பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோஜா ராமமூர்த்தி

பிக்ாற்று பலமாக வீசவே, திறந்திருந்த ஜன்னல் கதவு கள் பட்டென்று மூடிக் கொண்டன. மாலதி விசுக் கென்று எழுந்து போய்க் கதவுகளைத் திறந்து வைத்துக் கொக்கிகளைப் பொருத்தி ஞள். சற்று நேரம் கம்பி களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, வெளியே பார்த் தாள்.

சென்று விட்ட மாரிக் காலத்தில் நல்ல மழை பெய்த தன் விளைவாக, நிலமெங்கும் பசுமை பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. மரங்களில் தளிர்கள் தழைத்திருந்தன. மாமரங்களில் சரம் சரமாக மலர்கள். சிறு சிறு பிஞ்சுகள் கூட விட ஆரம்பித்திருந்தன. ஓ ! இளவேனில் வருகிறது என்று மாமரத்துக் குயில் கூடக் கூவித் தெரிவிக்கிறதே.

மாலதி கண்ணுக்கெட்டிய வரை கண்கள்ை ஓட விட்

டாள். தெளிந்த வானம்; அதன் அடியில் மகிழ்ச்சியே உருவான இந்த உலகம். பூவும், பிஞ்சும், காயும்,

கனியுமாக ஒரே வளர்ச்சி. ஆனல், அதோ அந்த விட் டுக்கு அடுத்த வீட்டில் தெரி கிறதே ஒரு காட்சி, அது அவ் வளவு இன்பம் பயப்பதாக இல்லை. ஒட விட்ட தன் கண் களை மால்தி இடுக்கிக் கூர்ந்து கவனித்தாள்.

அடுத்த வீடு ஒருசிறியூஒட்டு வீடு. ஆங்கர்ங்கு இடிந்து