பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளே அந்த நிறப் புடவையில் பார்ப்ப தற்குத்தான்் அவனுக்குப் பிடித்திருந்தது. வெளிர் நீல நிறப் புடவை, அதே கலரில் ரவிக்கை, வளையல்கள், பொட்டு, புஷ்பம் எல்லாமே. எல்லோரையும் போல அவள் கூந்தல இழைய வாரிக்கொள்வதில்லை; பின் னிக்கொள்வதில்லை. கழுத்துப் பிடறிக்குக் கீழ் கொஞ்சம்தான்் கூந்தல் வளர்ந்திருந்தது. ஸ்பிரிங் கற்றைகள் போல் நெளி நெளியாக இருந்த அதை அவள் வெளிர் நீல ரிப்பளுல் முடித்திருந்தாள்.

காவேயில் 9.05 மின் வண்டியில் தவருமல் அவளே அவன் பார்த்து வருகிருன். பெரிய இடத்துப் பெண்ணுக இருக்க வேண்டும். அளவோடு பேசி, அடக்கமாக அவள் சிரிப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. அவளும் அவனே ஒருவேளை கவனித்திருக்கலாம். ஒருநாளைப் போல் விரல் இடுக்கில் சிகரெட்டும் கையுமாக வெளிர் நீல ஷர்ட்டும், பேண்டும் அணிந்து கொண்டு பெண்கள் பெட்டிக்கு எதிராக நிற்பவன் அவள் பார்வையிலிருந்து தப்ப முடியாது. அவனேக் கண்டதும் அவள் ஒரு விதப் புன்னகையுடன் நெற்றியில் விழும் குழற் கற்றையை ஒதுக்கியவாறு வெளியே சாலையில் தெரியும் மரத்தைப் பார்ப்பாள்.

அதற்குள் ரயில் கிளம்பிவிடும். அவன் அவளேத் தொடர்ந்து செல்வதில்லே.

அவள் காலை நேரங்களில் சரியாக ஒன்பது மணிக்கு அவசரமாகப் பிளாட்பாரத்துக்குள் துழைவாள். அவனேக் கடந்து அவள் போகும் போது வீசும் அந்த மணம் சந்தன வாசனை? ஓ! அவள் சந்தனப் பவுடர்தான்் பூசுவாள் போலும் ஜாதி மல்லிகை சூடிக்கொள்வாள்.

ஒரு வினுடி அவன் உள்ளம் கிறங்கிப் போகும். இந்த வாசனையைக் காலம் கால மாக நுகர்ந்த நினைவுகள் அவன் உள்ளத்தில் கிளர்ந்தெழும். அதற்குள் 9.05 ரயில் வந்து விடும். அவள் அதில் ஏறி ஜன்னல் ஒரத்தில் உட்கார் வெளியே தெரியும் மரத்தில் தொற்றிக் கொண்டு கிசுகிசுக்கும் குருவிகளை வேடிக்கை பார்க்க ஆரம்பிப்பாள். ரயில் புறப்பட்டுப் போன பிறகு அவனுக்கு உன் கமே வெறுமையாகத் தோற்றம் அளிக்கும்.

மறுபடியும் மாலே நேரத்தில் 18.2.2 ரயிலில் தான்் அவள் திரும்புகிற வழக்கம். நாள் முழுதும் வேலை செய்து களைத்த தோற்றமே

இனப் பார்த்து, "ரோமியோ' என்று கத்தி

அவனிடம் இருப்பதில்லை. காலையில் சூடிக் கொண்டிருந்த மலர்கள் உலர்ந்து சருகள்க்த் தொங்காமல் புத்தம் புதிய மலர்கள் அவள் கூந்தலை அலங்கரிக்கும்.

திரும்பவும் அதே சந்தன வாசனை. மலர் களின் மனம். சில சமயங்களில் அவளுடன் இன்னுெரு பெண்ணும் பேசிக் கொண்டு வரு வாள். நல்ல கறுப்பு அவள் கண்களுக்குப் பட்டையாக மை தீட்டியிருப்பாள். பெரிய பெரிய பூப்போட்ட புடவை கட்டிக்கொண்டு கைப் பையை வீசியபடி ஒப்யாரமாக அவள் நடந்து வரும்போது இவள் குத்துவிளக்கு போல் குளுமையாக, அளவோடு சிரித்துப் பேசியபடியே வருவாள்.

"பெண்களில்தான்் எத்தனே வகை?' என்று நினைத்துக் கொள்வான் அவன். ஒரு நாள் மாலே இவர்கள் அவனைக் கடந்து போகும் போது அந்தக் கறுப்புப் பெண் உரக்க இவ

To قلعے