பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைப்போல ஒருவனுக்கு வாழ்க்கைப்பட் டாள். காலம் வாழ்ந்தாள். ஒரு பூவோ, பிஞ்சோ தளிர்க்கு முன்பே தனி யாகி விட்டாள். அவளைத் தனிமைப் படுத்தியவன் தெருவிலே நிறுத்தாமல் சோற்றுக்கும், துணிக்கும் வைத்து விட் டுத்தான்் போனன். சோறும், துணியும் மனித வாழ்வின் முதல் தேவையாக இருந்தாலும், அது கிடைத்த பிறகும் அந்த வாழ்வு பூரணத்துவம் அடைவ தில்லையே.

இப்படித் தனி மரமாக இருக்கிருேமே என்று வேதனைப்பட்டு நாட்களைக் கழித் துக் கொண்டே வந்து விட்டாள். ஒவ் வொரு உயிரும் ஏதோ ஒர் ஆதங்கத் துடன் உலகில் பிறக்கிறது. நன்ருக வாழ்ந்துவிட வேண்டும் என்று துடிக் கிறது. ஆனால், அவற்றின் வாழ்க்கைப் பாதையில் எத்தனை ஏற்றங்கள். இறக் கங்கள் இவள் வாழ்விலே ஏற்றமே காணவில்லை. ஒரே பள்ளம்தான்். இட்டு நிரப்ப முடியாத பெரும் பிளவு.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அபிராமியும், அவள் கணவனும், குழந்தைகளும் அந்த ஊருக்கு வந்தார் கள். மாட்டு வண்டியிலிருந்து அவர்கள் இறக்கிய சாமான்களைப் பார்த்தவுடன் கல்யாணிக்குப் புரிந்து போயிற்று, வளர வேண்டிய அந்தக் குடும்பத்தைப் பற் ருக்குறையும், ப. சி யு ம், பாடுபடுத்திப் பேயாட்டம் ஆடி இருக்கின்றன என்று. ஒடிந்த மனேகள், ஒட்டைத் தகர டப் பாக்கள், கிழிந்த சாக்கில் நசுங்கிய பாத் திரங்கள், படுக்கை என்கிற பெயரிலே வெறும் கந்தல்கள். |

காற் வாக்கிலே கல்யாணியின் காதில் விழுந்த செய்தி இதுதான்்.

பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து வந்தாளும் அபிராமியின் கணவன். ஒரு வார ஜுரத்தில் கால் இ மு. த் து க் கொண்டு விட்டதாம். அபிராமி குடும்ப பாரத்தைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டு விட்டாள். சிட்டுக்கள் போல துளித் துளியாய் நிற்கும் மூன்று பெண் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு அபிராமி ஒடி ஒடி உழைக்கிருள். ஒரு விட்டில் பிறந்த நாள் என்றால் விடிய நாலு நாழிகைக்கே எழுந்து, கணவனுக் கும், குழந்தைகளுக்கும் ச ைம த் து வைத்து விட்டுப் போய் விடுவாள்.

மாலே அவள் வீடு திரும்பும்போது பையில் தின்பண்டங்களும், முகத்தில் மலர்ச்சியும் கொண்டு வரத் தவறியதே யில்லை. முகத்தில் சிரிப்பு ஒன்றுதான்்

86

வற்ருமல் இருக்கும். வீட்டில் ஒன்று மிராது. சமையலறையில் டப்பாக்கள் ஒழுங்காகக் கொலுவிருந்தாலும், தன் னுள்ளே சூன்யத்தை நிரப்பிக் கொண்டு அமர்ந்திருக்கும். எதிரும் புதிருமாக அமைந்திருந்த இவர்கள் இருவருடைய வீட்டிற்கும் ஏகப்பட்ட ஒற்றுமை, கல் யாணிக்குப் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லே. அவளுடன் பகிர் ந் து உண்ண யாருமில்லையே என்கிற ஏடகம் தான்் அவளுக்கு. பகிர்ந்து சாப்பிடக் கணவனும், குழந்தைகளும் இருக்கும் அபிராமிக்கோ வயிருர உண்ண உன வில்லை என்கிற ஆதங்கம்.

எப்படியோ இருவருக்கும் ஒற்றுமை இருந்தது!

' கஞ்சி வாய்க்குப் பிடிக்கிறதா மாமி ஜுரம், தலைவலி என்றால் என்னை ஒரு குரல் கூப்பிடக் கூடாதா? அபிராமி பரிவுடன் கேட்கிருள்.

" சமையல் அறை வலை பீரோவில் நேற்று பால் பிரைகுத்தி வைத்திருக் கிறேன். கறிகாயும் வாடி வதங்கிப் போகும். எடுத்துப் போயேன் . .' என் கிருள்.

ஒரு துளியாக ஆரம்பித்த நட்பு, மகன யாக வளருகிறது. நாட்கள் பிறந்து மடிகின்றன. ஆனால், பாசமும், அன்பும் பிணைந்து கொண்டு வளருகின்றன. இரு வரும் மனத்தில் ஒன்றிப் போகிரு.ர்கள்.

கல்யாணிக்குத் தான்் ஒண்டிக்கட்டிை என்கிற எண்ணம் மல்ல மெல்லத் தேய்ந்து வருகிறது. அபிராமி இருக்கி ருளே !

மாதம் வளர வளர அபிராமி இளைத் துக்கொண்டே வருகிருள். - "" அடியே அபிராமி எட்டு மாசம் ஆகிறதடி உனக்கு. பேசாமல் விட்

டோடு விழுந்து கிட. . . . கடுமையா கக் கல்யாணி எச்சரிக்கிருள்.

அவள் விழுந்து கிடந்தால் ஐந்து வயி றுகள் நிரம்ப வேண்டுமே ? ஒரு குடும்பத்துக்கு இன்னொருவர் இட்டு

நிரப்ப முடியுமா ? தீராத பிரச்னையாகி விட்ட இல்லாமையை இந்தக் கல்யாணி யின் பரிவும், உதவியும் எப்படிப் போக் கடித்து விடும் ?

இதயம் விம்மித் தணிகிறது அபிரா மிக்காக. சூ ம் பி ப் போன காலும், கோனிய வாயுமாக இருக்கும் அபிராமி யின் கணவனைப் பார்க்கும்போதெல் லாம் கல்யாணிக்கு வேதனையும், கோப மும் கொப்பளித்து எழுகின்றன.