பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்் இருப்பார்கள். அவர்கள் ஆயிர மாயிரம் மைல்களுக்கப்பால் இருந்தா அலும் இந்த ஏக்கம் இருந்து கொண்டு தான்் இருக்கும். அருகில் இருந்துவிட் டால்?..

தை மாதமாகையால் வானத்தில் மேகங்கள் இல்லை. அது வளர் பின்ற. பொட்டுப் பொட்டாய் விண்னெங் கும் புள்ளிக் கோலங்களாகத் தாரகை கள் கொலுவிருந்தன. அவற்றின் இடையே சந்திரனின் ஆட்சி உலகை ஒளியிலே தோய்த்து எடுத்தது.

இளம் தென்றல் வீசியது. ஆனால் திருமண வீட்டார் தங்கியிருந்தது ஒரு சாதாரண சத்திரம். மிக மிகப் பழ மையானது. சுண்ணும்பு அடித்து வெகு காலம் ஆனது. ஆங்காங்கு சுவ ரில் அழுக்கேறியும் பழுப்புடனும் காணப படடது.

சத்திரத்துத் திண்ணைகளில் சிலர் படுத்து விட்டார்கள். உள்ளே அதே கம் அறைகள் காவியாகவே இருந்தன. மாதவன் கண்களை விழித்தவாறு தலையை உயர்த்தி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்். அந்த இரவு என்று மில்லாத புதுமையாக அவ னுக்குக் காட்சி தந்தது. அத்துடன் அவன் இனி தனியன்' அல்ல என்கிற எண்ணமும் ஊடே எழுந்தது.

என் நீலா எங்கே?" தனக்குள்ளாகவே கே ட் ட வ ன் திரும்பி, கூடத்தைப் பார்த்தான்். தலையில் சூட்டிய மல்லிகை மலரும், மை கரைந்த நீள் விழிகள் சோர, புதுப் புடவை மெருகிட வாழைத் தண்டு போல நீண்டிருந்த கையை த லேக்குயரமாக வைத்துக் கொண்டு நீலா கண் வளர்வது நன்ருகத் தெரி ந்தது.

'சே! சரியான ஜடம்! என்னது.ாக்கம் வேண்டி இருக்கிறது? '

'விசுக் கென்று எழுந்து விட்டான் மாதவன். நீலாவின் பக்கத்தில் ஒரு பத்து வயதுப் பெண் படுத்துத் துரங் கிக் கொண்டிருந்தது.

கனவு உலகத்தில் களித்திருந்த நீலாவின் முகவாயைப் பற்றி வருடி எழுப்பிய கரங்கள் மாதவனுடை யவை. அவள் கன்னங்கள் சிவந்தன.

நேரம் ஏற ஏற நிலவு அடிவானத் தை நோக்கி கனவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. சற்று முன்பு உல

தத்துக்கு அழகு தந்த ஒளி மறைந்து இப்போது இருளாகப் பரவி வந்தது.

92

விடிய இன்னும் எவ்வளவோ நா, கை இருக்கிறதே !

அந்த இருளின் ஊடே நீலா அலை யக் குலேய வேகமாக சத்திரத்துத் திண்ணேயை நோக்கிப் பாய்ந்து ஓடி வந்தாள்.

"" அம்மா.. அம்மா ! ...'

அவளுடைய பயங்கரமான அலறல் அந்தப் பிராந்தியத்தையே அலற வைத்தது.

என்ன? என்ன?. . "'

"ஏன் ஏன்?"

ஒன்றுக் கொன்று சம்பந்த மில்லா மல் கேள்விகள் பிறந்தன.

'அம்மா உள்ளே வாருங்களேன்! .. அவரை வந்து பாருங்களேன்...--

நீலா எல்லோரையும் கொண்டு உள்ளே ஒடிஞள்.

கூட்டிக்

மாதவன் திணறிக் கொண்டிருந் தான்். வேதனைப் பட்டான். அணு அணுவாக அடங்கிக் கொண்டிருந் தான்்.

மாது...' என்று அமைதியைக்

கிழித்துக் கொண்டு அன்னையின் குரல் ஒலித்தது. அருகே நிற்கும் மருமக ளின் தோற்றம்? கீழே சிதறிக் கிடக்

கும் மலர்கள்?

மாது.. ' - அன்னே முட்டிக் கொண்டாள். மாதவன் முகத்தில் அமைதி நிரம்பி இருந்தது. கண்கள்

மூடிக் கிடந்தன. ஊரே திரண்டு விட் டது. ஆறுதலுக்கோ தேறுதலுக்கோ அவசியமில்லாத நிலையில் அங்கே ஒரு உண்மையை ஊரார் எல்லோருமே பார்த்தார்கள்.

பழுப்பேறிய சுவரில் கரித் துண்டி ல்ை 'அவளும். நானும். மனே வாக்கு காயத்தினுல்..."

வாக்கியம் முடிவு பெறவில்லை. ஒரு நாள் வாழ்ந்து ஓய்ந்து விட்ட அந்தப் பெண்ணே அவர்கள் எந்தக் கண் கொண்டு பார்த்தார்கள் என் பது வேறு விஷயம்.

1ெற்றி உலர்ந்துபோன விரல்கள்

அடுத்த பத்தாவது மாதத்தில் மடியில் குழந்தையைக் கிடத்தியவாறு மாத வனின் சேயை வருடிக் கொண்டிருந் தி.து. குழந்தை மாதவனின் மறு அச்சு என்று பாட்டி யுள்ளம் எண்ணி மகிழ்ந்தது.

எங்கும் நிறைந்த இறைவன், இறை விக்கு இந்தக் காட்சியைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.