பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

அளவற்ற பாபங்கள் செய்தவனே ஆண் டவன் சும்மர் விடுவான அப்பனே ? இப்படி என் அருகில் வா...' என்று அழைத்தார்.

சம்பந்தம் தயக்கத்துடன் அவர் அருகில் சென்று நின்ருன்.

நான் இன்னும் சில மணி நேரத்தில் இறந்து விடுவேன். அதன் பிறகு பரமசிவச் சர்மியாருக்கு இந்த ஏரிப்படுகை ஒரத்தில் அழகிய சமாதி ஒன்று கட்ட வேண்டும். கிராமத்தாரிடம் தெரிவித்தாயாகில் அவர் கள் அவ்சியம் முன்னின்று அதை நடத்தி வைப்ப்ார்கள். சம்ப ந் தம் திகைத்துப் போனன். ' தற்புகழ்ச்சியிலும், தன்னைப் பற் றிய விளம்பரத்திலும் நம்பிக்கை யில்லாத துறவியாகிய சாமியாரா இப்படிப் பேசு கிருர் ? அவன் தயங்குவதைப் பார்த்து, என்ன? ஒன்றும்_பேசமாட்டேன் என்கி ருய் பரமசிவச்சாமியாருக்குச் சமாதி கட்ட முயற்சி செய்வாயா, மாட்டாயா? " என்று மறுபடியும் அழுத்தமாகக் கேட்டார். ==

" உம்...... உ.ம்...... அப்படியே செய்து விட்டால் போயிற்று. நான் சொல்லித்தான் கிராமத்தார் செய்யப் போகிருர்கள்? கடந்த சில வருவடிங்களாக நீங்கள் கொஞ்சமாகவா அவர்களுக்குத் தொண்டுகள் புரிந்திருக்

கிறீர்கள்...? கட்டாயம் செய்வார்கள்...... † 1

எனக்கா சமாதி கட்டச் சொன்னேன்? பரமசிவத்துக்கல்லவா சொன்னேன்?"

பளிச் சென்று தேங்காய் உடைப்பது போல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அவர் பேசினர். சம்பந்தத்தின் மூளை குழம் பியது. மேலும் அவனைக் குழப்பாமல் சாமி யார் திணறியவாறு பேச ஆரம்பித்தார்.

"பல வருஷங்களுக்கு முன்பு பரமசிவச் சாமியார் சமூகத்தாலும், சட்டத்தாலும் வெறுக்கப்பட்ட கேவலம் ஒரு கொள்ளைக் காரனுக்காக அந்த ஏரிப்படுகை ஒரமாக உயிர் துறந்தார். நான்தான்் அந்தக் கொள்ளைக்காரக் கறுப்புச்சாமி... எனக்காக அவர் சாவதைப் பார்த்துக் கொண்டிருந் தேன். எப்படியாவது காப்பாத்துங்க சாமி என்று அற்பமான என் உயிரின் மீது ஆசை வைத்து அவர்- கால்களை நான் பிடித்துக் கொண்ட போது கண்களில் கருணை பொங்க அவர், அப்பனே! இனி மேல் கொள்ளையிடுவதில்லை என்று என்னி டம் சத்தியம் செய்து கொடு ' என்று கேட் டார். பிறகு நீ இங்குதான்் மறைந்திருந்து தப்பிச் செல். நான் வெளியே போகிறேன். போலீசாரிடம் பிடிபட்டால் நான் யாரென் கூறி, எப்படியாவது தப்பி வந்துவிடுவேன். ஆனால் நீ மட்டும் உன் வாக்கிலிருந்து இனி மேல் தவறக் கூடாது' என்று கூறிவிட்டுப் பரமசிவம் வெளியே சென்றார். தாடியும், திருநீறுமாக இருந்த அவரை நான் என்று

நினைத்துப் போலீசார் சுட்டுக் ஆசினர்.

கறுப்புச்சாமி செத்து ஒழிந்தான்் ஸ்ன்று நிம்மதியாக இருந்து விட்டனர்......"

சம்பந்தம் திறந்த வாய் மூடாமல், க்

சரியத்தால் கண்கள் மலர, கறுப்புச்சாமி கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்். மறுபடியும் பேசினுன் கறுப்புச்சாமி : " கறுப்புச்சாமி அன்றே செத்துத்தான்் போளுன். மனிதனுடைய துர்க்குணங்கள் செத்துப் போகும்போது அவன் மீண்டும் மறுபிறவி எடுத்த மாதிரிதான்ே? நான் என் உயிரின் மீது இருந்த ஆசையால் பரமசிவ மாக உலவி வந்தேன். ஆனால், நெஞ்சிலே களங்கத்துடன் உலகை விட்டுப் போக

எனக்கு விருப்பமில்லை. நான் செய்த அள

வற்ற பாவங்களுக்குப் பிராயசித்தமாக இந்த எண்ணத்தை உன்னிடம் தெரிவித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கூறிவிட் டேன்."

கறுப்புச்சாமியின் வாய் அதன்பிறகு பேசு வதை அடியோடு நிறுத்திவிட்டது. எண் ணங்களுக்கும் செயல்களுக்கும் அப்பாற் பட்ட ஓர் உலகத்துடன் அவன் தொடர்பு கொண்டவனுக இருந்தான்். பெருமூச்சாக இழைந்த மூச்சு சிறு மூச்சாக மாறி, அச வும் தேய்ந்து மறைந்தது.

事 # #

ஏரிப்படுகையின் ஓரத்தில் ஒரு சிறு சமாதிக் கோவில் பளிச் சென்று மின்னி யது. சாமியார் கோவிலுக்கு சனங்கள் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி வரம் கேட்டனர். சாமியார் வேடத்தில் இருந்த கறுப்புச்சாமிக்கும், பரமசிவச் சாமியாருக் கும் அவர்களுக்குப் பேதம் தெரியா விட்டா லும், அவர்களின் மரியாதை உண்மைத் தியாகத்துக்கு உரியதல்லவா? ஃ

அமுதசுர பி

For

சந்தா விபரம் ஆண்டுச்சந்தா (மலர் உட்பட) ரூ. 7.00 ஆறு மாதம்

HH (மலர் இன்றி) ரூ. 8.00

For

அ மு த சு ர பி , 20, சுங்குராம செட்டித் தெரு, செ ன் னே - 1 .

(மலர் உட்பட) ரூ. 4.00