பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்த்தேன். அவன் அதை நினை வில் வைத்துக்கொண் டிருக்கிருன். அந்த நாளிலிருந்தே உன் தாய்க்கு அவனேக் கண்டால் ஆகாது. நீயா வது கல்யாணத்துக்குப் போய்விட்டு வா...' என்றார், |

ரகுநாதன் சரி என்று ஒப்புக் கொண்டான். -

சிறிது நேரத்திற் கெல்லாம் தாய் அவனே ரகசியமாக அழைத்து, 'உன் சித்தப்பா கஞ்சன்; இந்தக் குடும்பத்து உப்பைத் தின்று வளர்த் தவன், இந்தக் குடும்பத்துக்குக் காலணு வுக்குச் சப்திருக்கமாட் டான். அவன் ட்டுக் கல்யாணத் துக்குப் போகாதே. உன் அப்பா

சொன்னுல் கேட்காதே...' என்று உபதேசித்தாள்.

"யார் சொல்வதைக் கேட்பது?

அப்பா சொல்வதையா? அம்மா சொல்வதையா?" என்பது புரியாமல் திகைத்தான்் ரகுநாதன்.

ரகுநாதன் தாயின் கோபத்துக்குப் பயந்தான்். சிற்றப்பா வீட்டுக்குப் போப் விட்டு வந்த செய்தி எப்படி யாவது அவளுக்குத் தெரிந்துவிடும். பிறகு, அவள் எதிரில் தான்் நிற்க முடியாது என்பதை உணர்ந்து, கல்யாணத்துக்குப் போகாமலேயே இருந்துவிட்டான்.

மகன் ஒரு கோழை. எதையும் சுய புத்தியுடன் செயலாற்றும் திற மைசாலி அல்ல என்பதை அவன் தந்தை அறிந்துகொண்டு, அதே ஏக் கத்தில் போய்விட்டார்.

மேற்படி கல்யாண விஷயமாவது ரகுநாதனின் வாழ்க்கையைப் பாதிக் கக்கூடியது அல்ல. ஆனால், அவன் சொந்தக் கல்யாண விஷயத்திலேயே பராமுகமாக இருந்தான்். அவர் கள் வீட்டுக்கு அருகில் அவனுக்கு மனைவியாகப் போகின்றவளின் குடும்பத்தினர் வசித்தனர். வேண் டிய மட்டும் பொன்னும் பொரு ளும் படைத்தவர்கள். வீட்டுக்கு ஒரே பெண் குழந்தை.

அளவுக்கு மீறிய சலுகை காண் பித்து வளர்த்துவிட்டார்கள். பெண்மைக்கு இருக்க வேண்டிய இரக்க உணர்ச்சியே அந்தப் பெண் னிடம் வற்றிவிட்டது. யாரைப் பார்த்தாலும் அடிப்பாள். எதைப் பார்த்தாலும் சிரிப்பாள். தெருப் பையன்களை,யெல்லாம் நையாண்டி செய்வாள். அவளே வாயைத் திறந்து யாராவது ஏதாவது கூறி

86

விட்டாலோ, இடுப்பின் குடத் தில் இருக்கும் நீரை, அவர் கள் மீது ஊற்றிவிட்டுப் போப் விடுவாள். இந்தப் பெண்ணுக் கென்று எந்தப் புண்ணியவான் பிறந்து இருக்கிருளுே' என்று ஊரார் ஏசுவார்கள். இம்மாதிரி குணவதியான ஒரு பெண்ணேத் தன் மகனுக்கென்று தேர்ந்து எடுத்தாள் ரகுநாதனின் தாய்.

ரகு! அம்மணியை உனக்கு நிச் சயம் செய்தாகிவிட்டது. நாளைக்கு "நிச்சய தாம்பூலம்' மாற்ற வருகிருர்கள். எங்கேயாவது போய்விடாதே' என்று எச்சரித் தாள் அவன் தாய்.

சமையலறை நிலைப்படியைப் பிடித்துக்கொண்டு நின்றவன், அப் படியே சிறிது நேரம் நின்ருன்.

"என்னடா: வாயைத் திறக்க வில்லே! தாப் அதட்டியவாது கேட்டாள்.

சரி. . அம்மா . .' ரகுநாதன் மனத்தில் ஆயிரமாயிரம் போராட் டங்களுடன் வெளியே போய்விட் டான். அவன் நண்பர்கள் அவனைத் "தாய்ச் சொல்லைத் தட்டாத தன யன்' என்றும், 'ஏமானி' என்றும் ஏசியதை யெல்லாம் சகித்துக் கொண்டான். அடுத்து சில நாட் களில் அம்மணியின் கரம் பற்றி ஞன் ரகுநாதன்.

அம்மணி அவனுடன் வாழ்க் கை நடத்த வந்த சில மாதங்களி லேயே, அவள் தன் தாயின் ஸ்தா

னத்தைக் கைப்பற்றிவிட்டாள் என்பதும் அவனுக்குத் தெரிந்து விட்டது.

அங்கே போகாதீர்கள்! இங்கே வராதீர்கள்! அதைச் செய்யாதீர் கள்! இதைப் பார்க்காதீர்கள்!" என தடை உத்திரவுகளைப் போட்டு வந்தாள். 'பிள்ளேக்குச் சுயபுத்தி இல்லை' என்று ரகுநாதனின் தாய் மருமகள் வந்த பிறகுதான்் உணர்ந் தாள். அதைப் பலரிடம் சொல்விச் சொல்வி ஆற்றிக் கொண்டாள்.

அம்மணியின் ஆட்சிதான்் அந்த வீட்டில் நடைபெற்றது. அவளே அறியாமல் ரகுநாதன் ஒரு காலணு

செலவு செய்யமுடியாது. வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ருலும்,

அம்மனி மனசு வைத்தால் தான்் நடக்கும். முன்பு அவன் தாப்,