பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னேன் என்று எண்ணியவராகச் சாம்பசிவம் அன்றே பாஸ் தேவைக்காக அதிகாரிக ளுக்கு எழுதி விட்டார்.

தேவகி உடனே மூட்டை முடிச்சுகள் கட்ட ரம்பித்தாள். எல்லாப் பெரிய மனிதர் கிளேப் போல் சாம்பசிவம் பகலில் அரிசிச் சாப்பாடும், இரவில் கோதுமைச் சாதமும் சாப்பிடுவார். ஆகவே, அவருக்குத் தேவை யான சாமான்களை யெல்லாம் மறக்காமல் எடுத்துக் கொண்டாள்.

'நம் இரண்டு பேர்களுக்கா இவ்வளவு மூட்டைகள்? ஒய்லு வேண்டுமென்று கேட் ட்ாய். அங்கேயும் வந்து சமைக்கப் போகி ருயா என்ன? கிளப்பில்ே சாப்பிட்டுக் கொள்

கிறது....' என்றார் சாம்பசிவம்,

'அதெல்லாம் கூடாதுங்க. "ஸ்டவ்'

கொண்டு வருகிறேன். சமைக்கிறது ஒரு

வேலையா? ஒரு நிமிஷத்திலே முடிச்சுட

மாட்டேனு?"

தேவகி அந்தக் குடும்பத்தின் பொறுப் பைப் பெரிய மருமகள் வசந்தியிடம் ஒப்பு வித்து விட்டு யாத்திரை கிளம்பினுள். வீட்டிலே எல்லா வசதிகளையும் செய்து விட்டுத்தான்் புறப்பட்டாள்.

வசந்திக்கு அத்தனை பெரிய குடும்பத்தை நிர்வகித்துப் பழக்க்மில்லை. கல்லூரியிலிருந்து

கணவன் வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு எல்லாமே பிரமிப்பாக இருந்தன. மாடு கன்றுகள், பல்வேறு ணமுடைய மைத்

துனர்கள், வேளைக்கொரு பொய் பித்தலாட் டம் செய்யும் வேலைக்காரர்கள் இவர்களைக் கட்டி மேய்க்கும் பொறுப்பை அவள் கல்லூரி யிலே படிக்கவில்லை. படித்திருந்தால் புள்ளி விவரத்துட்ன் நடந்து ஒழுங்கை ஏற்படுத்தி யிருப்பாள்!

அன்றலர்ந்த மலர் போல் இருந்த மனேவி யின் முகம் வாடியிருப்பதைப் பார்த்த அவள் கணவனுக்கு உடனே தன் தாயின் மீது வருத் தம் ஏற்பட்டு விட்டது. வேறு ஒரு காரணமும் பிரமாதமாக இல்லை. நண்பர்கள் மூலம் வேறு விடு பர்த்துக் கொண்டு பெற்ருேர் வந்தவுடன் கிளம்பி விடுவது என்று காத்துக் கொண்டிருந்தான்்.

அவர்களும் யாத்திரையை முடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். குடும்பத்துக்கு மூத்த மகன் இப்படித் தனியாகப் பிரிந்து ப்ோவதைத் தேவகியால் தாங்க முடியவில்லை.

"பைத்தியம்! பைத்தியம்! உன் மகன் இன்னமுமா நீ தூளியில் போட்டுத் தாலாட் டிய குழந்தை அவனே இன்னும் இரண்

டொரு ஆண்டு க ளி ல் தகப்பன் ஆகி

விடுவான். என்னவோ தனியாக இருப்பதில் அவனுக்கு ஆசையாக இருக்கிறது. போகட் டும் விடு...' என்று சாம்பசிவம் மனைவிக்கு ஆறுதல் சொன்னர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மகன் மன்வியுடன் வந்து பெற்ருேருடன் விருந்து சாப்பிட்டு விட்டுப் போவான். இரவு சாப் பாட்டுக்கு வசந்தியிடம் தேவகி காரிய'ரில் சாப்பாடு கொடுத்து அனுப்புவாள். இதுவே

அ வ ளு க் கு நாளடைவில் பழக்கமாகி விட்டது.

இரண்டாவது மகனுக்குக் கல்யாணம்

ஆயிற்று. பெரிய மருமகள் ரொம்பப் படித் தவள். .அதனுல் குடும்பத்துடன் ஒட்டாமல் போய் விட்ட்ாள் என்கிற கருத்தில் இரண் டாவது மருமகள் நன்ருகப் பாடக் கூடிய பெண்ணுகத் தேர்ந்தெடுத்தாள் தேவகி.

அவள் திருமணமர்ன நாளிலிருந்து வெளி யூர்களில் கச்சேரி அது இது என்று போப் விட்டு வருவதற்கே சரியாக இருந்தது. மனைவி புகழில் தான்ும் பங்கு பெறக் கருதி அவள் கணவன் அவளுக்கு மேலும் புகழ் வளர என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதைக் கவனித்துக் கொண்டிருந்தான்்.

மருமகள் கச்சேரிக்குக் கிளம்புகிருள் என் ருல் மாமியார் முன்னதாகவே தவசுப்பிள்ளே விடம் பால் காய்ச்சச் சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேவகி கவலையுடன் சுவரில் சாய்ந்து உட் கார்ந்திருப்பதைச் சாம்பசிவம் ஒரு தடவை கவனித்து விட்டு, 'தேவகி ஏன் ஒருமாதிரி இருக்கிருய்?" என்று விசாரித்தார்.

'ஒரு மாதிரியுமில்லை. இரண்டு மாதிரியு மில்ல். எப்பொழுதும் போலத்தான்் இருக்

கிறேன். -அலுப்புடன் வந்த விடை இது.

"உன் தோற்றத்திலோ, அன்பிலோ நீ மாறி விடவில்லை. . என் கண்களுக்கு நீ எப் பொழுதும் போலத்தான்் இருக்கிருய் இருந் தாலும், உன் மனசில் ஏதோ குறை இருக் கிறது - என்றார் அவர்.

மனைவியின் கண்களில் மறுபடியும் கண்ணி ரைக் கண்டார் அவர்.

'இதோ பார் வடக்கே காசி வரையில் போகிலாமென்று பாஸ் போட்டிருக்கிறேன். கிளம்பு. அவரவர் பாடென்று விட்டு விட்டு நாம் பாட்டுக்குப் போய் விடுவோம் -

"கிளம்புகிறதா? நீங்கள் என்ன சொல் திறீர்கள்? சிவாவும், பாலனும் பரிசைக்குப் படித்துக் கொண்டிருக்கிருர்கள். இங்கே அந்தப் பிள்ளைகளைக் கவனிக்க யார் இருக் கிருர்கள்....?