பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டான். மாமரத்துச் சிட்டுக்

களின் மேல் லயித்திருந்த அவன் கவ , னத்தை, வாசல் கேட்டைத் திறந்து .

வந்து, எதிரில் நின்ற மங்கை ஒருத்தி கவர்ந்தாள்.

'யார்?' - இது மாதவன். 'இந்த வீட்டில் அவுட் ஹவுஸில்' காலி இருக்கிறதாமே... பார்க்க லாமா? - அவள் கேட்டாள்.

'ஓ! தாராளமாக... உள்ளே அம்மா இருக்கிருள்...' என்றவன் உள்புறம்

திரும்பி, 'அம்மா...' என்று அழைத்

தான்்.

அவன் தாயும், அந்தப் பெண்ணும் உள்ளே செல்வதைச் சிறிது பார்த் திருந்து விட்டு, மறுபடி மாமரத்தைக் கவனித்தபோது சிட்டுக்கள் இரண்டும் ஜோடியாக அமர்ந்து கிசுகிசுத்தன.

உள்ளேயிருந்து கணிரென்ற குர லில் அந்தப் பெண் ப்ேசினுள்.

எனக்கு மாதச் சம்பளம் எழுபது ரூபாய்தான்். தாயார் மட்டும் தான்் இருக்கிருள். வேறு யாரும் கிடையாது. வோடகையில் ஐந்து ரூபாய் குறைத்

துக் கொள்ளுங்கள்-'

'ஆகட்டும் அம்மா. ஏதோ எனக் குப் பேச்சுத் துனேக்கு என்று இருந் தால் போதும். வாடகையைப் பற்றி என்ன இப்போ? வந்து.. உன் பெயர் என்ன வென்று சொன்னுய்?..'

'நீலா...' 'நீலா என்று மாதவனின் மனமும் அந்தப் பெயரை வாங்கிப் பதிவு செய்து கொண்டது. உள்ளே யிருந்து பேச்சுக் குரல் அருகில் நெருங்கி வந் தி.து.

மாது! இந்தக் குழந்தையும், இவள் அம்மாவும் நம் "அவுட் ஹவு ஸ்ாக்கு நாளேக்குக் குடி வருகிருர்கள். வாட கையில் ஐந்து ரூபாய் குறைக்கச் சொன்னுள், சரியென்றுவிட்டேன்-' 'உன் இஷ்டம் அம்மா...-மாத வன் நீலாவை ஏறிட்டுப் பார்த்தவாறு கூறிஞன்.

'ரொம்ப தாங்ஸ்...'- நீலா கூறி யது மாதவனுக்குத்தான்். இல்லா

விடில் அந்தக் குரலில் ஒரு குழைவும் நளினமும் மிளிர்வானேன்?..

நீலாவும், அவள் தாயும் குடி வந் தார்கள். அவளுடைய சுறு சுறுப்பு. மகிழ்ச்சி, கலகலப்பு எல்லாம் அவளு டன் குடிவந்தன. சாமான்களேத் தவிர

90

வளவு தான்்.

உடன் வந்தவை நாலந்து பாத்திரங் கள், இரண்டுபெட்டிகள், படுக்கை இவ் பெட்டியிலிருந்து வெகு அக்கறையாகப் பக்தியுடன் ஆறுமுக. ளிைன் திருவுருவப் படத்தை எடுத்து அறையில் மாட்டி வணங்கிளுள் நீலா. அந்தப் படத்தின் சோபை அவர்கள் வீடெல்லாம் நிறைந்து விளங்கியது. இது காறும் மாதவனின் இதயம் நோயின் கொடுமையால் படபடத்து வந்தது. இப்பொழுது நோயின் கொடுமையினுாடே இன்ப வேதனை யால் துடித்தது. இதயம் துள்ளியது. மகிழ்ந்து ஏங்கியது.

'பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பியா ச்சா?.' வெளியே கிளம்பும் நீலாவைக் கேட்டான் மாதவன்.

' கிளம்பிக் கொண்டே, , . . . இருக் கிறேன். . . . இழுத்தவாறு வாக்கி யத்தை முடிக்காமல் அவனைப்பார்த்து

இள நகை சிந்தி விட்டு மறைந்து விடுவாள் அவள்.

'பள்ளிக்கூடத்திலிருந்து வந்

தாச்சா?..' கேசம் காற்றில் பறக்க சோர்வினுள்டே மிளிரும் அவள் அழ கைக் கண்களால் விழுங்கியவாறு கேட் பான் மாதவன்.

'வந்து கொண்டேயிருக்கிறேன்.' என்றபடி முறுவல் காட்டி உள்ளே போய் விடுவாள் அவள்.

அவர்களின் காதலின் தோற்றுவாய் இ வ் வ ள வு தான்். பார்க் கைத் தேடியோ, கடற்கரையில் ஒளிந்தோ அவர்கள் காதல் வளரவில்லை. கச்சித மாக, நேர்மையாக, புனிதமாக வளர் பிறை மதி போல் வளர்ந்தது.

மாதவன் பல மாதங்களுக்கு அப் புறம் தன் அன்னேயின் முன்பாக ஒரு நாள் வந்து நின்ருன்.

'அம்மா-!'

என்னப்பா...?'

அம்மா ' என்று தயங்கிளுன் மாதவன்.

என்ன மாதுா... என்னிடம் எதை யும் சொல்ல உனக்கு ஏன் தயக்கம்?" அந்தத் தாய் சாலப் பரிந்து அவனைக் கேட்டுக் குழைந்தாள்.

வந்து. . .அம்மா...'

'உம்... வந்து...' என்று முறுவல் காட்டினுள் அன்னே. ஈன்றெடுத்த மகனின் போக்கை அவளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன? ஒன்றி லும் கவனமில்லாமல், நாட்ட மில்லா மல் இருந்தவன் அடிக்கடி நீலாவைக்