பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லக் குழந்தை ஒன்று முணுமுணுத் துச் త్థ போல் காற்று பொருமிக் கொ டயிருந்தது. சரளா தன்னந் தனிய ளாக அந்த வீட்டு வராந்தாவில் பிரம்பு நாற் காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி கம்பளிச் சட்டை பின்னிக் கொண்டிருந்தாள்.

எதிர்ச்சாரி வீடுகளுக்கிடையே அமைந் திருந்த புல் தரையில் குழந்தைகள் ஒடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந் தார்கள். நீல நிறச் சராயும் வெள்ளைக் கம்பளிச் சட்டையும் அணிந்து அவள் மகன் முரளி

D1 D1 D. П

அட்டைப் படக் கதை

DI DI DI LI

அடித்துப்பிடித்து ஒடி ஆர்ப்பாட்டம் செய்து காண்டிருப்பதைக் கண்டு சரளாவின் உதடுகளில் இளநகை அரும்பியது. வைத்த கண் வாங்காமல் அவனேயே பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பெருமிதத்துடன் மீண்டும் சட்டை பின்னுவதில் முனைந்தாள்.

முரளி ஆரோக்கியம்ாண் சிறுவன். அதிகம்

வியாதி வந்தது கிடையாது. நன்ருக ஓடி

யாடி விளையாடிவிட்டு வந்தான்ுகில்.-- 'அம்மா! தூங்கப் போறேன். கதை சொல் றியா?' என்றபடி தன் குெப்பு வாயைத்

திறந்து நீண்ட் கொட்டாவி ஒன்று விடு வான். அவனும் தாங்கிவிட்ட பிறகு அங்கே ஆழமான அமைதி நிலவும் போது அவள் செய்வதொன்றும் தெரியாமல் கணவன் தொலைவிலிருந்து எழுதும் கடிதங்களைப் படிப் பாள். அப்படிப் படிக்கையில் அவள் கணவ

னுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பது

பால் கற்பனையில் மிதந்து கொண்டே யிருப்பாள்.

திடுமென்று முரளி தூக்கத்தில் முனகு

வான். பிறகுதான்் தன் கணவன் அஸ்ஸாம் எல்லையில் தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது நினைவுக்கு வரும். ஜன்ன லின் திரைச் சீலைகளை விலக்கிவிட்டு நெடுந் தொல்ைவில் பார்வையைத் பொருத்தி இரண்டு * துளிக் கண்ணிரைச் சிந்துவாள் சரளா.

தன்னத் தனியாக அந்த வீட்டில் அவளும், முரளியும் இருப்பதே ஒரு வேடிக்கை. அதுவும் அவள் பிடிவாதத்தால் விளைந்தது.

கணவன் யுத்தகளத்துக்குச் செல்லுமுன் பாக அவளிடம் இதைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தாள்.

'உன் அம்மா வீட்டுக்குப் போயேன் என்ருள் சிகாமணி சரளாவைப் பார்த்து.

'அதெப்படி முடியும்? அம்மாவுக்கு அந்த வீட்டில் முன்னைப் போல அதிகாரம் இல்லை. அண்ணி வந்த பிறகு அவர்கள் எதிலும் தலையிடுவதில்லை. எங்க அண்ணியைப் பற்றித் தான்் தெரியுமே உங்களுக்கு பெரிய ராஜா வீட்டு ம்கன்னு நெனப்பு அத்தனையும் கர்வம் !'"

சரி, சரி, அவங்க எப்படியோ இருந் துட்டுப்போருங்க. என்ன சும்மா அவங்க வீட்டுச் சாப்ப்ாட்ட்ை எதிர்பார்த்துக்கிட்டா

மாசம் சாப்பாட்டுக்

இருக்கப் போறே : ா குடுத்

குன்னு அண்ணனிடம் ஏதாவது திடேன்.... அப்புறம் பால், பழம்னு தனியா வாங்கிக்க -

நான் ஒண்னும் அங்கே போகல்லே. எனக் குப் பிடிக்கலைன்ன விடுங்க -

பின்னே எங்க வீட்டிலே போய் இரு.' என்ருன் சிகாமணி.

ஐயே என்று உதட்டைப் பிதுக்கிக் கேலி செய்தாள் சரளா.

தனிமைத்துவர்

wரோஜாராமமூர்த்தி

'உங்க ஊரும், நீங்களும் சுத்தப் பட்டிக் காடு. குழந்தைக்குத் தலையை வவிச்சாக்கூட நல்ல டாக்டர் கிடையாது. அங்கே யார் போய் இருக்கிறது?'

அப்ப இங்கேயே ಡ್ಗಿà, நான் நாளன்னைக்குக் கிளம்பறேன். உன் இஷ்டம். நீ எந்த வழியும் போது விடமாட்டே. அப் புறமா தனியா விட்டுட்டுப் போயிட்டான்னு உன் அம்மா, அப்பா என்னேக் கரிச்சுக் கொட்டுவாங்க....!

'அவங்க கரிச்சுக் கொட்டறதைக் கேட்க

நீங்கதான்் இங்கே இல்லியே. அதைப் பத்தி உங்களுக்கு எதுக்குங்க கவலே?" என்று சரளா சிரித்தாள். பளிச்சென்று முத்து

வரிசை போல் இருந்த பற்களின் ஒளி முத்தாக

மின்னின.

அவனும் பதிலுக்குக் குறும்பாகச் சிரித்த படி அவள் கண்களை உற்றுப் பார்த்தான்்.

இரண்டு பேருமே நல்ல பிடிவாதக் காரர்கள்.

சிகாமணி மிகவும் சிக்கனமாக அவன் பெற்றேர்களுக்கு மட்டும் சரளாவை அந்த ஊரில் தனியாக விட்டு விட்டுப் போவதைப் பற்றி எழுதினன். அதற்கு அவன் தந்தை நிஷ்டுரமும், கோபமும் கலந்த கடி தம் ஒன்றை எழுதியிருந்தார்.

'இந்தக் காலத்துப் பிள்ளைகளின் போக்கே மிகவும் விசித்திரமாக இருக்கிறதென்றும், அவனே ராணுவத்தில் சேர்ந்திருக்க வேண் டிய அவசியம் இல்லை என்றும், படித்த மனைவியை விரும்பித் தேடிக் கொண்டவன் அவன் போக்குப்படி நடப்பதில் தாம் ஒன்றும் வியப்படையவில்லை என்றும் எழுதி யிருந்தார்.

  • "LLгТЦҺт என்ன எழுதியிருக்காங்க?" சரளா அவன் உடுப்புகளுக்கு இஸ்திரி போட்ட படி கேட்டாள்.

"படித்துப் பாரேன். வழக்கமானதைத் தான்் எழுதியிருக்காரு, வயசர்ச்சில்லே? அப் படித்தான்் எழுதுவாங்க- '

'அவங்க என்ன வேணும்னலும் எழுதட் டும். ஊருக்குக் கிளம்பறதுக்கு முன்னடி அவங் களைப் போய்ப் பார்த்துச் சொல்லிக் கும் பிட்டுவிட்டுக் கிளம்புங்க' என்ருள் சரளா.