் எவ்வளவு தொண்டுகள் செய்கிருர் ஆஸ்பத்திரியில்!' என்று

வியப்பும், நன்றியும் கலந்த குரலில் ஜானகியைப் பாராட்டினுன் வாணியின் கணவன்.

மற்றவர் துயர் துடைப்பதில் மற்றவர் முகத்தில் சிரிப்பதைக் காண்பதில் இருக்கும் மகிழ்ச்சியை ஜானகி யால் நன்கு உணர முடிந்தது. அதோடு தன் கணவனே யும் உணர முடிந்தது. ■ -

இந்நாள் வரை முரண்பட்ட கருத்துடன் ஒருவ ரிடமிருந்து ஒருவர் ஒதுங்கியே வாழ்ந்த அவர்கள் இருவரிடையும் இன்று கருத்தொற்றுமை நிலவக் காரணமாக இருந்த அந்த எதிர்வீட்டு மதலைச் செல் வத்தை இமைக்காமல் பார்த்தாள் ஜானகி.

எங்கோ பிறர் இன்னல் களையப் போயிருக்கும் தன் கணவன் தியாகு அப்போதும் அருகில் இருப்ப தாகவே அவள் உணர்வு கொண்டாள்.

மறுபடியும் ஜானகி தெருவில் இறங்கிய போது தெரு கலகலப்பாக இருந்தது. முன்பு தெருவில் இருந்த அமைதி இப்போது அவள் உள்ளத்தில் இருந்தது. அவள் தன் வட்டத்திலிருந்து தான்ுகவே நழுவி வெளியேறிக் கணவனுடைய இலட்சிய வட்டத்தில் புகுந்தாள்!