பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவத்தில் ஒர் அசடைப் பெற்றுவிட்டு அதற்கு மனம் சய்யும் வயதும் வந்து

ட்டால் பெற்றவர்களின் மனத்தில் அதை விடச் சுமை வேறு என்ன இருக்க முடியும்? இந்த அபீதா என்கிற அசட்டின் கழுத்தில்

மூன்று முடிச்சுக்கள் போடப் போகிறவன் தான்் சங்கரின் வரப் போகிற மனேவியின் தமையன். அவன் அசடு அல்ல. கால்களே

இழந்தவன். இதிலே ஒரு பேரம் நடந்திருந் தது. அபீதாவை அவன் மணந்து கொண் டால், சங்கர் அவன் தங்கை ருக்குவை மணந்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்த னேக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டியிருந்தது.

"주"... உள்ளே போடி, இப பு மூடிண்டு. . . . கர்மம். . . கர்மம்... என்று தலையில் இரண்டு போட்டுக் கொண்டார்

பெண்ணேப் பெற்றவர்.

'எனக்கு ஆம்படையான் வர்றது பிடிக் கல்லே அப்பாவுக்கு' என்று அழ ஆரம்பித் தாள் அபீதா, அழுகை யென்றால் சாதாரண மான அழுகையா என்ன? மணிக்கனக்கில் தொடர்ந்து நாட்கணக்கில் நீண்டுகொண்டே போகும் அழுகை, m

எங்கே அந்த அழுகையைத் தொடர்ந்து விடுவாளோ என்று பயந்து சங்கர் அவளைச் செல்வமாக, 'அபீ இங்கே வாம்மா !' என்று அழைத்தான்். அவள் அருகில் வந்து நின்றதும் அவள் தலையை ஆதரவ்ாக வருடிக் கொண்டே, 'எனக்கு அவா பொண்ணேப் பிடிச்சிருக்கு. உனக்கு அவா பிள்ளையைப் பிடிச்சிருக்கோ ?' என்று கேட்டான்.

'ஓ' பிடிச்சிருக்கே அண்ணு! அவருக்குக்

கால் இல்லேன்னு என்ன? எனக்கும்தான்் சமர்த்து இல்லே - அப்போ இரண்டுக்கும் சரியாப்ப் போச்சு ல்லே?" என்றவாறு

அவள் நாணிக் கொன்டே உள்ளே வ்ேகமாக ஒடி விட்டாள்.

அசடோ எதுவோ ? அவள் அவன் உடன் பிறப்பு. அவள் முகத்தில் மலர்ச்சியைக் கண்டதும் அவன் உள்ளம் ருக்குவை அழகி யாகவே ஏற்றுக் கொண்டது.

உற்ருரும், உறவினரும் சங்கரை ஒரு தியாகியாகவே மதித்தனர். "தங்கைக்காக இந்தக் காலத்தில் - இந்தச் சினிமா யுகத்தில்எவன் இப்படித் தியாகம் புரிவான் என்றெல் வாம் பேசினர்.

பன்னிரண்டு வருஷங்களுக்கப்புறம், அவ னுடைய மூத்த மகள் பாவாடை கட்டிக் கொண்டிருந்தவள் தாவணி அணிய ஆரம் பித்த பிறகு சங்கரிடம் இலேசாகச் சில மாறுதல்கள் தோன்றியவுடன் ருக்குவை அவை வியப்பில் ஆழ்த்தின.

ஒரு நாள் அவன் அலுவலகத்திலிருந்து வரும் போது பை நிறைய அழகுச் சாதனங் களே வாங்கி வந்தான்். கஸ்துரி மஞ்சளும், பயற்றம் மாவும் பூசிக் கொண்டு ஆரோக்கிய மாகத் திகழ்ந்து வந்த குடும்பத்தில் இப்படி நோட்டு நோட்டாகப் பவுடர் ஸ்னேவுக்குப் பணம் போகிறதென்றால் ருக்குவால் பேசா மல் இருக்க முடியவில்லே.

மறு நாள் க்ால்ேயில் அவன் படுக்கையில் படுத்தபடியே காப்பிக்காகக் காத்திருந்தான்். நக்கென்று ஆவி மணக்கும் காப்பியைக் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்து

விட்டு நகர்ந்து நின்ருள் ருக்மிணி. காப்பி முன்னைப்போல் பொன்நிறத்தில் துரைததும்ப இல்லை. கொஞ்சம் தண்ணிக் காப்பிதான்்.

"'என்ன இது? காப்பியா ?' "ஆமாம்....இப்படிச் செலவு பண்ணில்ை தண்டத்துக்கு. வயிற்றுப்பாட்டைக் குறைச் சுத்தான்் ஆகணும்.'"

"'என்ன ஆமாம்? டம்ளரிலிருந்து வாய்க்கு இறங்காது முன்னேயெல்லாம். திக்காக நாக்கை ஒரு சுழற்று சுழற்றும். நம் வீட்டுக் காப்பி ஸ்பெஷல்னு என் சிநேகிதாள்ளாம் சொல்லுவா."

'சொல்லுவா... சொல்லுவா... இப்போ ஒண்ணுந்தரக் காப்பிக் கொட்டை வெளிநாட் டுக்குப் போறது. ஒண்ணுந்தர டியும் அங்கே

தான்் போறது. அப்புறமா ஒண்ணுந்தர மிளகு, ஏலம், முந்திரி எல்லாமே டால் சம்பாதிக்க வெளிநாட்டுக்கு ஒடறதுகள்

நமக்கு எல்லாமே இரண்டாந்தரம்தான்்-'

சங்கர் அவளே சுவாரசியமாகத் திரும்பிப் பார்த்தான்். மூத்த மகள் தம்பூரில் சுருதி

சேர்த்துக் கொண்டிருந்தாள். மற்றதுகள் படித்துக் கொண்டிருந்தன. பூஜையறையி லிருந்து ஊதுவத்தி மணத்தது. பிச்சிப்

பூச்சரம் ராம பிரானின் படத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்து ஒரு கிள்ளு எடுத்துக் கோடரி முடிச்சின் கீழ் ருக்கு மடித்து வைத்திருந்தாள். சங்கர் சிரித்தபடி மனேவியைப் பார்த்து, "இங்கே வாயேன் சொல்கிறேன். இப்படி முடிச்சுப் போட்டுக் காமல் உயரத் துர்க்கிக் கொண்டை போட்

டுக்கணும். மல்லிகைச் சரத்தை ஒரு சுற்று வளைத்துச் சுத்திக்கனும். கொஞ்சம் லேசா 'வாக்டோ காலமின்' பூசிண்டு, பவுடர் போட்டு, மை தீட்டி, பொட்டும் இட்

டுண்டா இன்னும் எப்படி அழகா இருப்பே தெரியுமா ?"

அவள் விக்கித்து நின்ருள். ஒரு தாம்பத்திய வாழ்க்கையில் பன்னிரண்டு வருஷங்கள் - ஒரு மகாமகக் காலம் - குறைந்ததல்ல. மகப் பேது, பற்ருக் குறை, களிப்பு என்று எத் தன்யோ தினசரித் தொல்லைகளைச் சமாளித்து எதிர்த்து வாழ்ந்துவிட்ட இறந்த காலம் அந்தப் பன்னிரண்டு வருஷங்கள். இத்தனை நாட்களாக ருக்குவை அவன், "நீ இப்படி அழகு பண்ணிக்கோ - இப்படி சிரி, எனக்குப் பிடிச்ச மாதிரி புடவை வாங்கிக்கோ என்று சொன்னதில்லை. ஏன்? இருவரும் அதிகமாகப் புற அழகைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. "'என்ன பேசமாட்டேன்கிறுே ?" "அப்போ நான் அழகாயில்லேயா ? என்று கேட்ட ருக்கு சட்டென்று உள்ளே தம்பூர்ச் சுருதியுடன் பாடும் தங்கள் மகள் எங்கே கவனித்துவிடப் போகிருளோ என்று பயந்தாள். அந்தக் காலத்துப் பன்னிரண்டு வயசுப் பெண்ணின் மனத்துக்கும் இந்தக் காலத்துப் பன்னிரண்டு வயசுக்கும் ரொம்ப வித்தியாசமுண்டே ! பிஞ்சு காயாகாமல் வெம்பிப் பழுத்துவிடும் மனுே நிலைதான்ே இந்தக் காலம்? o

"யார் அப்படிச் சொன்னது ? இன்னும் அழகா இருப்பேன்னேன் - ருக்குவுக்கு மேலும் அந்தப் பேச்சை வளர்க்க விருப்ப மில்லை. பிறகு அவள் கணவனே உன்னிப்பாகக்