பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r'alki Deepavali Malar 1961

.அதோ கலகலவென்று மணி குலுங்கி ஒடுகிருற் போல் சத்தம் கேட்கிறதே! ஜானகி காதைத் ட்டிக் கொண்டு கேட்கிருள்.

அவர்கள் குழந்தை தவழ்ந்து கூடத்தைச் சுற்று கிறது. அதன் கூடவே தாயும், தந்தையும் சுற்றி வந்து சிரிக்கிருர்கள். அவ்வளவுதான்் விஷயம். ஆணுல் அவ்வளவுதான்ு?

ஜானகி தன் மகன் முரளியை நினைத்துக் கொண் டான். இப்பொழுது அவனுக்கு ஏழு வயது ஆகிவிட்டது. பள்ளிக்குப் போகிருன். அந்த நாளில், அவன் தவழும் பருவத்தில் அவனேப் பார்த்து ஒரு நாளாவது அவன் தந்தை மகிழ்ந்திருப்பாரா? இந்தமாதிரிக் குழந்தையைச் சுற்றி வந்து சிரித்து மகிழ்ந்திருப்பாரா?

தியாகு என்ன அவ்வளவு கல்நெஞ்சுக்காரணு? 'ಬ್ಜೆ தன்னேயே சமூகப் பணிக்கு அர்ப் பணித்துக் கொண்ட பெரிய தியாகி என்றல்லவா அவனைப்பற்றி ஊரில் எல்லோரும் பேசிக் கொள்ளு கிருர்கள்? எல்லோரும் சொல்லித்தான்ு அது தெரிய வேண்டும்? உண்மையே.அதுதான்்.

தியாகு கல்லூரிப் பட்டம் பெற்றவுடனே தேசம் அவனைத் தன் பணிக்கு அழைத்த காலம் அது. இந்திய விடுதலைக்காகத் தங்களைத் தியாகம் செய்த பல தியாகி களில் அவனும் ஒருவன். தேசம் விடுதலே அடைந்து பிறகு அவன் ஒய்ந்து விடாமல் எந்தப் பட்டம் பதவி யிலும் தன்னைப் புகுத்திக் கொள்ளாமல் சமூகத் தொண்டு செய்ய ஆரம்பித்தான்். அந்தத் தொண்டின் முன்பாக அவனுடைய வீடு உற்றம் சுற்றம் எல்லாம் மிக மிகச் சிறியதாகி விட்டன.

ஜானகி அவன் கரம் பற்றிய அன்று அளவிலாப் பெருமை கொண்டாள். தன் கணவன் பெரிய தியாகி என்னும் எண்ணமே அவள் நெஞ்சை நிரப்பியது. ஊரெல்லாம் புகழ்கிற உத்தமனேக் கணவனுக அடைந்து வளுக்குப் பெருமை உண்டாகாதா ஆனுல் ஜானகி தியாகியோ, விரக்தி உள்ளம் படைத்தவளோ அல்ல. பெண்ணுகிய அவளுக்கு மனத்தில் ஆயிரம் ஆசைகள் முளைத்துச் செழித்தன. மணமான புதிதில் ஒர் இளம் பெண் கணவனுடன் எவ்வளவு அன்போடு வாழவேண் டும் என்று ஆசைப் படுவாளோ அவ்வளவு ஆசைகளும்

o olo

133

அவளுக்கும் இருந்தன. ஆனால் அவள் கணவனுக்கு இருந்த ஆசைகளோ தொண்டு, சமூக நலம், தியாகம்இப்படிப்பட்டவை. வீட்டு வாசலில் படர்ந்திருக்கும் மல்லிகை அரும்புகளைப் பறித்துத் தொடுத்துச் சரமாக் கிக் குழலில் சூட்டிக் கொண்டு தியாகு பார்த்து மகிழ வேண்டும் என்று அவன் வரவுக்காக ஜானகி காத்து நின்ற நாட்கள் எல்லாம் விணுகி விட்டன.

தியாகு வீட்டுக்கு வந்தால் அதையெல்லாம் கவ னிக்க மாட்டான். ம அழகாக இருக்கிருளா மலர் சூடிக் கொண்டிருக்கிருனா என்பதைப் பற் அவன் நினைத்துப் பார்ப்பதே இல்லை.

தான்் பணிபுரிந்து வந்த அந்த ஆஸ்பத்திரியை எப்படி விஸ்தரிக்கலாம்: நோயாளிகளுக்கு எந்தவிதத் தில் செளகரியங்களே மிகைப்படுத்தலாம் என்பதுதான்் அவன் சிந்தனையாக இருக்கும். அந்தச் சிந்தனை வெள் ளத்தில் மூழ்கி அதிலே லயித்தவாறு வேறு அலுவல் களுக்காக வெளியே போய் விடுவான் அவன்.

தியாகுவின் அன்னே.ஜானகியின் மாமியார். பிள்ளே யின் இந்தில் கண்டு தர்மசங்கடத்தை அனுபவித்தாள். "ஜானகி இந்த ஊரில் தெருக்கோடியில் சினிமா வந்திருக்கிறதே. போய்ப் பார்த்து வாயேன்...'

‘'வேண்டாம், அம்மா...' ஏக்கத்தின் எதிரொலியாக அவள் பெருமூச்சு விட்டவாறு மாமியாருக்குப் பதிலிறுப்பாள். என்ன வேண்டியிருக்கிறது சினிமாவும், இன்னென்றும்!" என்று அவள் வாய் திறந்து சொல்வதில்லே, எண் னங்கள் உறுத்த சோகப் பார்வை ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து மறைந்து விடுவாள்.

எதிர்வீட்டிலிருந்து இரட்டைக் குரலில் சினிமாப் பாணியில் தாலாட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டது. ஒர் அடி கணவன் பாட மறு அடி மனேவி பாட இரு வருமாகக் குழந்தையைத் துரங்கப் பண்ணுகிருர்கள். குழந்தை தூங்கி விட்டது போலும் இருவரும் வாசல் அறையில் வந்து உட்காருகிரு.ர்கள். ஜன்னலின் மெல் விய திரை வழியாக அவர்கள் சேர்ந்து சோபாவில் அமர்ந்திருப்பது நன்ருகத் தெரிகிறது.

எதிர் வீட்டிலிருந்து காட்சிகள் தெரிகின்றன. பேச்சுக்கள் கேட்கின்றன.

'இன்று என்ன டிபன் பண்ணட்டும்?" வினேக் குரலில் மிழற்றுகிருள்.

"எங்கே ஒவ்வொரு பலகாரத்தின் பெயராகச் சொல்லிக் கொண்டு வா, பார்ப்போம்.'

"நான் ஹோட்டல் சர்வரா என்ன?" ரென்ற சிரிப்பொலி கேட்கிறது.

அப்புறம் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே உள்ளே போனுர்கள். ஜானகி ஜன்னல் கம்பிகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

தெரு அமைதியில் உறங்கியது. தெருக் கோடி. யில் தபால்காரனின் தலே தெரிந்தது.

"ஓ! மணி பன்னிரண்டு ஆகிவிட்டதா?" தனக்குள் சொல்விக் கொண்டே அவள் சமைய வறைக்குள் சென்று தட்டை எடுத்து வைத்தாள். ம&ண் போட்டுத் தண்ணிரும் எடுத்து வைத்தாயிற்று.

வாசல் கதவு கிரீச்சிடுகிறது. சரக் சரக்' என்று செருப்பொலி கேட்கிறது.

தியாகு உள்ள்ே வந்து கைகால்களைக் கழுவிக் கொண்டு சாப்பிட உட்காருகிருன். கணவனுடன்

ஆரோஜாராமமூர்த்தி

வாணி

கலீ