பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' குவா குவா!' உலக வனத்திலே அரும்பிய மொட்டு ஒன்று மலர்ந்து விட் டது. கல்யா குழந்தையைப் பார்க் கிருள். ஆண் குழந்தை. அபிராமியின் அழகையும், தகப்பனின் வாட்ட சாட்ட மான உடலேயும் கொண்ட அழகுக் குழந்தை. சட்டென்று அபிராமியைப் பற்றிய நினைவு வருகிறது அவளுக்கு.

" அபிராமி அபிராமி! '

புதிய ஒன்றைப் பார்க்கும் வேகத்தில் பழைய ஒன்றின் நினைவை மறக்கச் யும் மாயை !

செய்

அபிரா மியின் கையைப்

டாக்டர். பிடித்துக் கொண்டே நிற்கிரு.ர். உணர்ச்சிகளைத் தாண்டிய நிலையில்

அவர் நின்ற நிலை விடை அளித்து விடு கிறது. ஜனனத்தின் தோற்றுவாய் மரணத்தின் விளிம்பிலே நின்று பேய்க் கூச்சல் இடுவதை அறிந்து கொள்கிருள் கல்யாணி.

காலேயில் தன்னைப் பார்த்துப் பேசிச் சிரித்தவளின் உடல் அவள் எதிரே கிடக்

கிறது. வாழ்ந்து ஒய்ந்து போனவிளின் அருகில் வாழ வந்திருக்கும் புது உயிர் குரலெழுப்பி தன் வர்வை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

ஊரார் . உறவினர்கள் வந்து காரி யத்தை முடிக்கிருர்கள். சம்பிரதாயத் துக்காக வந்தவர்கள், அது முடிந்தவுட ன் விலகி விட்டார்கள். அவனும், அந்தக் குழந்தைகளும் மட்டுமே தனியாக நின் ருர்கள்.

கல்யாணி பசும் பாலை எடுத்துக்

கொண்டு வருகிருள் குழந்தைக்கு. நெளிந்துநெளிந்து அதுதாய்ப் பாலுக் காக அழுது கொண்டிருக்கிறது.

பெற்றவனே இருந்த இடத்தை விட்டு அசையாமல் உட்கார்ந்திருக் கிருன். பாலைப் புகட்டி விட்டுத் துணி யில் வைத்து அணைத்து அதை எடுத்து வருகிருள் கல்யாணி.

இப்படி இருந்தால் முடியுமா அப்பா? இந்தக் குழந்தையின் வேதனை யைக் கவனிக்காமல் உட்கார்ந்திருக்கி ருயே தந்தையும் தாயுமாக இருக்க வேண்டியவனுயிற்றே நீ ! . . .

எப்பொழுதும் போல முனகுகிருன் அவன். கல்யாணி ஏதோ ஒரு வேகத் திலே அதைத் தன் வீட்டுக்குள் எடுத் துப் போகிருள்: "நாளே. மறுநாள். . பெற்றவன் வந்து கேட்டால் ? என் கிற எண்ணமே அவளுக்கு எழவில்லை. மனைவிக்காக அவன் உருகுகிருனு ? நாளேக்கு நமக்கு உழைத்துப் போட யார் இருக்கிருர்கள் என்று வேதனைப் படுகிருஞ புரியவில்லை. அவளுக்கு,

தாயாக வேண்டும் என்று ஒரு காலத்தில் அங்கமெல்லாம் உருக் அவன் அருளே வேண்டிய கல்யாணி

இதோ எளிதில் தாயாகி விட்டாள். வேண்டுமென்றே யாரோ சுமத்தி விட்ட பதவி !

நாட்கள் ஒடுகின்றன. குழந்தைஅபிராமியின் குழந்தை - இப்பொ ழுது கல்யாணியின் செல்வகை வளரு கிருன். பல மாதங்கள் வரை அவன் பெயரில் குழந்தையாகவே வளருகிருன். அபிராமியை உரித்து வைத்திருக்கிறது. ஏதோ ஒரு பெயர் வைத்து அழைக்க வேண்டாமா? கல்யாணி யோசிக்கிருள். என்னவோ ஒன்று மூளையில் பளிச்சிடு கிறது.

பூரீராமன் அற்புதமான பெயர். பூரீராம். .' என்று வாய் நிறைய. குளிர அழைக்கிருள்.அவள்.ழரீராமனுக்கு