பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிள்ளைகளுக்கு ஒருத்தி வருகிற வரையில் தான்் தாய் தந்தையரின் தயவு வேண்டியிருக் கிறது. பிள்ளைகளாம் பிள்ளைகள்! - "தந்தை பின் வேதனைப் பொருமல் இது.

பெற்ருேச் இருவரும் காசி யாத்திரை கிளம்புவதற்கு முன்பே இரண்டாவது மகன் தன் மனைவியுடன் பம்பாய்க்குப் புறப்பட்டு விட்டான். வெளி உலகம் என்னவோ சாம்ப

சிவம் மருமகள் வாசுகியின் சங்கீதத்தை அபாரமாகத்தான்் புகழ்ந்தது. "அது ஒரு கலேக்குடும்பம். கலைக் கோயில். முதல் மருமகள் ரொம்பப் படித்தவள். பெரிய பெரிய ஆராய்ச்சி யெல்லாம் செய்து வரு கிருள். இரண்டாம் மருமகள் சங்கீதத் தையே கரைத்துக் குடித்தவள். பத்திரிகை

களின் புகழ் மாலைகள் இவை. குடும்பம் என்பது ஒரு தனி உலகம். அதனுள் இருந்து அதைத் திறம்பட நிர்வகித்துப் பணி புரியும் தேவகியின் உடல் அலுப்புப் பற்றியோ, உள் ளச் சோர்வைப் பற்றியோ வெளி உலகம் என்ன கண்டது? .

மகனும், மருமகளும் பம்பாயிலிருந்து வந்தவுடன் சாம்பசிவம் அவராகவே பார்த்து அவர்களே வேறு குடித்தனம் வைத்து விட் டார். சங்கீதத்துடன் அவன் மனைவி சமைய லும் செய்து கணவனுக்குச் சேவை செய்யட் டும் என்கிற கருத்தாக இருக்கலாம்.

மூன்ருவது மகன் சிவாதான்் அந்த வீட் டிலே அம்மா செல்லம். இரவு படுக்கப் போகும் முன்பு அம்மாவின் மடியில் தலே வைத்துப் படுத்தபடி குட்டிக் கதைகள் சொல்லச் சொல்விக் கேட்காமல் போக மாட்டான். o

'போடா எழுந்திருந்து! வயசாகிறது. குழந்தையாட்டம் என்னடா என் மடியில் உனக்குப் படுக்கை - "'

நான் உன் குழந்தைதான்ே அம்மா ? கதை சொல்லும்மா - இந்தச் செல்லக் குழந்தை ஒரு நாள் திடுதிப்பென்று அம்மா விடம் தன் கருத்தை வெளியிட்டது. அவனுக் குத் திடீரென்று காதல் முளைத்து விட்டதாம். அவன் காதலி ஒரு நல்ல டான்சர்' கல்லுரரி யிலே நடனம் ஆடிப் பல பரிசுகளைத் தட்டிய வளாம். ரொம்ப ரொம்ப அழகாம்.

'ஏண்டா அப்பா நீதான்் குழந்தையா? . என்று தேவகி மகனேக் கோபத்துடனும், அத்ே சமயத்தில் பரிவுடனும் கேலி செய்தாள். இந்த விஷயத்தைக் கணவரிடம் மெதுவாகப் பிரஸ்தாபித்தபோது அவர் வெகுண்டார்.

'நம் வீடு இருக்கும் லட்சணத்தில் நடனம் ஒன்றுதான்் பாக்கியாக இருக்கிறது. அதெல் லாம் நமக்குச் சரிப்பட்டு வராது, தேவகி!' என்றார் அவர் பிடிவாதமாக.

"சரிப்படுகிறதோ இல்லையோ. குழந் தைக்கு அதுதான்் பிரியம் என்றால் நீங் களும், நானும் அதற்குத் தடையாக இருப்பானேன்?' -

"ஓஹோ எனக்கு நீ புத்தி சொல்ல வந்து விட்டாயோ? முதல் இரண்டு பிள்ளைளுக்குப் பெண் பார்த்தவனுக்கு மூன்ருவது மகனுக்