பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வீண் அபவாதமும், கொள்ள வேண்டும்.'

'அபவாதமும், பழியும் வரும் என்று அவர் களுக்குத் தெரியாதா என்ன? தெரிந்திருக் கும். அதுவும் முன்னேற்றம் என்று முழங்கும் இந்தக் காலத்தில் அறிவு முன்னேறியிருக் கும் இந்த நாட்களில் இம்மாதிரி விஷயங்களை ஒரு முறைக்கு இரு முறை யோசனை செய்து தான்் சப்வார்கள். . . . . என்று சற்றுக் காரமாகவே சொன்னுள் சீதா.

லக்ஷமி தன்னில் தான்் லயித்தபடி உட் கார்ந்திருந்தாள். எத்தனையோ வருஷங்கள்

பழியும் ஏற்றுக்

ஒடி விட்டன. அந்தச் சம்பவம் ஒரு கனவைப் போல - மறந்து விட்ட எண்ணத்தைப் போல் -

அவள் நினைவில் தோன்றியது. பாலத்தின் மீது நிற்கிருளே அந்தப் பெண் னின் வயதுகூடஇருக்காது ல்சுமிக்கு. இந்தக் காலத்தைப் போல் குதிரைவால் கொண்டை போடத் தெரியாது. வழுக்கும் நைலக்ஸ் சேலே உடுத்தும் பழக்கமும் இல்லை. தலையை நேர் வகிடு எடுத்து இழைய வாரி விட்டிருப் பாள். காதுகளில் பட்டைச் சிவப்புக் கம் மல்கள். ஆரணியோ, காஞ்சீபுரமோ நினை வில்லை. அந்த ஊரின் பட்டுப் பாவாடை. பாலத்தின் மீது நிற்கும் பெண்னைவிட இரண்டு மூன்று வயசு குறைவாக இருக் கும். பெண்கள் இரண்டாவது மூன்ருவது படிப்பதே அதிகம் என்று நினைத்த காலம். லசுமிக்கு அந்த நாட்களில் நாடகப் பைத் தியம் அதிகமாக இருந்தது. சினிமா வராத காலமாயிற்றே. இப்பொழுது சினிமா பைத் தியம் பிடித்து அல்ைகிற காலம். வீடு, வாசல், குடும்பம், குழந்தை எல்லாவற்றையும் விட்டு விட்டு முப்பத்தியோராம் தேதிக்ட மாட்னி ஷோவில் பெண்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஆட்டம் பார்க்கச் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நாட் களில் கலையார்வம் ஆண்களுக்கு மட்டுமே உரிமையாக்கப்பட்டிருந்தது. .ெ பண் க ள் நினைக்க முடியாத ஒன்று. லக்ஷ்மிக்கு வெகு நாட்களாக நல்ல நாடகமாக ஒன்று பார்த்துவிட வேண்டும் என்று ஆசை. வீட்டிலிருந்து அவள் தந்தை அடிக்கடி நாட கத்துக்குப் போய் வருவார். நாடக மேடை யில் தலைமை வகிப்பார். வீட்டுக்கு ரோஜா மாலைகளாகக் கொண்டு வருவார். அயன் ராஜபார்ட்டைப் புகழ்வார். ஸ்திரிபார்ட் போட்டவனின் தளுக்கு மினுக்குகளை யெல் லாம் மனத்துக்குள் ரசித்துக் கொண்டிருந் தாலும் மனைவியின் எதிரில் வெறுப்பவர்போல் பாசாங்கு செய்வார்.

லகடிமியின் வீட்டார் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமிக்குப் பாலாற்றில் நடக் கும் திருவூால் உற்சவத்துக்குக் குதிரை வண்டி யில் போப் வருவார்கள். வண்டியின் இருபுற மும் படுதாக்கள் தொங்குகிற வழக்கம். பெரிய மனிதர்கள் வீட்டுப் பெண்கள் அப் படித்தான்் பத்திரமாகப் போய் வருவார்கள். பத்திரம் என்பது வெளித் தோற்றத்தில்தான்் இருந்தது. மனத்துக்குக் காவல் இருந்ததா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

லக்ஷமியின் வீட்டிலே ஒரு ராயர் சமைத் துக் கொண்டிருந்தார். அவர் பிள்ளையும்

லக்ஷ்மியின் வயதுள்ளவன். எடுபிடி காரியங் களுக்காக லசுமியின் தகப்பஞர் அவனையும் தம்முடன் வைத்துக் கொண்டிருந்தார். பையன் விகல்பமானவன் இல்லை. அப்படி யெல்லாம் எண்ணக் கூடிப் வயதும் அவனுக்கு ஏற்படவில்லை.

அந்த ஆண்டு சித்ரா பெளர்ணமியின் போது ஆற்றில் திருவிழா நடந்து கொண் டிருந்தது. ஊருக்குள் சத்தியவான். சாவித் திரி பிரபல நாடக கோஷ்டியினரால் நடத்த ஏற்பாடாகி யிருந்தது. சுவரொட்டிகளுக் காகக் காசைக் கரியாக்க மாட்டார்கள். ஆகவே, ஆபாசம் இல்லாமல் தமுக்குப் போட்டு நாடகத்தைப் பற்றிக் கண்ணிய மாகவே அறிவித்திருந்தார்கள். லக்ஷ்மிக்குச் சுவாமி தரிசனத்தில் மனம் செல்ல வில்லை. வருஷா வருஷம் நினைவு தெரிந்த நாட் களாகப் பார்த்த சுவாமிதான்ே?"

ராயர் பிள்ளை விட்டல் கண்டிப்பாக நாட தத்துக்குப் போவான் என்பது லக்ஷ்மிக்குத்

தெரியும். அன்று வீட்டில் சாதாரணச் சமையல். மைசூர் ரசம், சுட்ட அப்பளம். உற்சவத்தில் பிரசாதங்கள் கிடைக்கும்

என்கிற எண்னத்தில் லக்ஷமியின் தாய்

சாதாரணமாகவே ராயரைச் சமைக்கச் சொல்லியிருந்தாள். சாப்பாடு முடிந்து விட் டது. விட்டல் பின்கட்டில் தன் அறையில்

தலை சீவி, துவைத்த வேண்டியை உடுத்திச் சொக்காப் அணிந்து கொண்டிருந்தான்். கொஞ்சம் பவுடர் போட்டுக்கொள்ள ஆசை. லசுமியைக் கேட்டால் கொடுப்பாள். அவன் கேட்பதற்கு முன்பே லசுமி பவுடர் டப்பியுடன் அங்கு வந்தாள். உற்சவத் துக்குக் கிளம்புவதற்காக அவளுக்கு ராக் கோடி. ஜடை பில்லே, குஞ்சலம் வைத்துப் பின்னியிருந்தார்கள். தலை நிறைய மல்லிகை பும், ருவாட்சியும் மனம் வீசின. கச்சித ான அலங்காரங்களுடன் தன் எதிரில் நிற்கும் லக்ஷ்மியை விட்டல் , பார்த்தான்். தெய்வத் திருவுருவம்போல் நின்று கொண் டிருந்த அவள் எழிலே அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்்.

என்ன விட்டல்? நாடகத்துக்குப் போகி ருயா ? பவுடர் வேண்டுமா ?'

விட்டல் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்். அற்ப ஆசைதான்் என்ருலும் சில சமயங்களில் அதுவே முக்கியமான ஆசையாகவும் ஆகி விடுகிறதல்லவா ?

'இந்தா ! பூசிக்கோ ' என்று மேஜை மீது பவுடர் டப்பாவை வைத்தாள். யார்ட்லி லாவண்டரின் வாசனை புகைபோல் அறை முழுதும் கமழ்ந்தது.

'விட்டல் ! உன்னை ஒன்று கேட்கிறேன். உம்மென்று சொல்லணும். என்னேயும் நாடகக்கக்கு அழைத்துப் போ, விட்டல். . . . எனக்கு ரொம்ப நாட்களாக நாடகம் பார்க்க ணும்னு ஆசை, விட்டல்....' ---

விட்டல் லக்ஷமியைப் பார்த்தான்்."உன் னேயா ? நீ அப்பா, அம்மாவுடன் சுவாமி பார்க்கப் போகலை?' என்று கேட்டான்.