பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீதப் பேராசிரியை: சங்கீதம் ஒரு

குடும்பத்தை இன்பத்தில் ஆழ்த்துகிறது. எப்படி? -

|

| மானவி: சம்பந்த | மாகவும் கணவன் மனைவிக்குப் பக்க

வாத்தியம் வாசிப்பதால்! -- - -- |

எந்தக் காரியம்

பாட்டுமாக அமர்க்களப்பட்டுக் கொண் டிருந்தது. -

மதுரம் நேராகச் சங்கக் கூட்டத்துக்குப்

போய் உட்கார்ந்தாள். கிராமத்தினருக்குப் பால்வா டி டீச்சரிடம் மிகவும் மதிப்பு. ஒழுகும் மூக்கும், பரட்டைத் தலையும் உள்ள குழந்தை கஃாத் துப்புரவாக மாற்றி இரண்டு வேனேகள் தலைவாரவும் குளிக்கவும் பழக்கம் ஏற்படுத்திய

பெருமை மதுரத்தைச் சார்ந்தது. அடிக்கடி மாதர் நல இலாகா தல்வி மதுரத்தைப் பாராட்டிப் பேசுவாள். "ஒட்டிவாக்கம்

கிராமத்திலே பால்வாடியும், தையல் செண்ட ரும் நன்ருக 'ஒர்க் பண்ணுது. மதுரம் டீச்சர் மாதிரி நாலு உண்மைத் தாண் டர்கள் இருந்தால், கிராமத்தைச் சீக்கிரம் முன்னுக்குக் கொண்டு வரலாம்' என்று அந்த அம்மாள் ஏதாவது பேசிக் கொண்டே யிருப்பாள்.

எந்தப் பெருமையையும், சிறுமையையும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்கு வத்தை மதுரம் பெற்றிருந்தாள். ட்டி வாக்கம் கிராமம் அவள் சேவையை ஹா வென்று புகழ்கிற பெருமையை, அவள் சில வருஷங்களுக்கு முன்பு அனுபவித்து விட்டு வெளியே வந்த சிறுமைக்கு ஈடு கட்ட முடியவில்லை. -

பெருமை பாட்டுக்குப் பெருமை. சிறுமை பாட்டுக்குச் சிறுமை! கணவன் மனைவியைத் தள்ளி வைக்க ஆயிரம் காரணங்கள் உண்டு. மனைவி கணவனைத் தள்ளி வைக்க இன்னமும் காரணங்கள் அகப்படாது. சகித்துப் போகவே பழக்கப்பட்டுவிட்ட நம் நாட்டுப் பெண்கள் எந்தச் சட்டம் வந்தாலும் அதைத் தங்களுக்குச் சாதகமாக, ஆயுதமாகப் பயன் படுத்திக்கொள்ளத் தயங்குகிருர்கள்.

அசோக வனத்தில் அன்னையின் பவித்திர மான தன்மையை நேரில் கண்டு வந்து உரைத்த அனுமான் எதிரிலேயே பூரீராமன் தியைச் சுட்டிக் காட்டி அதில் அவளைக் குளிக்கச் செய்த நாட்டிலே பெண்களின் சகிப்புத் தன்மைக்கு நூற்றுக்கு நூறு மார்க்குகள் போட்டுத்தான்் ஆக வேண்டும்.

மதுரம் ஒரு குழந்தையுடன் வெளியே துரத்தப்பட்டு வந்து விட்டாள். 45лтрт багт காரியங்களை ஆராய்ந்து கொண்டிருக்க வேண் டாம். அவரிடம் ஒர் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. எங்கே, எந்தத் தொழில் செய்து வாழ்ந்தாலும் தன்னுடைய பெய ருக்கு, தன்னுடையவரின் பெயருக்கு இழுக்கு இல்லாமல் வாழ வேண்டும் என்கிற உறுதி யான எண்ணத்தில் மதுரம் தன்னந்தனியே உறவினர் யாருடைய தயவும் இன்றி இந்தக் கிராமத்தில் ஒதுங்கிக் கொண்டாள்.

மூன்று நான்கு வருவiங்களாக அவளே யாரும் வந்து பார்க்கவில்லை; அதைப் பற்றி அவள் கவலைப்படவும் இல்லை.

காலையிலே விட்டுக் கூரை மீது காக்காய் வந்து உட்கார்ந்து கூவியது. வீட்டுக்காரர்

மகள், 'அக்கா1 அக்கா! உங்கள் வீட்டுக்கு விருந்தான்ி வருவாங்க. அதுதான்் காக்கா கத்துது' என்று கூறியதும் மதுரம் சிரித்துக்

கொண்டாள். 'என் வீட்டுக்கு விருந்தாளி யார் என்னைத் தேடி வரப் போகிரு.ர்கள்?" மெல்ல முணுமுணுத்தவள் பிறகு அதை மறந்து விட்டாள்.

மாதர் சங்கக் கூட்டம் ஆரம்பமாயிற்று. பேச்சுகள், முழக்கங்கள் வழக்கம் போலப் பேசப்பட்டன. முழங்கப்பட்டன.

- மதுரம் கூட்டத்தின் சுவாரசியத்தில் ஈடு பட்டிருந்தவள் திரும்பிப் பார்த்த போது ஜியைக் காணுேம். பரபரப்புடன் எழுந்து தெருவுக்கு வந்ததும் அங்கே விஜியின் கையைப் பிடித்தவாறு ஓர் இளைஞன் நின்றிருந்தான்்.

மதுரம் சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்தான்். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அவனே அவளுக்கு அடையாளம் தெரிய வில்லை.

"'என்னைத் தெரியவில்லையா மன்னி. உங் களுக்கு. . .?'

மதுரம் குழம்பித்தான்் போளுள். அவ ளுக்கு மைத்துனனே கிடையாது. அவள் கணவனுடன் உடன் பிறந்தவர்கள் யாரு மில்லையே...!

விஜி அவன் கையைப் பிடித்துச் சுழற்றிய

வாறு நின்றிருந்தாள். பெரிய பிஸ்கோத்துப் பாட்டலம் கிடைத்த மகிழ்ச்சியில் அவள்

ஒரு நாட்டியமே ஆடிக் கொண்டிருந்தாள்.

'வாருங்கள், வீட்டுக்குப் போவோம். .. தெருவிலே பேச வேண்டாம்....."

இருவரும் மெளனமாகவே நடந்தார்கள். தொலைவில் மாதர் உரிமைக் குரல் ஒலி பெருக்கியில் கேட்டுக் கொண்டிருந்தது.

'எந்த உரிமையை யார் பறித்து விட் டார்கள் மன்னி? பெண்ணுக்கு நம் புராண இதிகாசங்களில் இருக்கிறி-கொடுத்திருக்கிற பெருமை வேறு எந்த நாட்டுக்கு....' இளைஞ னைப் பேச விடவில்லே மதுரம்.

"அதை யெல்லாம் பற்றி ஆராய வேண டாம். இல்லாத உரிமைகளைத் தேடித் தரத் தான்் சட்டங்கள் வந்திருக்கின்றன. இருக்கிற உரிமைகளை இழந்த பிறகுதான்் இந்தச் சட் டங்கள் உதவிக்கும் வருகின்றன. உரிமைக் குரல் அதிகம் ஒலிக்க ஒலிக்க உரிமை இழப்பும்