பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணுேமே !' என்று சொல்லிக் கொண்டே மிட்டாய்களைச் சாப்பிட்டாள் மைதிலி.

' கண்டதை யெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துப் பிள்ளைத்தாய்ச்சியின் உடம்பைக் கெடுக்கிறீர்களே !' என்று பார் வதி கோபித்துக் கொண்டாள்.

தில்லியிலிருந்து ராமச்சந்திரன் சீமந்தத் துக்கு முன்பாகவே வந்து விட்டான். அவன் வண்டியிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்ததும் கூடத்தில் நின்று கொண்டிருந்த மைதிவியைப் பார்த்துப்_ பிரமித்துப் போளுன், தில்லியில் மைதிலி இருந்தபோது மசக்கைத் தொந்தர வில்ை இளைத்துப் ப்ோயிருந்தாள். அதற்கு மாருக இப்பொழுது கொழுகொழுவென்று பருத்து, உடலில் வனப்பு மேலிட அவள் நின்றபோது அவன் மனத்தில் சந்தோஷம் பொங்கிப் பெருகியது.

சாப்பாட்டுக்கு அப்புறம் மாடியில் வரும் தனிமையில் பேசிக் ,,? தார்கள். பட்டுப்போன்ற அவளது கரங் களைத் தொட்டு அதில் அணிந்திருந்த வளையல் ளப் பார்த்தான்் ராமச்சந்திரன். விரல்களில் இட்டிருந்த மருதாணிச் சிவப்பும் க்ண்ணுடி வளையல்களின் பல வர்ணங்களும் அந்த மென் கரங்களுக்கு அப்படி ஒரு அழகை அளித்தன.

'ஹாம். . அப்புறம் என்ன விஷயம் ? இது தான்் வளைகாப்பு வளையல்கள்ா? பேஷாக இருக்கிறதே? நான் அனுப்பிய வளையல்கள் எங்கே மைதிலி?' என்று கேட்டான் அவன். மைதிலி தன்னுடைய மற்றொரு கரத்தைத் துாக்கி அவன் சையுடன் அனுப்பிய வளை பல்களைக் காண்பித்தாள்.

"சரி உனக்குச்சிம்ந்தத்துக்கு என்ன வாங்கி வந்திருக்கிறேன் த்ெரியும்ா? என்று கேட் டான் ராமச்சந்திரன்.

"ஆமாம்! எனக்குத் தெரியாதாக்கும்! தூத் பேடாவும் ஹல்விர்வும் வாங்கி வந்திருப் பீர்கள் !" என்ருள் மைதிலி.

அவன் எழுந்து அறைக்குள் சென்று பெட் டியைத் திறந்து ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வந்தான்். அதனுள் அழகிய பட்டுப் புடவை ஒன்று இருந்தது. ஆகாச வர்ணத்தில் ஜரிகையில் நகத்திரங்கள் போட்ட அந்தப்

நிலவொளியில் -

புடவை தக' தக' வென்று மின்னியது.

அடேயப்பா ! என்ன விலை ?' என்று

கேட்டாள் மைதிலி மகிழ்ச்சி பொங்க.

' நூற்றைம்பது ரூபாய் !...' இப்படி, கணவனும் பெற்ருேரும் அன்பைச் சொரிந்து வந்தார்கள் ம்ைதிவியின் பேரில்.

சீமந்தம் விமரிசையாக நடந்தது. மாலை யில் மைதிலியை மனையில் உட்காரவைத் துப் பாடினர்கள். அவள் கணவன் அன்புடன் வாங்கி வந்த நீலப் புடவையை உடுத்திக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்த காட்சி தெய்வலோக மங்கையொருத்தி அலங்கிருதை யாக வீற்றிருப்பது போல இருந்தது. மஞ்சள் குங்குமத்துக்கு வந்திருந்த பெண்களே, " அப்பா ! என்ன அழகு இப்படியும் ஒரு பெண்ணுக்கு அழகு வருமா ? நல்லபடியாகப் பெற்றுப் பிழைக்க வேண்டுமே !' என்று பேசிக் கொண்டார்கள்.

மைதிலியின் தாய் பார்வதிக்கு மட்டும் மனத்துள் சுரீர் என்று ஏதோ வேதனை

செய்து கொண்டிருந்தது. ராமச்சந்திரன் சீமந்தம் ஆனபிறகு இரண்டு தினங்களில் ஊருக்குப் புறப்பட்டான். மனைவிக்கு அவனே விட்டுப் பிரியவே மனமில்லை.

" மனசிலே ஏதோ சங்கடம் செய்கிறது. வீவு போட்டு விட்டுப் பிரசவத்தின் போது என்னுடனேயே வந்து தங்கி விடுங்கள்' என்று கேட்டுக் கொண்டாள் மைதிலி. அவ ளுடைய சுந்தர வதனத்தில் துக்கம் பரவி யிருந்தது. கண்களிலிருந்து கண்ணிர்த்துளிகள் உருண்டு ராமச்சந்திரனின் கரங்களே நனைத் தன. அவன் கைகளை எடுத்துக் கண்களை மூடிக் கொண்டு விசித்தாள் மைதிவி.

பிரசவம் என்றால் பயப்பட வேண்டிய காலம் எல்லாம் போய் விட்டது. நம் பாட்டி கள் காலத்தைப் போல இந்தக் காலத்தில் பிரசவத்தில் கோளாறுகள் ஏற்பட்டு, ஆபத் தில் முடிவதில்லை. தைரியமாக இரு ' என்று தேற்றினுன் ராமச்சந்திரன்.

எல்லோரும் தெய்வத்தை நம்பியிருந்தார் கள். நாள் தவருமல் நல்ல வைத்திய ரிடம் உடம்பைக் காண்பித்து ஜாக்கிரதை யுடன்தான்் மைதிலி இருந்து வந்தாள்.

Yk

தெய்வத்தின் சித்தம் வேருக இருந்தது. அவள் வழக்கமாக உடம்பைக் காண்பித்து வரும் வைத்தியர் ஊருக்குப் போய்விட்டார். அவர் வெளியூர் சென்றிருந்த சமயம் மைதி விக்கு உடம்பு சரியில்லை. அவசரத்துக்கென்று புது வைத்தியரைத் தேடிப் போளுர்கள். அந்த வைத்திய விடுதியில் சேர்த்து, விடுதியின் லேடி டாக்டர் குலாப் வந்து பார்க்க நேர மாகி விட்டது. அதற்குள் காலன் அவசரப் பட்டு வந்து விட்டான். பிரசவித்து இரண்டு மணி நேரத்துக்கெல்லாம், உடம்பெல்லாம் நீலமாக விஷம் பரவி அண்மையில் நின்று தவிக்கும் பெற்ருேரையும் தங்கச் சிலபோல் அப்ப்ொழுதுதான்் உலகத்துக்கு வந்திருக்கும் பச்சிளங் குழந்தையையும் தவிக்க விட்டு மைதிலி கண்ணே மூடிவிட்டாள்.

அவள் தாய்மை அடைந்து பிறந்தகம் வந்ததிலிருந்து மனத்திலே வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்த பார்வதி அம்மாள் எரிமலை வெடிப்பது போல் துக்கத்தால் குமுறிஞள். கல்லினும் கடினமாக அவள் தந்தை அசையாமல் உட்கார்ந்து விட்டார். தில்லியிலிருந்து விமானத்தில் பறந்து வந்த கணவன் தல்ை உடைந்து போகிற மாதிரி துக்கத்தினுல் அலறின்ை.

அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கைக் காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும் அது அவ்வளவு உறுதிப்பட்டு இருந்தது என்பது அவனுடைய எல்லே கடந்த துயரைப பார்த்தே அறிந்துகொள்ள முடிந்தது. -

எல்லாம் முடிந்து விட்டது என்று ஒவ் வொருவருட்ைய மனமும் தீர்ப்புச் சொல்லி விட்டது போல் அவரவர்களுடைய வேலே யைப் ப்ார்த்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டர்ர்கள்.

பட்ாக்டர் குலாப் ஒரு ஆள் மூலம் தன் னுடைய விடுதியில் குழந்தை-அவர்களுடைய பேத்தி - இருப்பதாக அறிவித்தாள்.