பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவனிக்க ஆரம்பித்தாள்: மணிக் கணக்கில் கண்ணுடி முன்பு நின்து தலேயை இழைய ழைய வாருவது. பவுடர், வாசசீனத் தைவத்தை அள்ளிப் பூசிக் கொள்வதுஇதெல்லாம் அ வ ளு க் கு வியப்பாகவும், விந்தையாகவும் இருந்தன.

சில நாட்களுக்குப் பிறகு மகள் அவ ளிடம் ஒரு புதுச் செய்தியைக் கூறினுள். "அப்பா ஸ்கூட்டரின் பின்னுடி ஒரு மாமி யோடு பீச்சுப் பக்கம் போயிண்டிருந்தார். நாங்க இன்னிக்கு உல்லாசப் பிரயாணம் போயிட்டு அ ந் த ப் பக்கமாகத்தான்் திரும்பி வந்தோம்

ருக்குவுக்கு பார்பை அடைப்பது போல் இருந்தது. 'இன்னும் அழகா இருப்பே-'

அப்படியென்றால் அவள் அழகாக இல்லை. 'ஏம்மா பேசமாட்டேங்கிறே ?' என்று மகள் உசுப்பியதும், "ஒண்னுமில்லேடி. பாட்டு வாத்தியார் வந்துடுவார். நீ போய் டி.பன் காப்பி, சாப்பிடு போ' என்று ஒரு வாறு சமாளித்து அவளை அனுப்பிவிட்டு நிலைக் கண்ணுடியின் முன்பு போய் நின்று பாகக ஆரபட்ததாள.

மிகவும் சாதாரணமான நெற்றியெங்கும் தவழும் சுருள் கற்றை களோ, விற்களைப் போல் வளைந்த புருவங் களோ, பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும் பார்வையோ ஏதுமின்றி அடக்கமாக, அலையெறியாத் தடாகம் போல், பகட்டில்லா நிலவொளி போல் தன்னுள்ளேதான்் லயித் துப் புறத்தைப் பார்க்காத ஒரு தன்மை அவளிடம் காணப்படுவதை அவளால் உணர முடிந்தது.

ஒரு குடும்பப் பெண்ணுக்கு, ஏன் ஒரு கடமை தவருத மனைவிக்கு, கருத்துள்ள தாய்க்கு இதைவிட அழகு எதற்கு என்று ஒரு கேள்வியைத் தன்னை நோக்கியே வீசிக் கொண்டாள் அவள். -

உள்ளேயிருந்து டிபனை முடித்துக் கொண்டு வந்த மகள், 'அம்மா அந்த மாமி ரொம்ப அழகா இருந்தா அம்மா. நம்ப. நம்ப ஜெயலலிதா மாதிரி மழு மழுன்னு மூஞ்சி... பளபளன்னு மின்னித்து. ரொம்பச் சின்ன மாமிதான்். நீதான்் நைலான் கட்டிக்கிறதே யில்லே. அவள் கட்டிண்டிருந்தாள். ரொம்ப நன்னுயிருந்தது' என்று வர்ணிக்கவும், சரி, போடி ஊர்க் கதை யெல்லாம் பேசிண்டு. எத்தனே நாள வாதாபி கணபதி சொல்விப்பே. போய்ச் சாதகம் பண்ணு போ ' என்று எரிந்து விழுந்தபடி யோசனையில் ஆழ்ந்தாள் அவள்.

தான்் அழகாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட வில்லை. அவன் ஆசைப் படுருென். அவனுக்காக அவள் மாற வேண்

G தாற்றம்.

டும். அட்டென்று அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக, உள்ளே திரும்பி மகளிடம், நான் கடைத் தெருவுக்குப் போயிட்டு வரேன். அப்பா வந்தால் டி.பன் காப்பி கொடு....' என்று கூறிப் பையில் நோட்டுக்

கற்றையைத் திணித்தபடி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

அன்றுதான்் அவள் கடைகளே மிகக் கவனமாக ஆராய்ந்தாள். பெண்களிடம் இயற்கையாகவே இருக்கும் அழகை மேலும்

அவன்

கவர்ச்சியுடன் எடுத்துக் காட்ட இல்லா ததை இருக்கும்படி செய்ய, பிறரைச் கண்டி இழுக்க, திரும்பிப் பார்த்துச் சிரிக்க ரசிக்க எல்லாவற்றுக்கும் அழகு ஒரு கடைச சரக்காக மலிந்து விட்டதை உணர்ந்தாள்? =

அவள் நுழைந்த கடை வாசலில் வைக்கப் பட்டிருந்த பெண்களும் பொம்ழைகள்தாம்! ஒர் ஆண் பொம்மிையை நிறுத்திச் சூட்டும்,

கோட்டும் போட்டு வைத்தால் என்ன ? ஆண்களிடம் அழகு இல்லையா ? கவர்ச்சி இல்லையா P சில விநாடிகள் சங்கரின்

உருவம் அவள் மனக் கண் முன்பு தோன்

றியது. எப்படிப்பட்ட அழகன் அவன் : சின்னப் பெண் ஒருத்தியை மயக்கித் தன் பின்னுல் ஸ்கூட்டர் சவாரி செய்ய வைத்

திருக்கும் அழகனுயிற்றே !

அழகுச் சாதனங்களிலிருந்து அயல்நாட்டு நைலக்ஸ் வரை வாங்கிப் பையில் நிரப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் அவள். சங்கர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. இஜிய குழந்தைகள் உணவருந்தித் தாங்கிவி படார்கள். மகளும் படுத்து விட்டாள். ருக்கு நிதான்மாகத் தலே விேக் கொண்டை போட்டு, மல்லிகைச் சரத்தைச் சுற்றி. பவுடர் பூசி, செஞ்சாந்துத் திலகமிட்டு, நெற்றியில் இரண்டொரு குழலைச் சுருட்டி வைத்து, நைலக்ஸ் புடவை கட்டி முடிக்க வும் வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.

அவன் வாசல் கதவைத் திறந்த மனைவியை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அடி பட்டுத் தப்பியோடிய புலியின் சிற்றம்

பெருமூச்சில் தெரிந்தது. ருக்குவும் அவன் எதிரில் அதிகம் நட மாடாமல் சாப்பிடும் தட்டில் உணவு வகை களைப் போட்டு எடுத்து வந்து படுக்கை யுறை மேஜையின் மீது வைத்தாள். அந்த வீட்டில் அன்ன் நேரம் கழித்து வரும் இரவு களில் அப்படியொரு வழக்கம் உண்டு. அவனுக்கு நல்ல பசி. தலை நிமிராமல், பேசாமல் சாப்பிட்டான். பரிமாறும் வளைக் கரத்தில் தவழும் புதிய போலிக் ஆங்கணத் தைக்கூட அவன் கவனிக்கவில்லை. அதிலிருந்து பலவகை நிறம் கொண்ட கற்கள் இலேசான நீல நிற வெளிச்சத்தில் பளிச்சிட்டன.

சாப்பிட்டு முடித்தவுடன் பீடா உருவத் தில் வெற்றிலைச் சுருளே அவனிடம் தந்தாள் மனைவி. அந்த வீட்டில் அப்படியொரு புக் கம் கிடையாது. பாக்கு, வெற்றிலே, சுண்ணும்பு வெவ்வேருக வைக்கப்பட்டிருக் கும். சில சமயம் ருக்கு மடித்துத் தருவாள்? அதது அவளுடைய வேலே காலத்தைப் பொறுத்தது. அவன் நிமிர்ந்து பார்த்தான்். ருக்குவும் பார்த்தாள். முகமெங்கும் வியர் வைத் துளிகள் அரும்பியிருந்தன.

'ருக்கு என்ன இதெல்லாம்?' என்றபடி அவன் அவளேச் சீற்றத்துடன் பார்த்தான்்:

எதெல்லாம் ?' "இந்தக் கண்ருவி யெல்லாம் - ' 'எந்தக் கண்ருவி "ஏய் ! என்னடி விளேயாட்டு ? என் னமோ வேஷம் போட்டுண்டு.... சகிக்கலே. து.....'

' என்ன துர ?' என்று அவள் நிதான்

மாக அவனைப் போலவுே பேசிளுள்.